Saturday, June 25, 2005

தற்கொலையால் தான் கொலையால் அல்ல

தற்காலத்தில்

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபுகள்
நாகரிகம்

ஆகியவை
தற்கொலையால் இறக்கின்றன , ஆம், கொலையால் அல்ல.
ஆர்னால்ட் டாயின்பீ (சரித்திர வல்லுனர்)

தற்கொலையால் என்றால் மேற்கூறியவைகளுக்கு உரிமையாளர்கள் தாங்களாகவே அழிவுக்கு வழிவகுக்கின்றனர் மற்றவர்களால் (பூச்சாண்டிக்காரர்கள் ..ஹிந்திக்காரர்கள், மத்திய அரசு)
அவைகள் வலுக்கட்டாயமாக அழிக்கப்படுவதில்லை.

இண்டர்நெட், சாட்டிலைட் டிவி, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்து கணிசமாகச் சம்பளம் பெறுவது, புதுத்துறைகளில் சம்பாத்தியம் ஈட்டுவது ஆகியவைகளால் ஆங்கில வழிக் கல்வியால் தான் வயிற்றை கழுவமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.

ஏன், தமிழகத்திலேயே வேலை பெறுவதற்கு
ஆங்கில ஆளுமை தேவையாகிவிட்டது. தேர்தல் காலங்களில்
மக்களின் உணர்ச்சி, ஆவேசம், வெறுப்பு தூண்டுவதற்கே அரசியல்வாதிகளால் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது.

எலோரும் கேட்பதற்கும் கூப்பிடுவதற்கும் எளிதாக இருக்கவேன்டும் என்பதற்காக பழங்காலத் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளாமல் இரண்டு சிலபிள் பெயர்களை (வடக்கிந்திய) வைத்துக் கொள்கிறார்கள்.
தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் மரபு எல்லாம் மலையேறிவிட்டது.
கால் சென்டரில் வேலை செய்பவர்கள் தங்களை அமெரிக்க அல்லது ஆங்கிலேய முதற் பெயரைவைத்துக் கூறிக்கொள்கிறார்கள்.
சில இடங்களில் அவர்களுக்கு அமெரிக்கா செல்லாமலேயே அமெரிக்கர்கள்
மாதிரி எப்படி பேச்சாடல் செய்வது சிந்திப்பது போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான்
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

இக்காலத்தில் தமிழகத்தினர் உலகமெங்கும் (குறிப்பாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்கு சென்றுவருகிறார்கள்)
சேட்டிலைட் டீவிமூலம் அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய நிறுவனங்களெல்லாம் மாமான் மச்சானை நம்பியே வேறு மாநிலங்களுக்கு விஸ்தாரம் செய்யாமல்
ஊருக்குளேயே இருந்து வந்தனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள்
உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று உள்ளூர் ஆட்களையே வைத்து
(மாமான் மச்சான் , சாதிக்காரன் இல்லாமல்) திறம்பட விஸ்தரித்து வருகின்றன.

அதன் நுணுக்கங்களை நம் நாட்டு எம் பீ ஏக்களுக்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு சொல்லிக்கொடுத்து பயன்படுத்தத் தெரியாது.
இன்னும் சில வருடங்களில் இந்தியாமுழுவதும் வியாபித்துவரும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும். ஆகவே இந்தியரகள் எங்குபோனாலும் (இந்தியாவில்கூட)
அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக்கொள்ள பழக்கப் படுத்திகொள்வர். (கோக்கா கோலா, பெப்சி,பாச்கின் ராபின், கென்டக்கி சிக்கன், மக்டானல்ட், பீசாஹட், டாம்பான், டாய்லட் டிஷ்யூ,
ஜீன்ஸ், அலங்கரிப்பு பொருட்கள் இத்யாதி இத்யாதி...

தொன்று தொட்டு இருந்த சித்திரை விழாவை மார்க்கெட்டிங்க் பண்ணாமல்
காதலர் தினத்தையும் , அண்ணையர் தினத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.
வெளிநாட்டி டிவி ஷோக்களையெல்லாம் ( ரியாலிட்டி ஷோ ) நமதாக்கி வருகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக நமது அங்கங்களான, அடையாளமான

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபு
நாகரிகம்
ஆகியவற்றை நாமே , வேறொருவரின் வலியுறுத்தல், பயமுறுத்தல் இல்லாமலேயே வெட்டித்தூக்கி எறிந்து விடுவோம்.

இது தமிழினத்தை மட்டுமல்ல , மற்ற இந்தியர்களையும் , மற்றநாட்டினர்களையும் பாதித்துவருகிறது.

இதையெல்லாம் உணரமுடிகிறது. ஆனால் தெரிந்தும் விளக்கைத்தேடி பறந்தோடி இறக்கும் புற்றீசல் பூச்சிகள்மாதிரி பறக்கிறோம்.

நல்ல சம்பாத்தியம் பெற்று சௌகரியமாக வாழவேண்டும் என்கிற எண்ணமே
நமது தற்கொலைக்கு காரணம்.

இண்டி ராம்

தமிழ்த் தந்திவசதி கைவிடப்படுகிறது

தமிழில் தந்தி செலுத்தும் வசதி
பயனிப்பார்கள் இல்லாததால், கைவிடப்படும் என்ற
தகவல் கேட்டு சில தமிழ் அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள்
ஆனால் நான் இந்த விஷயத்தில் வேறுவித கருத்துகளைக்கொண்டுள்ளேன்.

தமிழ் தந்தி சேவை என்ன
எல்லா தந்தி சேவைகளுக்கும் முழுக்கு போடவேண்டிய காலம் வந்து விட்டது, என்கிற உண்மையை நாம் எல்லோரும் உணரவேண்டும், அன்பு நண்பர்களே.

இந்த காலத்தில் எல்லா இடங்களிலும் செல்போனும், எஸ்டிடி பூத்தும் ஈமெயிலும் வந்துவிட்டபோது பழங்கால தொழில்நுட்ப துரிதத்தகவல் பரிமாற்றும் சேவை தேவைதானா என்று நாம் கேட்கவேண்டும்.

ஒரு காலத்தில் டெலிபோன் வசதி எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை.
மேலும் புயல் கியல் அடித்தால் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டெலகிராப் வசதியினால் உடனேயே தகவல் தெரிவிக்கமுடிந்தது, ஒருவித துண்டிப்பில்லாமல் இக்காலத்தில் 20 மில்லியன் (2 கோடி) நில (land line ...still in India we have land line penetration of 2/100 people only)
தொலைபேசிகள் இருந்தாலும் செல்போன்கள் (60 மில்லியன் + 2 மில்லியன்/மாதம் உயர்வு) அதிகமாகவும் இருப்பதால்
துக்க , திருமண வாழ்த்துக்களை துரிதமாக பிறருக்கு இவ்வசதிகள் மூலம் அறிவிக்கமுடிகிறது.

மேலும் தந்தி வசதி எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை.
ஆகவே யாராவது அந்த இடத்திற்கு சென்று தகவல் கொடுக்கவேண்டும்.
எல்லா ஊர்களிலும் யாரிடமாவது செல்போன் வசதியுள்ளதால் தகவலை மற்றவர்களுக்கு தெரிவிப்பது எளிதாகிவிட்டது.

இக்காலத்தில் நாமெல்லோரும் காலத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு
வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அஞ்சவும் வேண்டாம்.

They say in information technology, you can't depend on "yesterday's skill set"
you have to keep on adopting newer skill set. otherwise we will become a dodo bird.

முன்பெல்லாம்

நிறுவனங்களெல்லாம்

தங்களது அடையாள அட்டைகளில்

முகவரி
டெலிபோன்
டெலகிராப்
டெலக்ஸ்
ஆகிய தொடர்பு வசதிகளை அச்சிட்டிருந்தார்கள்

ஆனால்
இக்காலத்தில்
முகவரி
டெலிபோன்·
பேக்ஸ்
ஈமெயில்
இணைய முகவரி
ஆகியவற்றை (டெலகிராப் இல்லாமல்) தான் அச்சிடுகிறார்கள்.

இங்கிலாந்துகாரன்

நமக்கு டெலிபோன் டெலகிராப் டிபார்ட்மெண்ட் என்று வைத்துக்கொடுத்தான்.
ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்கள் மாத்திரம் டெலகிராப் வசதியை தூக்கி எறிந்துவிட்டு ராயல் மெயில் மட்டும் வைத்துக்கொண்டுள்ளார்கள்.

நாம் மாத்திரம் சுயமா சிந்திக்கத்தெரியாம அவன் கொடுத்ததேயே வைத்துக்கொண்டு மாரடிக்கிறோம்.

டெலகிராப் தமிழா, ஆங்கிலாமா, ஹிந்தி யா இதெல்லாம் இக்காலத்திற்கு தேவைதானா என்று நான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

சும்மா உணர்ச்சியாலேயே சிந்தித்து பழைய குப்பையை வைத்துக்கொண்டு அதை விட்டுவிட மனசில்லாமல் எவ்வளவு காலம் வாழ்வது?

ஒருகாலத்தில் wester union என்கிற நிறுவனம் டெலகிராப் சர்வீஸ் வைத்து வயிறை கழுவிக்கொண்டு இருந்தது.
ஆனால் அதற்கு டிமாண்ட் குறைய ஆரம்பித்தது
அதை அப்படியே விட்டுவிட்டு இக்காலத் தேவையான பணப் பங்கீடு சேவைக்குத்தாவவிட்டார்களே!

உலகத்தார்களெல்லாம் ஸ்டெனோ என்கிற சேவையை விட்டுவிட்டார்கள்
(பத்துடாலர்க்கு நமது சிந்தனைகளை பிரத்யேகமாக பதியவைக்கும் கருவிகள் கிடைக்கின்றன)

ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னும் சில இடங்களில் ஸ்டெனோகிராபி பள்ளிகள் உள்ளன.

சில விதங்களில் நாம் மாறிவருகிறோம் , சிலவிதங்களில் நாம் மாறத் தயங்குகிறோம் ஏன்?

மனு ஸ்மிரித்தியில்

பிராமணர்கள் என்றால் அந்த ஜாதி அடையாளமாக குடுமி வைக்கணும் னா?
இக்காலத்தில் குடுமி வைத்தவர்கள் எங்கே போயிட்டார்கள். கோயில் பட்டர்கள் கூட குடுமிவைப்பதில்லை?

காலத்திற்கேற்றவாறு மக்கள் மாறிவருகிறார்கள்.

உதாரணமாக

வெளிநாடுகளில் வாழும், வேலை பார்க்கும் தமிழகப் பெண்மணிகள் எல்லாம்
குங்குமத்தையும் , பூவைப்பதையும், தாலி அணிவதையும் விட்டுவிடுகிறார்களல்லவா?

தமிழக ஆண்கள் என்றால் வேட்டி, துண்டு, தலைப்பாகை அணியனும்னாங்க
ஆனால் இக்காலத் தமிழகத்தில் கிராமத்தினரைத்தவிர (திருமணகாலகட்டத்தை தவிர) எல்லோரும் பேண்டும் ஸ்லாக் ஷர்ட் தானே
அணிகிறாங்க (மக்களை கவரவிரும்பும் அரசியல்வாதிகள் தவிர).

சினிமாவில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் எவ்வளவு தடவை வேட்டி அணிகிறார்கள் ?

நடுத்தர வயது பெண்மணிகள் தவிர மற்ற தமிழக இளைஞிகள் எல்லாம் சௌகரியமான உடையான சால்வார்தானே அணிகின்றார்கள்?

காலத்திற்கேற்றவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்
வள்ளுவன் ஏதாவது ஒரு குறளில் இந்த கருத்தை சொல்லியுள்ளாரா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்

நாம் போகி என்ற பொங்கல் நாளில்
பழையன கழிதலும் புதியன புகுதலும் செய்கிறோமல்லவா
ஆகவே தமிழ் தந்தியும், ஏன் எல்லா தந்தியும் போனால் நான் வருத்தப்படமாட்டேன்.

இதெல்லாம் போகவேண்டிய காலம் வந்துவிட்டது

போஸ் அண்ட் டெலகிராப் டிபார்ட்மெண்ட் போய் போஸ்டல் அண்ட் இண்டர்நெட் சர்விசஸ் டிபார்ட்மெண்டா உருமாறணும்

இதைநாமே சிந்தித்து செய்யணுமா அல்லது வெள்ளைக்காரன் நம்க்கு செய்து காட்டணுமா?

நண்பர் ஹூஸ்டன் கணேசன் கூறியுள்ள மாதிரி ஈமெயில் இன்டர்நெட் சேவையை வைத்து நிறைய வேலைவாய்ப்பு வசதிகளை
உருவாக்கலாம். வேண்டியது சுயமாக சிந்தித்து புத்துபுது சேவைகளை அறிமுகப்படுதி மார்க்கெட்டிங்க் செய்ய சிந்திக்கும் தொழில்முனைப்புசக்தி தான் (entrepreneurship).

இண்டி ராம்

Friday, June 10, 2005

படித்த தமிழர்களின் கையில் ஆங்கிலமும் தமிழும்

பார்த்திருக்கீங்களா

பல கல்லூரி படித்த தமிழர்களால் ஆங்கிலத்தில் சரளமாகஎழுத முடிகிறது.
ஆனால் அவர்களால் அவ்வளவு கடகட வென்று தமிழில்எழுத முடியவில்லை. அதுஏன்?

ஆங்கில மொழியில் பலவித நுணுக்க, துல்லிய விஷய்ங்களை வெளிப்படுத்த
பலவித வார்த்தைகள் உள்ளன.

ஒரு காலத்தில் தமிழில் ஒரே பொருளை குறிப்பதற்கு
பலவித வார்த்தைகள் இருந்தன உதாரணம் மலைஎன்பதற்கு
40 வார்த்தைகள் இருந்தன. ஆனால் பெரும்பாலான வார்த்தைகள்
வழக்கொழிந்துவிட்டன.

தற்சமயத்தில் (50 களிலிருந்து) நமது வாழ்க்கை முறை
மேலை நாட்டினர்களின் வாழ்க்கையப் போல் மாறிவிட்டது.இண்டர்நெட்,
கேபிள் டிவீ, மேலை நாட்டுப் பயனம் வந்த பிறகு நமது
சிந்தனைகளும் மேலைநாட்டினரது மாதிரி ஆகிவிட்டது
இதைஎல்லாம் வெளிப்படுத்த தமிழ் மொழியில் வார்த்தைகள்
இன்னும் உருவாக்கப்படவில்லை. உருவாக்க முயற்சித்தாலும்
அது சாத்தியமில்லை. மக்களும் புதிதாக இயக்கப்பட்ட தமிழ்
வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார்கள்.

