Thursday, June 09, 2005

புதிய தமிழாசிரியர்கள், தமிழ்ப் படிப்பு தேவை

தற்காலத்திற்கு தேவையானது புதிய தமிழ் ஆசிரியர்கள்
புதிய் தமிழ்ப் படிப்பு.

தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழை கணினியில் எப்படி எழுதுவதுஎன்று
தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கு மற்றொரு மொழி, குறிப்பாக
ஆங்கிலமும் பரிச்சயமாகி இருக்கவேண்டும். இன்னொரு மொழி
தாமே கற்றால் தான் இவர்களுக்கு ஒரு மொழியினை
பிறருக்கு கற்பிப்பது எப்படி என்பது தெளிவாக புலப்படும்.

தமிழ் என்றால் வெறும் திருக்குறள், கம்பராமாயணம், எல்லாம்
செய்யுள் வடிவத்தில் இருக்கவேன்டும் என்ற எண்ணம் போகவேண்டும்
இந்த ஆசிரியர்களுக்கு வேர் அடிப்படையில் எப்படி புது தமிழ்
வார்த்தைகளை உருவாக்குவது என்கிற பயிற்சி அளிக்கவேண்டும்

தமிழ் கல்வியில் உரைநடை இலக்கியங்கள் தான் வீட்டுப்பாடமாக
இருக்கவேன்டும். அதுவும் 60, 70 களுக்கு பின் இயக்கப்பட்ட
நூல்களையே பாட நூல்களாகக் கொடுக்கவேண்டும்


தமிழ் மாணாக்கர்கள், உரை நடையில் தங்களது எண்ணங்களையும்
சிந்தனைகளையும் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்த
பயிற்சி அளிக்கவேண்டும்.

பழங்கால தமிழ் இலக்கியங்களை புரட்டி புரட்டி ஆராய்ச்சி செய்து
காலத்தை விரயப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்


இண்டி ராம்

2 comments:

இராதாகிருஷ்ணன் said...

நீங்க இப்படிச் சொல்றீங்க, இங்க பாருங்க http://parasu.blogspot.com/2005/06/blog-post_09.html

//பழங்கால தமிழ் இலக்கியங்களை புரட்டி புரட்டி ஆராய்ச்சி செய்து
காலத்தை விரயப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்// போதுமய்யா இதுவரை செய்த ஆராய்ச்சிகளெல்லாம்.

ram said...

தாங்கள் தெரிவித்திருந்த சுட்டிக்கு
சென்று அன்னாரின் அனுபவத்தைப்
படித்தேன். அது முழுக்க முழுக்க உணமை.

அரசுப் பள்ளிகளுக்கு செல்லவேண்டிய கட்டாயத்தினால்,ஏழை மக்களும் கிராமத்தினரும் தான் ஆங்கில வழிப் பயன்பெறாமல் அவதிப்படுவதைக் கண்டு வருத்தமடைகிறேன்.

இது அநியாயம் தான். அரசுப்பள்ளிகளும்
தேவையை உணர்ந்து மேற்கூறிய வர்க்கத்தினருக்கும் புதிய , சம்பளமிகுந்த வேலை பெற தேவையான ஆங்கில அறிவை அளிக்கவேண்டும்

இண்டி ராம்