Saturday, June 25, 2005

தற்கொலையால் தான் கொலையால் அல்ல

தற்காலத்தில்

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபுகள்
நாகரிகம்

ஆகியவை
தற்கொலையால் இறக்கின்றன , ஆம், கொலையால் அல்ல.
ஆர்னால்ட் டாயின்பீ (சரித்திர வல்லுனர்)

தற்கொலையால் என்றால் மேற்கூறியவைகளுக்கு உரிமையாளர்கள் தாங்களாகவே அழிவுக்கு வழிவகுக்கின்றனர் மற்றவர்களால் (பூச்சாண்டிக்காரர்கள் ..ஹிந்திக்காரர்கள், மத்திய அரசு)
அவைகள் வலுக்கட்டாயமாக அழிக்கப்படுவதில்லை.

இண்டர்நெட், சாட்டிலைட் டிவி, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்து கணிசமாகச் சம்பளம் பெறுவது, புதுத்துறைகளில் சம்பாத்தியம் ஈட்டுவது ஆகியவைகளால் ஆங்கில வழிக் கல்வியால் தான் வயிற்றை கழுவமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.

ஏன், தமிழகத்திலேயே வேலை பெறுவதற்கு
ஆங்கில ஆளுமை தேவையாகிவிட்டது. தேர்தல் காலங்களில்
மக்களின் உணர்ச்சி, ஆவேசம், வெறுப்பு தூண்டுவதற்கே அரசியல்வாதிகளால் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது.

எலோரும் கேட்பதற்கும் கூப்பிடுவதற்கும் எளிதாக இருக்கவேன்டும் என்பதற்காக பழங்காலத் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளாமல் இரண்டு சிலபிள் பெயர்களை (வடக்கிந்திய) வைத்துக் கொள்கிறார்கள்.
தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் மரபு எல்லாம் மலையேறிவிட்டது.
கால் சென்டரில் வேலை செய்பவர்கள் தங்களை அமெரிக்க அல்லது ஆங்கிலேய முதற் பெயரைவைத்துக் கூறிக்கொள்கிறார்கள்.
சில இடங்களில் அவர்களுக்கு அமெரிக்கா செல்லாமலேயே அமெரிக்கர்கள்
மாதிரி எப்படி பேச்சாடல் செய்வது சிந்திப்பது போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான்
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

இக்காலத்தில் தமிழகத்தினர் உலகமெங்கும் (குறிப்பாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்கு சென்றுவருகிறார்கள்)
சேட்டிலைட் டீவிமூலம் அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய நிறுவனங்களெல்லாம் மாமான் மச்சானை நம்பியே வேறு மாநிலங்களுக்கு விஸ்தாரம் செய்யாமல்
ஊருக்குளேயே இருந்து வந்தனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள்
உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று உள்ளூர் ஆட்களையே வைத்து
(மாமான் மச்சான் , சாதிக்காரன் இல்லாமல்) திறம்பட விஸ்தரித்து வருகின்றன.

அதன் நுணுக்கங்களை நம் நாட்டு எம் பீ ஏக்களுக்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு சொல்லிக்கொடுத்து பயன்படுத்தத் தெரியாது.
இன்னும் சில வருடங்களில் இந்தியாமுழுவதும் வியாபித்துவரும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும். ஆகவே இந்தியரகள் எங்குபோனாலும் (இந்தியாவில்கூட)
அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக்கொள்ள பழக்கப் படுத்திகொள்வர். (கோக்கா கோலா, பெப்சி,பாச்கின் ராபின், கென்டக்கி சிக்கன், மக்டானல்ட், பீசாஹட், டாம்பான், டாய்லட் டிஷ்யூ,
ஜீன்ஸ், அலங்கரிப்பு பொருட்கள் இத்யாதி இத்யாதி...

தொன்று தொட்டு இருந்த சித்திரை விழாவை மார்க்கெட்டிங்க் பண்ணாமல்
காதலர் தினத்தையும் , அண்ணையர் தினத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.
வெளிநாட்டி டிவி ஷோக்களையெல்லாம் ( ரியாலிட்டி ஷோ ) நமதாக்கி வருகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக நமது அங்கங்களான, அடையாளமான

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபு
நாகரிகம்
ஆகியவற்றை நாமே , வேறொருவரின் வலியுறுத்தல், பயமுறுத்தல் இல்லாமலேயே வெட்டித்தூக்கி எறிந்து விடுவோம்.

இது தமிழினத்தை மட்டுமல்ல , மற்ற இந்தியர்களையும் , மற்றநாட்டினர்களையும் பாதித்துவருகிறது.

இதையெல்லாம் உணரமுடிகிறது. ஆனால் தெரிந்தும் விளக்கைத்தேடி பறந்தோடி இறக்கும் புற்றீசல் பூச்சிகள்மாதிரி பறக்கிறோம்.

நல்ல சம்பாத்தியம் பெற்று சௌகரியமாக வாழவேண்டும் என்கிற எண்ணமே
நமது தற்கொலைக்கு காரணம்.

இண்டி ராம்

No comments: