Saturday, June 25, 2005

தமிழ்த் தந்திவசதி கைவிடப்படுகிறது

தமிழில் தந்தி செலுத்தும் வசதி
பயனிப்பார்கள் இல்லாததால், கைவிடப்படும் என்ற
தகவல் கேட்டு சில தமிழ் அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள்
ஆனால் நான் இந்த விஷயத்தில் வேறுவித கருத்துகளைக்கொண்டுள்ளேன்.

தமிழ் தந்தி சேவை என்ன
எல்லா தந்தி சேவைகளுக்கும் முழுக்கு போடவேண்டிய காலம் வந்து விட்டது, என்கிற உண்மையை நாம் எல்லோரும் உணரவேண்டும், அன்பு நண்பர்களே.

இந்த காலத்தில் எல்லா இடங்களிலும் செல்போனும், எஸ்டிடி பூத்தும் ஈமெயிலும் வந்துவிட்டபோது பழங்கால தொழில்நுட்ப துரிதத்தகவல் பரிமாற்றும் சேவை தேவைதானா என்று நாம் கேட்கவேண்டும்.

ஒரு காலத்தில் டெலிபோன் வசதி எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லை.
மேலும் புயல் கியல் அடித்தால் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
டெலகிராப் வசதியினால் உடனேயே தகவல் தெரிவிக்கமுடிந்தது, ஒருவித துண்டிப்பில்லாமல் இக்காலத்தில் 20 மில்லியன் (2 கோடி) நில (land line ...still in India we have land line penetration of 2/100 people only)
தொலைபேசிகள் இருந்தாலும் செல்போன்கள் (60 மில்லியன் + 2 மில்லியன்/மாதம் உயர்வு) அதிகமாகவும் இருப்பதால்
துக்க , திருமண வாழ்த்துக்களை துரிதமாக பிறருக்கு இவ்வசதிகள் மூலம் அறிவிக்கமுடிகிறது.

மேலும் தந்தி வசதி எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை.
ஆகவே யாராவது அந்த இடத்திற்கு சென்று தகவல் கொடுக்கவேண்டும்.
எல்லா ஊர்களிலும் யாரிடமாவது செல்போன் வசதியுள்ளதால் தகவலை மற்றவர்களுக்கு தெரிவிப்பது எளிதாகிவிட்டது.

இக்காலத்தில் நாமெல்லோரும் காலத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு
வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அஞ்சவும் வேண்டாம்.

They say in information technology, you can't depend on "yesterday's skill set"
you have to keep on adopting newer skill set. otherwise we will become a dodo bird.

முன்பெல்லாம்

நிறுவனங்களெல்லாம்

தங்களது அடையாள அட்டைகளில்

முகவரி
டெலிபோன்
டெலகிராப்
டெலக்ஸ்
ஆகிய தொடர்பு வசதிகளை அச்சிட்டிருந்தார்கள்

ஆனால்
இக்காலத்தில்
முகவரி
டெலிபோன்·
பேக்ஸ்
ஈமெயில்
இணைய முகவரி
ஆகியவற்றை (டெலகிராப் இல்லாமல்) தான் அச்சிடுகிறார்கள்.

இங்கிலாந்துகாரன்

நமக்கு டெலிபோன் டெலகிராப் டிபார்ட்மெண்ட் என்று வைத்துக்கொடுத்தான்.
ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்கள் மாத்திரம் டெலகிராப் வசதியை தூக்கி எறிந்துவிட்டு ராயல் மெயில் மட்டும் வைத்துக்கொண்டுள்ளார்கள்.

நாம் மாத்திரம் சுயமா சிந்திக்கத்தெரியாம அவன் கொடுத்ததேயே வைத்துக்கொண்டு மாரடிக்கிறோம்.

டெலகிராப் தமிழா, ஆங்கிலாமா, ஹிந்தி யா இதெல்லாம் இக்காலத்திற்கு தேவைதானா என்று நான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

சும்மா உணர்ச்சியாலேயே சிந்தித்து பழைய குப்பையை வைத்துக்கொண்டு அதை விட்டுவிட மனசில்லாமல் எவ்வளவு காலம் வாழ்வது?

ஒருகாலத்தில் wester union என்கிற நிறுவனம் டெலகிராப் சர்வீஸ் வைத்து வயிறை கழுவிக்கொண்டு இருந்தது.
ஆனால் அதற்கு டிமாண்ட் குறைய ஆரம்பித்தது
அதை அப்படியே விட்டுவிட்டு இக்காலத் தேவையான பணப் பங்கீடு சேவைக்குத்தாவவிட்டார்களே!

உலகத்தார்களெல்லாம் ஸ்டெனோ என்கிற சேவையை விட்டுவிட்டார்கள்
(பத்துடாலர்க்கு நமது சிந்தனைகளை பிரத்யேகமாக பதியவைக்கும் கருவிகள் கிடைக்கின்றன)

ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னும் சில இடங்களில் ஸ்டெனோகிராபி பள்ளிகள் உள்ளன.

சில விதங்களில் நாம் மாறிவருகிறோம் , சிலவிதங்களில் நாம் மாறத் தயங்குகிறோம் ஏன்?

மனு ஸ்மிரித்தியில்

பிராமணர்கள் என்றால் அந்த ஜாதி அடையாளமாக குடுமி வைக்கணும் னா?
இக்காலத்தில் குடுமி வைத்தவர்கள் எங்கே போயிட்டார்கள். கோயில் பட்டர்கள் கூட குடுமிவைப்பதில்லை?

காலத்திற்கேற்றவாறு மக்கள் மாறிவருகிறார்கள்.

உதாரணமாக

வெளிநாடுகளில் வாழும், வேலை பார்க்கும் தமிழகப் பெண்மணிகள் எல்லாம்
குங்குமத்தையும் , பூவைப்பதையும், தாலி அணிவதையும் விட்டுவிடுகிறார்களல்லவா?

தமிழக ஆண்கள் என்றால் வேட்டி, துண்டு, தலைப்பாகை அணியனும்னாங்க
ஆனால் இக்காலத் தமிழகத்தில் கிராமத்தினரைத்தவிர (திருமணகாலகட்டத்தை தவிர) எல்லோரும் பேண்டும் ஸ்லாக் ஷர்ட் தானே
அணிகிறாங்க (மக்களை கவரவிரும்பும் அரசியல்வாதிகள் தவிர).

சினிமாவில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் எவ்வளவு தடவை வேட்டி அணிகிறார்கள் ?

நடுத்தர வயது பெண்மணிகள் தவிர மற்ற தமிழக இளைஞிகள் எல்லாம் சௌகரியமான உடையான சால்வார்தானே அணிகின்றார்கள்?

காலத்திற்கேற்றவாறு நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்
வள்ளுவன் ஏதாவது ஒரு குறளில் இந்த கருத்தை சொல்லியுள்ளாரா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்

நாம் போகி என்ற பொங்கல் நாளில்
பழையன கழிதலும் புதியன புகுதலும் செய்கிறோமல்லவா
ஆகவே தமிழ் தந்தியும், ஏன் எல்லா தந்தியும் போனால் நான் வருத்தப்படமாட்டேன்.

இதெல்லாம் போகவேண்டிய காலம் வந்துவிட்டது

போஸ் அண்ட் டெலகிராப் டிபார்ட்மெண்ட் போய் போஸ்டல் அண்ட் இண்டர்நெட் சர்விசஸ் டிபார்ட்மெண்டா உருமாறணும்

இதைநாமே சிந்தித்து செய்யணுமா அல்லது வெள்ளைக்காரன் நம்க்கு செய்து காட்டணுமா?

நண்பர் ஹூஸ்டன் கணேசன் கூறியுள்ள மாதிரி ஈமெயில் இன்டர்நெட் சேவையை வைத்து நிறைய வேலைவாய்ப்பு வசதிகளை
உருவாக்கலாம். வேண்டியது சுயமாக சிந்தித்து புத்துபுது சேவைகளை அறிமுகப்படுதி மார்க்கெட்டிங்க் செய்ய சிந்திக்கும் தொழில்முனைப்புசக்தி தான் (entrepreneurship).

இண்டி ராம்

2 comments:

இந்திரசித்து said...

//வெளிநாடுகளில் வாழும், வேலை பார்க்கும் தமிழகப் பெண்மணிகள் எல்லாம்
குங்குமத்தையும் , பூவைப்பதையும், தாலி அணிவதையும் விட்டுவிடுகிறார்களல்லவா?//

அது எப்பிடிங்க 'எல்லா வேலை பார்க்கும் பெண்களும்' தாலி அணிவதை விட்டுவிட்டார்கள் ன்னு பொதுப்ப்டுத்தி சொல்ரீங்க? நீங்க பார்த்த 4 பேர் அப்படி இருந்திருக்கலாம் எல்லரும் அப்படி இல்லங்க.. சும்மா அக்கபோறா அள்ளி போடாதீங்க...

ram said...

ஒத்துக்கொள்கிறேன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி
"எல்லோரும்"
அவைகளை அணிவதை விட்டுவிடவில்லை.

அதுவும் ஊர்களையும் செய்யும் தொழிலையும் சம்மந்தப் பட்டது உதாரணமாக
சிங்கை, மலேசியா, துபாய் ஆகிய
இடங்களில் வேலை பார்க்கும்
பெண்மணிகள் அவ்வளவு மாறுதல்
செய்வதில்லை. ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் கண்டிப்பாக,பூ, குங்குமம் அணிவதில்லை.

சிலர், பலர், பெரும்பாலோர், எல்லோரும்என்கிற துல்லியஎண்ணிக்கை அளவிடுவதை விடுங்கள்.

எனதுஎழுத்தின் முக்கிய பாயிண்ட்என்னவெனில்
நாம் காலத்திற்கும் சூழ்நிலைக்கும்
ஏற்ப பலவிதங்களில் மாறி வருகிறோம் என்பதற்குஎடுத்துக்காட்டாக பலவித உதாரணங்களை கொடுத்தேன் அவ்வளவே

ஆகவே சிலர், பலர்,பெரும்பாலானோர்,எல்லோரும் என்கிறஎண்ணிக்கையில் நாம் விவாதிக்கவேண்டாம்.
எழுத்தின் முக்கியத்துவம்
இந்தகாலத்தில் தந்தி சேவை அவசியமல்லஎன்பதே.

அதைப்பற்றி உங்களது கருத்தை அறிய
ஆவலாக உள்ளேன்

இண்டி ராம்