மேலும் பெரும்பாலான மத்திய தர, மேல்தர, அரசியல்வாதிகளின்
குழந்தைகள்எல்லாம் ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே
படிக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் இருந்தகாலத்தில் ஆங்கிலம் இவ்வளவு
முக்கியமாகத் தென்படவில்லை. திருச்சி மாவட்டத்தில்
50 60 களில் இரண்டே இரண்டு கான்வெண்ட் ஸ்கூல்கள் தான்
இப்போது எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் முளைத்துவிட்டன.

பலருக்கு ஆங்கிலத்தில் தங்களது கருத்துக்களை சொந்தமாகஎழுதப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் அவ்வாறுஎழுதப் பயிற்சி அளிப்பது இல்லை.

கொஞ்சம் தமிழ்எழுதத் தெரிந்தவர்கள் ஹாய்யா கவிதை, சிறுகதைஎழுதி
தமது தமிழ்எழுத்துத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்ஓருவரும்
தேவையான அறிவை தமிழில் படைப்பதில்லை

ஆகவே தமிழ் வெறும் அன்றாட கீழ்மட்ட பேச்சுக்காகவும் அரசியல் மாயாஜாலத்திற்குமே பயன்படுத்தப்படுகிறது.. ஆம் பொழுதுபோக்கு
பட்டிமன்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கில வார்த்தைகள்எல்லாம் வேர் அடிப்படையில் உருவாக்கப்படுவதால்
பலவித வார்த்தை இலக்கணக் கூறுகள்எல்லாம்எல்லோருக்கும் எளிதாகப் புரிகிறது பயன்படுத்த முடிகிறது. பல இந்தியர்களால் ஆங்கிலத்தை லகுவாகக் கையாள முடிகிறது.

ஆங்கிலத்தில்எதிர்மறை வார்த்தைகளைஎளிதில் உருவாக்கலாம்.
அக்ரோநிம்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகிறது
ஏன், தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் எல்லா அக்ரோநிம்களெல்லாம்
ஆங்கில வார்த்தைகளே. தமிழே கிடையாது. உதாரணமாக
சீஎம்,எம்பி,எம்எல்ஏ, டி ஐ ஜி, டிவி, போன்ற, ஆயிரக்கணக்கானவை.
பின் குறிப்பு (பிகு) அதைத் தவிர ஒரு அக்ரோநிம்கூட கிடையாது

ஒரு படித்த தமிழரால்எந்த தலைப்பிலும் ஒரு கட்டுரையை
ஆங்கிலத்தில் உடனேயேஎழுத முடிகிறது ஆனால் தமிழில்எழுத சிரமப்படுகிறார்கள். அதே மாதிரி பேசுவதிலும் ஆங்கிலம் தான்
சரளமாக வருகிறது. இந்த போக்கு தமிழை மட்டுமல்ல மற்ற எல்லா இந்திய மொழிகளையும் வெகுவாகப் பாதிக்கிறது (ஆம் இந்திக்காரர்கள் கூட தம் குழந்தைகள் ஹிங்கிலீஷ் பேசுவதைக் கேட்டு வருத்தப்படுகிறார்கள்)

ஏழை மக்கள், கிராமத்தினரைத் தவிர மற்ற எல்லோரும் ஆங்கிலத்திற்கு
தாவி விட்டார்கள்.

இது அநியாயம், சுய நலமான செயல். இதைஎல்லாம் உணர்ந்து
அரசு தனது பள்ளியில்ஏழை மாணாக்கர்களுக்கும் ஆங்கிலவழி
கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். சீனாவில் அப்படித்தான் இப்போது
செய்கிறார்கள். ஆங்கில மொழிஎல்லோருக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது சீனாவில்.

தற்காலத்தில் மொழிகள் சோர்வடைந்து அழிவதன் காரணம் அம்மொழி பேசுபவர்கள் உள்ளத்தில், மற்றொரு மொழி (ஆங்கிலம்) தன் மொழியை விட வளமானது, வேலை செய்யப் பயன்படும், பலவித அறிவை கொண்டுள்ளதுஎன்ற நம்பிக்கை மேலோங்கிவிடுவதால். யாரும் வற்புறுத்தாமல் அவர்களே
தாங்களும் தங்கள் குழந்த்தைகளும் அம்மொழியை கற்காமலும் பேசாமலும் பயன்படுத்தாமலும் விட்டுவிடுவதால். இந்திய மொழிகள் அந்த வழியிலேயே செல்லுகின்றன .

இதற்கு காரணங்கள்

மெட்ரிகுலேஷன் பள்ளி இண்டர்நெட், கேபிள் டிவி, தக்வல் தொழில் நுட்ப வளர்ச்சி, மேலை நாட்டு பயணம், மேலை நாடு சார்ந்த வேலை வாய்ப்பு, ஆங்கில அறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள். வலிமை வாய்ந்த ஆங்கிலம்.
சுதேசி மொழி வளர்ச்சி அடையாமை (வெறும் பத்திரிகைகள், வலைப்பதிவு, வலை இதழ்கள், சஞ்சிகைகள் வளர்ச்சி மட்டும் மொழியை வளப்படுத்திவிடாது).


இண்டி ராம்

தமிழர்களிடம் தமிழில் பேசத் தயங்குகிறேன்.ஏன்?

எல்லோரும் சொல்கிறார்கள்
"தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்" என்று

ஆனால் பல சமயங்களில் நான் தமிழில் பேசத்தயங்குகிறேன்
ஏன்?
என்னிடம் யாராவது ஜாதியைப் பற்றி பேசினால் கடுப்படைவேன்

ஆங்கிலத்தில் பேசினால் அந்த பிரச்சனையில்லை
ஆனால் தமிழில் யாராவது 5 வார்த்தைகள் சொன்னால்
அவரது ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் அல்லது
அதை பேசுபவர் தெரிந்தோ,தெரியாமலோ தெரிவித்துவிடுவார்.

இது மாதிரி மற்ற இந்திய மொழியைப் பேசுபவர்கள்
ஒருவர் பேசும் மொழிப் பாணியிலிருந்து அவரது ஜாதியை
கண்டுபிடிக்கமுடியுமா. மற்ற மொழியையும் தெரிந்தவர்கள்
எனக்குத் தெரிவிக்கவும்.

இரண்டாவது

மற்ற இந்திய மொழிகள் மாதிரி, தமிழிலும் ஏற்றத் தாழ்வு
வெளிப்பாடு உள்ளது. உதாரணமாக வாஎன்ற வினைச்சொல்

வா, வாடா, வாங்க, வாம்மா, வாய்யா, வாப்பா,வாங்க சார் வாங்க,வாங்க மேடம்

தமிழ் (மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுக்கும்) கற்பவர்களுக்கு,
குழந்தைகளுக்கு (குழந்தைகள் இந்திய மொழி பேசத் தயங்குவதற்கு
இது ஒரு காரணமும் கூட)இது பெரிய பிரச்சனை.

யார் யாரிடம்எப்படி பேசவேண்டும்என்றறிவது சிரமமானது .
இந்திய மொழிகள் பணிவன்பு காட்டுவதில்லை (courtesy)
ஆனால்ஏற்றத் தாழ்வு வெளீப்படுத்துகின்றன.

