Monday, June 06, 2005

ஐந்து இந்து மத நம்பிக்கைகள்

யார் ஒருவர் இந்து மதத்தினர்?


அவரது நம்பிக்கைகள் என்ன?

அப்படின்னு ஒரு நன்றாகப் படித்த தமிழ் இந்துவை கேட்டால்

அவர் என்ன சொல்லுவார் என்று நினைக்கிறீர்கள்

"சார் நான் இந்து மதத்தைப் பற்றி படித்ததில்லை"

நீங்கள் ஏதாவது ஒரு மடாதிபதியிடம் தான் கேட்கவேண்டும்"

என்று இகி காண்பித்து சொல்லுவார்கள்.

இன்னும் சிலரை கேட்டீர்களானால் அவர்கள் தங்களுக்கு

தெரிந்ததை சொல்லுவார்கள். பத்து இந்துக்களைக் கேட்டால்

அவர்கள் பத்து வித பதிலை கொடுப்பார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தைப் பற்றி

ஒரே பதில் தான் கொடுப்பார்கள்.

அதெப்படி இவர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தைப் பற்றி


தெளிவாக பதிலளிக்கிறார்கள் ஆனால் தமது இந்து மதத்தைப்

பற்றி தமது அறியமைய எளிதில் காட்டிக் கொள்கிறார்கள்


என்று நான் சிந்தித்ததுண்டு.


இன்னும் வேறு மாநில இந்துக்களைக் கேட்டால் அவர்கள்

வேறு வித பதில் அளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்டுதான் ஒருவர் சொன்னார்

யார் இந்துஎன்று உங்களுக்கு தெரிந்துகொள்ளவேண்டுமா?

"இந்துஎன்பவர் ஒரு இந்தியர் ஆனால் அவர் கிறித்துவ,இஸ்லாமிய,
சீக், பௌன, ஜெயின் மதத்தை சாராதவர். அவ்வளவுதான்"

நான் (இண்டி ராம்) ஓர் இந்து

என்னைப் பொறுத்தவரை

ஓர் இந்து என்பவர் (காஷ்மீரைச் சேர்ந்தவரானாலும் சரி

போபாலைச் சேர்ந்தவரானாலும் சரி, கன்னியா குமரியைச்

சேர்ந்தவரானாலும் சரி" அவர் நம்புவது


1. கடவுள் உருவமில்லாதவராகவும் இருக்கலாம்
அல்லது பலவித பெயர்களையும், தோற்றவங்களையும் கொண்டவராக
இருக்கலாம்.கடவுள்எங்கும் உள்ளார். கடவுள் நம்முள்ளும் உள்ளார்.

2. வினைப்பலனில் நம்பிக்கை உள்ளவர்.

அதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும்

கெட்டது செய்தால் தனக்கு கெட்டது நடக்கும்.

இப்போதாவதோ எப்போதாவதோ அது நடக்கும்.

3.இறப்புக்கு பின் பிறப்பு நிச்சயம். பிறந்தால் இறக்கவேண்டும்.

நமது ஆன்மீக குறிக்கோள் பிறவாமை என்ற நிலமையை அடைவது.

பலருக்கு அது கிடைக்காது. சில மகான்கள் அந்த் ஆன்மீகத் தேடலில்

வெற்றி பெறலாம்.

4. நல்லதை (தர்மம்) கடைபிடிக்கவேண்டும். கெட்டதை

தவிர்க்கவேண்டும்.

5. தமது கடமையை நல்லபடியாகச் செய்யவேண்டும்


எந்த ஒரு இந்துவை மேற்கூறிய 5 நம்பிக்கைகளை

பெரும்பாலான இந்துக்கள் கொண்ட்டுள்ளானாரா என்று

கேட்டால் ஆமாம் என்பர்.

என்னிடம் யாராவது இந்துமத நம்பிக்கைகளைக் கேட்டால்

மேற்கூறிவற்றைதான் தயக்கமில்லாமல் சொல்லி வருகிறேன்.


இண்டி ராம்

6 comments:

G.Ragavan said...

மிகச்சரியான கருத்துகள். இந்துமதம் என்று சொல்லப்படுவதின் ஆணிவேரான நம்பிக்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளோடு எந்தக் கடவுளை வணங்கினாலும் அவர் இந்துதான்.

jeevagv said...

நல்ல பதிவு ராம். தெளிவான கருத்துக்கள்.

jeevagv said...

இந்து மதத்தின் மூலக்கோட்பாடுகளை 10 Niyams/ 10 Yamas எனப்பிரிக்கலாம். மேலும் விவரங்கள் இந்த சுட்டியில் காணலாம். (இவை உன்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்)

http://www.himalayanacademy.com/audio/cybertalks/bodhi_yamas.shtml

Ganesh Gopalasubramanian said...

ராம் சார் !!
நீங்கள் சொல்வது மிகச்சரி.
ஆனால் 1980க்குப் பிறகு அதுவும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வந்த பிறகு பலருக்கு இந்து மத கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் தெளிவாகத் தெரிந்திருக்கின்றன. இந்த தலைமுறைக்கு அர்த்தமுள்ள இந்துமதத்தை கொண்டு செல்வது அவர்களின் பொறுப்பு.

ram said...

அர்த்தமான இந்து மதம்
பிரசுரிக்கப்பட்டிருந்தாலும்
யாராவது இந்து மதத்தைப் பற்றிக்
கேட்டால் 5 வாக்கியங்களில்
சுருக்கமாக "டக்கென்று" சொல்ல
நான் மேற்கூறியவற்றை
பரிந்துரைக்கின்றேன்

இண்டி ராம்

ram said...

நண்பர் பாண்டி

நல்ல கேளிவியை கேட்டீர்

நேபாள, மலேசிய, சிங்கை,

சிறீலங்கா வினரைஎல்லாம்

மறந்துவிட்டேன்
அது சும்மா வேடிக்கைக்காகச்
சொல்லுவது "ஒரு இந்தியரைப்பார்த்து
இந்து மதத்தைக் கேட்டால் சுருக்கமாக
ஒன்றும் விளக்கமாகச் சொல்லத் தெரியாமல் அல்லது சொல்லுவது
கேட்பவர்க்கு புரியாமல் இருப்பதால்
நான் ஒரு இந்துஏனெனில் நான்

கிறித்துவர் அல்ல, இஸ்லாமியர் அல்ல
என்பது.

இண்டி