Friday, June 10, 2005

தமிழர்களிடம் தமிழில் பேசத் தயங்குகிறேன்.ஏன்?

எல்லோரும் சொல்கிறார்கள்
"தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்" என்று

ஆனால் பல சமயங்களில் நான் தமிழில் பேசத்தயங்குகிறேன்
ஏன்?
என்னிடம் யாராவது ஜாதியைப் பற்றி பேசினால் கடுப்படைவேன்

ஆங்கிலத்தில் பேசினால் அந்த பிரச்சனையில்லை
ஆனால் தமிழில் யாராவது 5 வார்த்தைகள் சொன்னால்
அவரது ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் அல்லது
அதை பேசுபவர் தெரிந்தோ,தெரியாமலோ தெரிவித்துவிடுவார்.

இது மாதிரி மற்ற இந்திய மொழியைப் பேசுபவர்கள்
ஒருவர் பேசும் மொழிப் பாணியிலிருந்து அவரது ஜாதியை
கண்டுபிடிக்கமுடியுமா. மற்ற மொழியையும் தெரிந்தவர்கள்
எனக்குத் தெரிவிக்கவும்.

இரண்டாவது

மற்ற இந்திய மொழிகள் மாதிரி, தமிழிலும் ஏற்றத் தாழ்வு
வெளிப்பாடு உள்ளது. உதாரணமாக வாஎன்ற வினைச்சொல்

வா, வாடா, வாங்க, வாம்மா, வாய்யா, வாப்பா,வாங்க சார் வாங்க,வாங்க மேடம்

தமிழ் (மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுக்கும்) கற்பவர்களுக்கு,
குழந்தைகளுக்கு (குழந்தைகள் இந்திய மொழி பேசத் தயங்குவதற்கு
இது ஒரு காரணமும் கூட)இது பெரிய பிரச்சனை.

யார் யாரிடம்எப்படி பேசவேண்டும்என்றறிவது சிரமமானது .
இந்திய மொழிகள் பணிவன்பு காட்டுவதில்லை (courtesy)
ஆனால்ஏற்றத் தாழ்வு வெளீப்படுத்துகின்றன.

ஆங்கிலத்தில்
பேசினால் இந்த பிரச்சனை கிடையாது
எல்லோரிடம் come here என்றே சொல்லலாம்.

மூன்றாவது

பலவித விஷயங்களைப் பேசும்போது நிறைய ஆங்கில
வார்த்தைகளை தமிழில் கலக்கவேண்டிய அவசியம் உள்ளது

ஆகவே

தமிழர்களிடம் எப்போதும் தமிழில் பேசுங்கள்
என்ற அறிவுரை கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும்
நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன

இண்டி ராம்

3 comments:

லதா said...

//இது மாதிரி மற்ற இந்திய மொழியைப் பேசுபவர்கள்
ஒருவர் பேசும் மொழிப் பாணியிலிருந்து அவரது ஜாதியை
கண்டுபிடிக்கமுடியுமா//

எவர் என்ன சாதி என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்திலிருந்து எப்போது நாம் விடுபடப்போகிறோம் ? :-))

ram said...

எனது குறிப்பில் நான் முதலில்
சொல்லியதுஎனக்கு ஜாதியைப் பற்றி
பேசினால் பிடிக்காது

இருந்தபோதும் மற்ற மொழியினர்
கூட தாங்கள் பிரயோகிக்கும்
வார்த்தைகளிலோ, பாணியிலோ
நாசூக்காக தங்களது ஜாதியை
வெளிப்படுத்துகிறார்களா என்பதை
அறிய நான் துடுப்பாக உள்ளேன்
(curious)

It is only an intellectual curiosity
However I am in full agreement
with you on how we can liberate
ourselves from being chained by caste
feeling
இண்டி ராம்

Floraipuyal said...

என்ன பேசுறிங்கன்னு என்னோட சித்தறிவுக்கு வெளங்கல. நான் இயல்பா பேசுறது போலவே இப்போ எழுதிருக்கேன். தமிழகத்தில இருந்த வரை நான் என்னோட பெறந்த ஊரத் தவிர்த்து வேற எங்கேயும் போனதில்ல. என்னுடய பேச்சிலருந்து நான் என்ன மதம், எந்த ஊரச் சார்ந்தவன், என்ன சாத்தினு உங்களால சொல்ல முடியுமா? ஆச்சரியமா இருக்கு. அஞ்சு வார்த்தயில்ல அம்பது வார்த்த பேசினாலும் எளிதா கண்டுபிடிக்க முடியாதுங்கிறது என்னோட எண்ணம். நீங்க எப்படி கண்டுபிடிக்கிறீங்கன்னு சொன்னா நானும் கத்துக்க ஏதுவா இருக்கும்.
நன்றி வணக்கங்கள்.
மணிவண்ணன்.