ஆங்கிலத்தில்
பேசினால் இந்த பிரச்சனை கிடையாது
எல்லோரிடம் come here என்றே சொல்லலாம்.

மூன்றாவது

பலவித விஷயங்களைப் பேசும்போது நிறைய ஆங்கில
வார்த்தைகளை தமிழில் கலக்கவேண்டிய அவசியம் உள்ளது

ஆகவே

தமிழர்களிடம் எப்போதும் தமிழில் பேசுங்கள்
என்ற அறிவுரை கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்
நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன

இண்டி ராம்

Thursday, June 09, 2005

பெருத்தல், மோட்டா, பெருச்சாளி, பன்னி

தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குண்டானவர்கள் தொகை
அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணங்கள்

1. உடலை உலுக்காமல் இருப்பது
2. சத்தான உணவு சாப்பிடுவது
3. மாவு, கொழுப்பு சத்து நிரம்பிய உணவு அதிகமாகச் சாப்பிடுவது
4. குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் டுயூஷன் போவது,
கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, இண்டர்நெட்டில்உலாவுவது
டிவிடி பார்ப்பது, அபார்ட்மெண்டில் வசிப்பது

ஆகிய சில

ஒருத்தர் எவ்வளவு பெருத்து விட்டார் என்றுஎப்படி கணிப்பது

ஒருத்தரின்எடையை (பவுண்டில்) உயரத்தின் (இஞ்சுகளில்) ஸ்குயரால் வகுத்து அதை 705 ல் பெருக்கினால் ஒருவரின் body mass index கணக்கிடலாம்

BMI= wt in pounds/(height in inches)2 *705


அது 25க்கு குறைவாக இருந்தால் சாதாரணமான எடை

25-29 மோட்டா
30-34 குண்டு
35-39 பெருச்சாளி
>40 பன்னியாயிடுவது

அமெரிக்காவில எழை மக்களில் பெரும்பாலோர்

பெருச்சாளி, பன்னியாயிடுகிறார்கள்

ஆனால் இந்தியாவில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள்
சினிமாக்காரர்கள் ஆகியோர்தான் மோட்டாவாகிவிடுகிறார்கள்

நடுத்தர வர்க்கத்திலுள்ள பல மாணாக்கர்கள் மோட்டா அல்லது
குண்டாகிவிடுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு நாம் நமது உணவு தயாரிப்பதிலும்
சாப்பிடுவதையும், மாற்றங்கள் செய்யவேண்டும்

அதே மாதிரி திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை
தவிர்க்கவேண்டும். தெருமூலையில் நின்று கொண்டு
சும்மா காற்று வாங்குவதைவிடவேண்டும்.

நாம் வாயில் போடும் எல்லா ஐட்டங்களின் கலோரியையும்
கணக்கில் கொள்ளவேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது எடையை அளவெடுக்கவேண்டும்

இண்டி ராம்

புதிய தமிழாசிரியர்கள், தமிழ்ப் படிப்பு தேவை

தற்காலத்திற்கு தேவையானது புதிய தமிழ் ஆசிரியர்கள்
புதிய் தமிழ்ப் படிப்பு.

தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழை கணினியில் எப்படி எழுதுவதுஎன்று
தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கு மற்றொரு மொழி, குறிப்பாக
ஆங்கிலமும் பரிச்சயமாகி இருக்கவேண்டும். இன்னொரு மொழி
தாமே கற்றால் தான் இவர்களுக்கு ஒரு மொழியினை
பிறருக்கு கற்பிப்பது எப்படி என்பது தெளிவாக புலப்படும்.

தமிழ் என்றால் வெறும் திருக்குறள், கம்பராமாயணம், எல்லாம்
செய்யுள் வடிவத்தில் இருக்கவேன்டும் என்ற எண்ணம் போகவேண்டும்
இந்த ஆசிரியர்களுக்கு வேர் அடிப்படையில் எப்படி புது தமிழ்
வார்த்தைகளை உருவாக்குவது என்கிற பயிற்சி அளிக்கவேண்டும்

தமிழ் கல்வியில் உரைநடை இலக்கியங்கள் தான் வீட்டுப்பாடமாக
இருக்கவேன்டும். அதுவும் 60, 70 களுக்கு பின் இயக்கப்பட்ட
நூல்களையே பாட நூல்களாகக் கொடுக்கவேண்டும்


தமிழ் மாணாக்கர்கள், உரை நடையில் தங்களது எண்ணங்களையும்
சிந்தனைகளையும் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்த
பயிற்சி அளிக்கவேண்டும்.

பழங்கால தமிழ் இலக்கியங்களை புரட்டி புரட்டி ஆராய்ச்சி செய்து
காலத்தை விரயப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்


இண்டி ராம்

Monday, June 06, 2005

ஐந்து இந்து மத நம்பிக்கைகள்

யார் ஒருவர் இந்து மதத்தினர்?


அவரது நம்பிக்கைகள் என்ன?

அப்படின்னு ஒரு நன்றாகப் படித்த தமிழ் இந்துவை கேட்டால்

அவர் என்ன சொல்லுவார் என்று நினைக்கிறீர்கள்

"சார் நான் இந்து மதத்தைப் பற்றி படித்ததில்லை"

நீங்கள் ஏதாவது ஒரு மடாதிபதியிடம் தான் கேட்கவேண்டும்"

என்று இகி காண்பித்து சொல்லுவார்கள்.

இன்னும் சிலரை கேட்டீர்களானால் அவர்கள் தங்களுக்கு

தெரிந்ததை சொல்லுவார்கள். பத்து இந்துக்களைக் கேட்டால்

அவர்கள் பத்து வித பதிலை கொடுப்பார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தைப் பற்றி

ஒரே பதில் தான் கொடுப்பார்கள்.

அதெப்படி இவர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தைப் பற்றி


தெளிவாக பதிலளிக்கிறார்கள் ஆனால் தமது இந்து மதத்தைப்

பற்றி தமது அறியமைய எளிதில் காட்டிக் கொள்கிறார்கள்


என்று நான் சிந்தித்ததுண்டு.


இன்னும் வேறு மாநில இந்துக்களைக் கேட்டால் அவர்கள்

வேறு வித பதில் அளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்டுதான் ஒருவர் சொன்னார்

யார் இந்துஎன்று உங்களுக்கு தெரிந்துகொள்ளவேண்டுமா?

"இந்துஎன்பவர் ஒரு இந்தியர் ஆனால் அவர் கிறித்துவ,இஸ்லாமிய,
சீக், பௌன, ஜெயின் மதத்தை சாராதவர். அவ்வளவுதான்"

நான் (இண்டி ராம்) ஓர் இந்து

என்னைப் பொறுத்தவரை

ஓர் இந்து என்பவர் (காஷ்மீரைச் சேர்ந்தவரானாலும் சரி

போபாலைச் சேர்ந்தவரானாலும் சரி, கன்னியா குமரியைச்

சேர்ந்தவரானாலும் சரி" அவர் நம்புவது


1. கடவுள் உருவமில்லாதவராகவும் இருக்கலாம்
அல்லது பலவித பெயர்களையும், தோற்றவங்களையும் கொண்டவராக
இருக்கலாம்.கடவுள்எங்கும் உள்ளார். கடவுள் நம்முள்ளும் உள்ளார்.

