Wednesday, May 19, 2004

வெங்கடேஷின் நேசமுடன்

வெங்கடேஷ்சின் நேசமுடன் கருத்துத் தொகுப்பு படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
அவர் பலவித சிக்கலான அரசியல் , சமூகப் பிரச்சனைகளை தெளிவாக அலசல்
செய்து நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்கி வருகின்றார்

இது வரவேற்கத்தக்கது.

தமிழ் வலைப்பதிவுகள் (பிளாக்ஸ்) அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது

பெரும்பாலானவை வெளிநாட்டிலுள்ள தமிழர்களால்தான் அமைக்கப்பட்டு வருகிறது

இவைகளையெல்லாம் தமிழ் நாட்டினர் படிக்கிறார்களா?

இண்டி ராம்

Tuesday, May 18, 2004

தற்கொலை செய்யாதே விசுவாசத் தமிழா!

தற்கொலை செய்யாதீர்

தமிழ் நாட்டு ஏழை காங்கிரஸ் தொண்டர்களுக்கு

ஒரே ஒரு வேண்டுகோள்

உங்களது தலைவர் சோனியா காந்தி பிரதம மந்திரிப் பதவியை தான்

ஏற்காமல், தகுதி மிக்க மன்மோகன் சிங்குக்கு கொடுங்கள்

என்று அன்புடன் கோரியதை கேட்டு துயரப்பட்டு

தயவு செய்து விஷம் குடித்தோ அல்லது மற்ற வகைகளிலோ

உயிர்நீக்கி தமிழனின் மானத்தை (வழக்கம் போல்) எடுத்து

உங்கள் விசுவாசத்தை பறை சாற்றாமல் இருங்கள்.

திரு மூப்பனாருக்கு மந்திரி பதவி அளிக்காமல்

அவரை அவமதித்துவிட்டார்கள் என்று வருத்தப்பட்டு துயரமடைந்து ஒரு தமிழ் தொண்டர்

தற்கொலை செய்ததை நான் படித்திருந்ததால் தான்

இந்த வேண்டு கோள்

இண்டி ராம்

தமிழில் வலைப் பதிவு செய்வதுஎப்படி?

யூனிகோட் தமிழ் வலைப் பூ


நண்பர்களே

இந்த யுனிகோடின் தமிழாக்கம் ஒருங்குறி

முதல் முதலில் கேட்பதற்கு புதுசா இருக்கும் .

போகப் போக பழக்கமாயிடும்

நீங்களும் உங்களுடைய வலைப்பூ (blog) ஆரம்பிக்கலாம்

உங்களிடம் xp கணினியும் ஏகலப்பை 2.0 ம் இருக்கணும்

www.blooger.com போய் உங்களது நுழைவுப் பெயர்

கடவுச் சொல் எழுதுங்கள்

பிறகு உங்களது வலைப்பூப் பெயரையும் எழுதுங்கள்

பிறகு உங்களது வலைப்பூ ஆரம்பித்தபின்

டெம்பிளேட்டை தேர்வு செய்யுங்கள்

செட்டிங்கில் யூனிகோட் தேர்வு செய்யுங்கள்

அவ்வளவுதான்

அப்புறம் உங்கள் போஸ்டிங்க் ஆரம்பிச்சுடலாம்

இண்டி ராம்