2. வினைப்பலனில் நம்பிக்கை உள்ளவர்.

அதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும்

கெட்டது செய்தால் தனக்கு கெட்டது நடக்கும்.

இப்போதாவதோ எப்போதாவதோ அது நடக்கும்.

3.இறப்புக்கு பின் பிறப்பு நிச்சயம். பிறந்தால் இறக்கவேண்டும்.

நமது ஆன்மீக குறிக்கோள் பிறவாமை என்ற நிலமையை அடைவது.

பலருக்கு அது கிடைக்காது. சில மகான்கள் அந்த் ஆன்மீகத் தேடலில்

வெற்றி பெறலாம்.

4. நல்லதை (தர்மம்) கடைபிடிக்கவேண்டும். கெட்டதை

தவிர்க்கவேண்டும்.

5. தமது கடமையை நல்லபடியாகச் செய்யவேண்டும்


எந்த ஒரு இந்துவை மேற்கூறிய 5 நம்பிக்கைகளை

பெரும்பாலான இந்துக்கள் கொண்ட்டுள்ளானாரா என்று

கேட்டால் ஆமாம் என்பர்.

என்னிடம் யாராவது இந்துமத நம்பிக்கைகளைக் கேட்டால்

மேற்கூறிவற்றைதான் தயக்கமில்லாமல் சொல்லி வருகிறேன்.


இண்டி ராம்

மாணாக்கர்கள் தற்கொலை, வரதட்சணை பரவுதல், வளருதல்

இந்தியாவிலும் தமிழகத்திலும்
எல்லோரும் நம்புவது,விரும்புவது
தங்களது குழந்தை
டாக்டர்
இஞ்சினீர் (அதுவும் கணினி சம்பந்தமானப் பிரிவுகள்தான்)
சாப்ட்வேர்
என்கிற மூன்று துறைகளில் வேலை செய்தால்தான்
மூன்று வேளை சாப்பிடவும் மற்றும் நிரந்தரமான வேலை செய்வதற்கும்
முடியும் என்பது.

ஆனால் கிட்டதட்ட 3% குழந்தைகளால்தான் இந்தத் துறைகளில்
படிப்பும் பயிற்சியும் எடுக்கமுடிகிறது. 97% குழந்தைகளுக்கு அது சாத்தியம் இல்லை.

ஆகவே எல்லோரும் தங்கள் குழந்தைகளை இந்த மூன்று துறைகளில் தான்
படிக்கவைக்க விரும்புகிறார்கள். மற்ற எந்த துறையும் உபயோகமில்லாதது என்று நம்புகிறார்கள்.

இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தேவையானது

தண்ணீர் மேளான்மை, தண்ணீர் சேர்த்தல், தரையடி தண்ணீர் மேளான்மை.

ஆனால் இந்தமாதிரித் துறைகளில் யாரும் படிப்பதில்லை.

30 , 40 வருடங்களுக்கு முன் இப்போதுள்ள மாதிரி எல்லா தர மக்களூம்
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதில்லை
ஆகவே இப்பொது காம்படிஷன் ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாகிவிட்டது
பார்வர்ட், பாக்வார்ட், மோஸ்ட் பேக்வரட், செட்யூல்ட்காஸ்ட்

எல்லா மாணவர்களும்
இப்போது சகஜமாக 90% மேல் மார்க் வாங்குகிறார்கள்
என்னை கேட்டால் 90% மேல் மார்க் வாங்கினால் 90 என்றால் என்ன 99 என்றால் என்ன?

அவர்கள் எல்லாம் நல்லா படிக்கும் குழந்தைகள்தான்
ஆனால் இவ்வளவு குழந்தைகள் இருக்கையில் சிலரைதான் தேர்ந்தெடுக்கமுடிகிறது.

ஆகவே எல்லோரும் 95% மார்க் மேல் வாங்க முயற்சிக்கிறார்கள்
ஆனால் 91% வாங்கினால் அம்பேல்தான்
தற்காலப் பெற்றோர்கள் மழைப்பள்ளியில் இருக்கையிலேயே தங்கள் குழந்தைகளை
இந்த துறைகளுக்கு தான் படிக்கச் சொல்கிறார்கள். அவர்களது மூளை
எல்லாம் இதே எண்ணத்தில் சலவை செய்யப்படுகிறது.

உலகத்திலேயே இந்தியா (தமிழகம்)வில் தான் எல்லா மழலைப் பள்ளி
குழந்தைகளும் "நான் பெரியவனானவுடன் (பெரியவாளனவுடன்) டாக்டர் ஆக விரும்புகிறேன்"என்று கோரஸ் போடுவார்கள்.

மற்ற நாடுகளில் பல துறைகளில் வேலை செய்தால்
நல்ல சம்பாத்தியம் பெறமுடியும். ஆகவே
வெளிநாட்டிலுள்ள பல டாப் ரேன்கிங்க் குழந்தைகள் (மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்)
தங்களுக்கு விருப்பமான
துறையில் தான் வேலை செய்யவிரும்புகிறார்கள்.

தமிழகத்தில் தங்களது குழந்தை 95% வாங்காமல் 91% மார்க்மாத்திரம் வாங்கினால்
அவன் உபயோகமில்லாதவன் என்று சொல்லாமல் உணரவைத்து
தங்களது குழந்தையை தற்கொலை செய்ய தமிழகப் பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்.

பெண்களைப் பெற்ற எல்ல பெற்றோர்களும் தங்களது
மகள்களை இந்த மூன்று துறை வரண்களுக்கே கொடுக்க விரும்புவதால்
வரதட்சணை விலை ஏறி வருகிறது.

இதற்கெல்லாம் தீர்வு மற்ற நாடுகளிலுள்ள மாதிரி பெரும்பாலான வேலை
செய்தால் சாதாரணமான (வாழ்க்கைக்குத் தேவையான) சம்பாத்தியம்
பெறவைக்கும் பொருளாதார வளர்ச்சி தான்.

அது நடக்க பலவருடங்களாகும்
அது நடக்கும் வரை இம்மாதிரி தற்கொலை வரதட்சணைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.
இண்டி ராம்

தகவல் சேகரிக்கும் உத்திகள் வளரவேண்டும்

தென் இந்திய புரோகிராமர்கள், கணினியியல் வல்லுனர்கள் இல்லாமல்
சர்வதேச தகவல் தொழில் நுட்பத்துறை ஓடாது என்று நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.
ஆமாம் யாராவது நமக்குத் தகவலை சேகரித்துக் கொடுத்தால்
நம்மால் அதை இப்படி அப்படி என்று புரட்டி அடித்து ஒழுங்கு பண்ணி கொடுக்க சரக்கு உள்ளது.
ஆனால் நம்மிடம் தகவல்களை சேகரிக்கும் உத்திதான் இல்லை என்பது கண்கூடு
எந்த விஷயத்தை எடுத்தாலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நுண்ணிய தகவல் பெறுவது கடினம்
உதாரணமாக
தமிழகத்தில் எத்தனை டாக்டர்கள் உள்ளனர்?
எத்தனை நர்சிம் ஹோம்கள் உள்ளன
அவைகளில் எவ்வளவு படுக்கைகள் உள்ளன?
எத்தனை ஆரம்ப, நடுநிலை, உய்ரநிலை, மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன?
அவைகளில் எத்தனை தமிழ் வழிக் கல்விநிலையங்கள், எத்தனை மெட்ரிக் பள்ளிகள்.
கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன?
எத்தனை தமிழ் வழிக் கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன
அரசியல் வாதிகளின் குழந்தைகள், பேரன்கள் எந்த பள்ளிகளுக்கு போகின்றனர்?
நடுத்தர மக்களில் , முதல் கிளாஸ் ஆபீசர்களில் எவ்வளவு விகிதாச்சாரத்தினர்
தம் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்/
தற்காலத் தமிழகத்தில் நடுத்தர வசதிகளுடன் வாழவேண்டுமானால் மாதத்திற்கு எவ்வளவு
சம்பளம் பெறவேண்டும்?
எவ்வளவு விகிதாச்சாரத்தினர் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர்?
இது மாதிரி ஆயிரக்கணக்கான தகவல்களை (சரியான தகவலை) எங்கிருந்தும்
பெறமுடியாது
காரணம்
தகவல் சேகரிக்கும் உத்தி வளரவில்லை.

மேலும் மக்களின் அன்றாடப் பேச்சில் எண்களும் விகிதாச்சாரமும் வாயில் வருவதில்லை
இப்போதுதான் கல்லூரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல் சேகரிப்பதில்
அக்கறை காட்டுகின்றனர். இது புது முயற்சியாதலால் இதில் குறைபாடுகள் இருக்கலாம்
மேலை நாடுகளில் மார்க்கெடிங்க் கம்பெனிகளும் அரசு துரைகளும் இதில் கண்ணாக உள்ளனர்
இந்தியாவில் கடந்த 20 வருடங்கள் வரை எல்லா பண்டங்களும் ஏகோதிபத்தியாமாக இருந்ததால்
மார்கெடிங்க் பண்ண வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது
இப்போகூட பாருங்கள் இந்தியாவைப் பற்றிய தகவலைப் பெற நாம் யு என் ஏஜன்சிகளையும்
சி ஐ ஏயும், சி என் என் ஐயும் நாடவேண்டியிருக்கிறது. இந்திய வரலாற்றுத் தகவல்களை
வெள்ளைக்காரர்கள் தயாரித்துக் கொடுத்தனர்.
பழங்காலத் தகவல்களுக்கு நாம் சீன, கிரீக் வழிப்போக்கர்களின் குறிப்புகளை
வைத்து தானே ஊகீக்க முடிந்தது?
சென்னையில் வரும் 5 நாட்கள் தட்பவெட்பநிலை அறியவேண்டுமானால்
சி என் என் வெப் சைடில்தான் பார்க்கமுடிகிறது
இந்தியாவில் உள்ள ஊரிகளின் தெரு மேப் பார்க்கவேணுமானால்
கூகிள் அல்லது மேப் குவெஸ்ட் தான் போகவேண்டியிருக்கும்
தமிழ் நாட்டில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் எவ்வாறு டிவோர்ஸ் நடக்கிறது
கிராமத்தினர் டிவோர்ஸ் பண்ணுவதே யில்லையா?
ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் ஹெச் ஐ வி, எய்ட்ஸ் வியாதி மெற்றுள்ளனர்?
அதை எப்படி நுணுக்கமாக கண்டறிவது
அரசியல்வாதிகள் வெளிநாட்டினர், அந்த எண்ணிக்கையை மிகைப்படுத்துகின்றனர்
என்கிறார்கள். ஆனால் அரசு அந்த தொகையை நிர்ணயிக்க எவ்வாறு முயற்சிக்கிறது?
நாம் யாராவது தகவல் தந்தால் அதை ஒழுக்குபடுத்துகிறோம்
அதை அலசல் செய்கிறோம் (பல ஸ்டாடிஸ்டிசியன்கள் இந்தியர்கள்)
ஆனால் நம்பகரமான தகவலை சேகரிப்பதில் தான் கவணம் செலுத்துவதில்லை
இண்டி ராம்

கௌரவ டாக்டர் பட்டத்தை டம்பம் அடித்தல்

தமிழ் நாட்டில் ஒரு வினோத மனப்பான்மையுள்ளது
அதாவது பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களது கௌரவ டாக்டர்
பட்டத்தை அடைமொழியாக்கிக்கொண்டு பெருமிதம் அடைவது.
பெரும்பாலான பல்கலைக்கழங்கள் அரசியல்வாதிகளை
காக்காபிடித்து பணம்புடுங்க அவர்களுக்கு கௌரவ டாக்டர்
பட்டம் அளிப்பதுஎல்லோருக்கும் தெரிந்த ரகசியம்
அதேமாதிரி பிரபலங்களிடமிருந்து பணம் கறக்க அவர்களுக்கும்
பட்டம் வாரி வழங்குவர்


இது (டம்பம் அடித்துக்கொள்வது) மேலை நாடுகளில் நடப்பதே இல்லை
ஏன் தமிழ் நாடு தவிர மற்ற இந்திய மாநிலங்களிலும் இம்மாதிரிச் செயல் நடைமுறையில் இல்லை
(லல்லு பிரசாத் கூட தன்னை மாண்புமிகு டாக்டர் லல்லு பிரசாத்ஜீ என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை)
நாம் அடிக்கடி பூங்குண்றனாரின் "யாதும் ஊரே யாரும் கேளீரை" ப் பற்றி
எழுதுகிறோம். அதன் முதல்வரிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்
ஆனால் அதன் கடைசி இரண்டு வரிகள்தான் முக்கியமானவை.

ஆனால் அவைகள், பலருக்குத் தெரியாது.
அவைகளைத் தான் தமிழர்கள் கடைபிடிப்பதில்லை. சிந்திப்பதுமில்லை
தலைவர்கள் அவற்றை மேற்கோள் காட்டி தொண்டர்களுக்கு அறிவுரைப்பதில்லை.

அந்த வரிகளின் சாராம்சம் கீழே.....

பிரபலமானவர்களை (அரசியலாலோ, சினிமாவினாலோ, பதவியாலோ) ஆகோ ஓகோ என்று
தலையில் வைத்து ஆடாதே
அதே சமயம் எளியவர்களை (கிராமத்தினரை, படிக்காதவர்களை, கீழ் ஜாதியினரை (எவ்வளவு வயசானாலும்)
எள்ளி நகையாடாதே (பிரபலங்களெல்லாம் சினிமாவில் கிராமத்தானை
கிண்டல் பண்ணுவார்கள்)

என்று அறவுரைக்கின்றார் பூங்குன்றனார். (கி மு 300)
சிந்திக்கவேண்டிய வரிகள்.

இண்டி ராம்

ஈமெயிலின் மகிமை

ஈமயிலின் மகிமை
எங்கோ படித்தது ஞாபகம்
மடலாடற் குழுக்கள் ஒரு தகவல் கருத்துப் பரிமாற்றக் குழுவாக இருப்பதே நல்லது
இந்த மாதிரிக்குழுக்களில்
ஒருவரின்

பால்

(gender)

படிப்பு

(doctor, PhD)

பதவி

Director, Professor

வயது

Never claim experience or wisdom on the basis of age alone

ஜாதி

Definitely not

வாழுமிடம்

If it adds to the argument

பிறந்த இடம்

If needed

செய்யும் தொழில்

include it if it counts , otherwise omit

ஆகியவை
தெரியாமலும்
தெரிவிக்காமலும்
இருப்பது சாலச் சிறந்தது
இந்த மாதிரி குழுக்களில்
பரிமாற்றப்படும் கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது
ஒரவரின் கருத்தை அவர் தரும் கருத்தைக் கொண்டுதான் அளவிடவேண்டும்,
மறுமொழி, பின்னூட்டல் செய்யவேண்டும்
அவரைப் பற்றிய மற்ற தகவல்கள் அவர் தரும் கருத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
இதை கருத்தில் கொள்வோமானால்
சிக்னேசர் (signature where in you let your title , address know) கூட இணைக்காமல் இருப்பது நல்லது.
(ஒருவரின் பாலை (gender) நாம் அறியத்தராத வேளையில் அவரின் கருத்தை நாம் வேறுவிதமாக அளப்போம்)
ஒருவரை ஒருவர் நண்பர் அல்லது நண்பி என்றோ அல்லது திரு அல்லது திருமதி என்றோ
அடைமொழியுடன் அழைப்பது தான் சரி என்று நினைக்கிறேன்.
நம்மில் சிலர் மருத்துவராகவும் பலர் பிஹெச் டி பெற்றவர்களாகவும் உள்ளனர்
இருந்தபோதும் அவர்களை நண்பர் என்றே அழைப்பது
வரவேற்கத்தக்கது.
இண்டி ராம்

Friday, June 03, 2005

லட்ச கோடி எண்ணளவுகளை கடாசவேண்டும்

லட்சம் கோடி போன்ற எண்ணளவுகளை (units of counting)
நாம் கைவிடவேண்டும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
நூறு லட்சம் ஒரு கோடியாகவும்
நூறு கோடி வேறு ஏதாவதாகவும்
நூறு ஏதாவது எண்ணளவு வேறான எண்ணளவாகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் கடந்த ஆயிரமாண்டுகளில் எந்த ஒரு அளவையும் கோடிக்குமேல் சொல்லாமல்
இருப்பதால் அந்த கோடிக்கதிகமன எண்ணளவுகளெல்லாம் புழக்கத்திலிருந்து அழிந்துவிட்டன.
தற்சமயத்தில் லட்சம் கோடிக்கப்புறம்
நூறு கோடி ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி என்றாகி
இப்போது மத்திய அரசின் பட்ஜெட் எல்லாம் யாருக்கும் புரியாத
திரும்பி சொல்ல கஷ்டமான லட்ச கோடி என்ற எண்ணளவுகளை பயன்படுத்துகிறோம்.

உலகத்தில் இரண்டு மூன்று நாடுகளைத்தவிர
மற்றவையெல்லாம்
ஒவ்வொரு மூன்று எண் இடங்களுக்கு ஒரு
எண்ணளவை பயன்படுத்தி எண்ணளவுகளை சொல்வதற்கும்
எழுதுவதற்கும் வசதிப் படுத்தியுள்ளன.

ஆயிரம் 1000
மில்லியன் 1,000,000
பில்லியன் 1,000,000,000
கூவாட்ரில்லியன் 1,000,000,000,000
பென்டில்லியன் 1,000,000,000,000,000

இப்போது
அமெரிக்க பட்ஜெட் 2.3 டிரில்லியன் டாலர்என்று சொல்லுவதற்கு எளிதாக உள்ளது.
அதையே இரண்டு லட்சத்து முப்பதாயிரம் கோடி டாலர் என்று சொன்னால்
சொல்வதற்கும் கேட்பதற்கும் புரிவதற்கும் சிரமமாக இருக்கிறதல்லவா?

அப்புறம் 100 டிரில்லியன் ஆகிவிட்டால்
அது தத்துவாய்காரன் சொல்லுவது மாதிரி கோடிகோடியாகிவிடும்
இந்திய மத்திய அரசு கோடிவைத்து அழுகட்டும், தமிழ் நாடாவது
இந்த லட்சம் கோடி எண்ணளவுகளை கடாசிவிட்டு
மற்ற உலக நாடுகள் செய்வது மாதிரி
மில்லியன் பில்லியன் போன்ற புரிவதற்கும், சொல்லுவதற்கும், எளிதான
எண்ணளவுகளைப் பயன்படுத்தட்டும்.

இன்னொரு குழப்பம் அளிக்கும் விஷயம் என்னவென்றால்
இந்திய அரசு மற்ற இந்திய நிறுவனங்களெல்லாம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
லட்சம் , கோடி மில்லியன் பில்லியன் எல்லாத்தையும்
ஒரே பத்தியில் எழுத்தில் பிரயோகித்து வாசகர்களை குழப்பத்தில்
ஊறவைத்து பிழிந்து எடுக்கிறார்கள்.

உணவு உற்பத்தியெல்லாம் மெட்ரிக் மில்லியன் டன்தான்
மின்சார உற்பத்தி மெகாவாட் (மில்லியன் வாட்)
வீம்புக்காக லட்சம் கோடியவைத்துக்கொண்டு வாசகர்களை
குழப்பத்தில் ஊறவைக்கிறோம்.

இதை ஏன் தலையங்க எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்கிறார்கள்
என்பது எனக்குப் புரியவில்லை.

இந்த கோடிதான் அதிக எண்ணளவு என்பது எனக்குப்புரிவதற்கு கடினமாக
உள்ளது. மேலும் கோடி, மில்லியன் , பில்லியன் எண்ணளவுகளை
கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்துவது இன்னும் குழப்பத்தை
அதிகரிக்கிறது. பல சஞ்சிகைகளில் பாருங்கள் எல்லா எண்ணளவுகளையும்
கண்ட கண்ட இடங்களில் கலந்து எழுதுகிறார்கள்.

ஆகவே அதன் பிரயோகத்தை கூடி சீக்கிரம் நாம் விட்டுவிடவேண்டும்
நமது பலவித பாரம்பரிய அளவு முறைகளை நாம்
உலகத்தோடு சேர்ந்து கடாசிவிட்டோம் அல்லவா?

(அரையனா, காலனா, பவுன், உலக்கை, படி போன்ற அளவுகள் எங்கே போயின?)
அதே மாதிரி லட்சம் கோடியை விட்டுவிட்டால் வரும் தலைமுறையினரின்
வாழ்கையாவது சுலபமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
இண்டி ராம்

தமிழ்ப் பெயர்கள் எங்கே ஓடிப்போய்விட்டன?

சமீபத்தில் சில உறவினர்களின் குடும்பத்தில்
குழந்தைகள் பிறந்ததாகக் கேள்விப்பட்டேன்
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து
பிறகு குழந்தைகளின் பெயர்களைக்கேட்டேன்
புதிய தமிழகக் குழந்தைகளின் பெயர்கள்

ரிஷாவ்
வல்லப்
ராகாவ்
ரோஷினி
மதுமீதா
கீரன்
சுதிர்
சுனில்

இது விதிவிலக்கா
அல்லது பெரும்பாலான தமிழகக் குடும்பங்களில் இந்த (வடக்கத்திய பெயர் சூட்டும்) டிரெண்ட் வளர்ந்துவருகிறதா?
சீனிவாசன்
ராமசாமி
சுப்பரமணியன்
கணபதிபார்வதி
சரஸ்வதி
கணேசன்
ராஜன்
சுசீலா

போன்ற பெயர்கள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன?

இண்டி

ஏழுத இயலாமை விரக்தியடையவைக்கிறது

நினைத்ததைசிந்திக்கத் தெரிந்த எல்லா விஷயங்களைப் பற்றியும்எனது தாய் மொழியில் எழுத இயலாமையை உணர்ந்துவிரக்தியடைகிறேன், கடுப்படைகிறேன்.
பல மேற்படிப்பு படித்த தமிழர்கள் மாதிரிஎன்னால் எந்த தலைப்பிலும் ஆங்கிலத்தில்ஒரே நொடியில் நினைத்தவுடன் கடகடவென்றுஎழுதமுடிகிறது.
ஆனால் அவற்றை தமிழில் எழுத முயற்சிக்கும் போதுஅதுவும் தற்கால விஷயங்களை எழுதும் போதுஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்வார்த்தைகள் எனது மனதின் பிடிப்புக்குஎட்டாமல் இருப்பதை நினைத்து கடுப்படைகிறேன்
உதாரணமாக
டிஏக்கு (TA)ஆர் ஏக்கு (RA)
அதாவது டீச்சிங்க் அசிஸ்டன்ட் உதவி விரிவுரையாளர்உதவி ஆராய்ச்சியாளர்
ஸ்டைபண்ட்
கல்வி உதவித் தொகை
கேரியர் (career) ?வேலைத்துறை? அப்படி என்றுஎழுதினால் தமிழர்களுக்குத் என்ன எழுதவிரும்புகிறேன் என்றுதெரியுமா
இது மாதிரி எனது மனதில்ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பற்றி தமிழில்எழுதவேண்டும் என்ற ஆசையிருக்குஆனால் பல தற்கால விஷயங்களைப் பற்றிஎழுத நினைக்கையில் பல தமிழ் வார்த்தைகளைஎப்படியாவது சமாளிச்சு எழுத வேண்டிய அத்தியாவசியத்தை நினைத்துசும்மா இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இல்லாட்டி ஆகா ஓகோ என்று திருக்குறளைப்பற்றியநவீண கருத்துரை எழுதலாம் என்றே தோன்றுகிறது.
எல்சிடி பிளாஸ்மா ஸ்கிரீன்,யுஎஸ்பி டிரைவ்,ஐபாட்,வைபை, குளோனிங், இன்விட்ரோ கருத்தரிப்பு, எரக்டைல் டிஸ்பங்ஷன்டிஜிட்டல் போட்டோகிராபிவிசி (venture capital), entrepreneurship,enterprise software,video game, wi-fi,just in time purchasing, whistle blower,marketing, market economy,high resolution, pictue in picture,storage technologycourier post,digital projection,barbecuing, archiving, scanningtransparency in work place,adjustable mortgage,desalinization technology,hybrid engine..
போன்ற
பலவித தற்காலத்தேவைக்குதவக்குறிய அறிவைதமிழில் எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில்என்னால் எழுத முடியவில்லையேஎன்பதை உணர்ந்து விரக்தியடைகிறேன்
தமிழில் தற்கால அறிவை பரப்பமுடியுமாபகிர்ந்துகொள்ள முடியுமா?அவ்வாறு செய்தால் பல தமிழர்கள்அதைப் புரிந்து பயன்படுத்துவார்களா?என ஐயப்பாடு என்னுள் எழுகிறது

இண்டி ராம்

அமெரிக்காவைவிட இந்தியாவில் வாய்ப்புகள் அதிகமாம்!

http://news.bbc.co.uk/2/hi/business/4603765.stm

சமீபத்தில் பிபிசி தளத்தில் வெளிவந்த
திடுக்கிடவைக்கும் செய்தியைப் பற்றி
என் எண்ணங்கள்

நமது மனக் கண்களை திறக்கவைக்கும்,
சிந்தனையை தூண்டவைக்கும் செய்திதான்
எனது உறவினரின் பையன் இந்தியாவில் பள்ளி இறுதி முடித்து
பொறியியல் கல்லூரி படிக்க ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா போய்
மேற்படிப்பு படித்து அங்கேயே தான் வாழவேண்டும்
என்று ஒத்தக்காலில் நின்று பைத்தியமாக இருந்து வருகிறான்
தற்சமயத்தில் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கையில்
முன்பிருந்தமாதிரி டிஏ ஆர் ஏ ஸ்காலர்ஷிப் டுயூஷன் வெய்வர் எல்லாம்
மாஸ்டர்ஸ் பையனகளுக்கு கொடுப்பதில்லை.
ஆகவே அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள்
தங்களது சுய பொருளாதார வசதியை நம்பிதான்
மேற்படிப்பு படிக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
எல்லா சிலிகான் வேலி கம்பெனிகள் எல்லாம்
இந்தியாவிலேயே கிளைகள் ஆரம்பித்து
அங்குள்ளவர்களையே வேலைக்கமைத்து வேலையை நடத்துகின்றனர்
ஆகவே பொறியியலாளர்களுக்கு (ஐடி சம்பந்தமான வர்களுக்கு)
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அரிதாகி வருகிறது.
அப்படியே கிடைத்தாலும் நிறுவனத்தார் நிரந்தர விசா ஸ்பான்ஸார் பண்ண மறுக்கிறார்கள்
இந்த விஷயம் தமிழ் நாட்டு மாணாக்கர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பரவலாக
தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.
மேலும் இதைப் பற்றி தமிழ் பேப்பர்கள்
எழுதுகின்றனவா? பழங்கால நினைவுகளையே நம்பாமல்
தற்கால, வருங்கால நிலமையை ஊகித்து நமது வேலை வழிப்போக்கை (கேரியர்)
நடத்திக்கொள்ளவேண்டும்
இண்டி ராம்

Monday, May 30, 2005

தமிழில் எழுத விரும்புகிறீர்களா?

Those who are interested

ஆர்வலர்கள்

your views reflect mine

உங்களது கருத்துக்கள் எமது கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன

I like to see your feedbacks

உங்களது பின்னூட்டலை பார்க்க விரும்புகிறேன்

please let me have your response

உங்களது மறுமொழி அளியுங்கள்

widely Kown

பரவலாக அறியப்பட்டவர்

Friday, May 27, 2005

தமிழில் எழுத விரும்புகிறீர்களா? (2)

தமிழில்எப்படி எழுதலாம்

பல தமிழர்களுக்கு தமிழில் எழுதிப் பழக்கம் இல்லை

கல்லூரி படித்த பல தமிழர்கள் நன்றாக ஆங்கிலத்தில எழுதுகிறார்கள்

ஆனால் அவர்களால் தமிழில் நாலு சிந்தனைகள எழுத முடியவில்லை.

நான் ஒரு பெரியஎழுத்தாளன் அல்ல

இருந்தாலும் எனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள

விரும்புகிறேன்

share = பகிர்ந்து

contribute = பங்களித்தல்


உங்கள் பங்களிப்புஎன்ன?

what is your contribution

participate

பங்குகொள், கொடுத்தல், கலந்துகொள்


re-examine= மறு பரிசீலனை

இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்யலாமா

re-define = மறு வரையறை

காலாவட்டத்தில் நாம் அதை மறுவரையறை செய்யவேண்டும்

many items are appearing on the web now

பல அம்சங்கள் இணையத்தில் உலாவரத் தொடங்கிவிட்டன

don't lose this opportunity

இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிடாதே

இண்டி