தமிழ் நாட்டில் ஒரு வினோத மனப்பான்மையுள்ளது
அதாவது பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களது கௌரவ டாக்டர்
பட்டத்தை அடைமொழியாக்கிக்கொண்டு பெருமிதம் அடைவது.
பெரும்பாலான பல்கலைக்கழங்கள் அரசியல்வாதிகளை
காக்காபிடித்து பணம்புடுங்க அவர்களுக்கு கௌரவ டாக்டர்
பட்டம் அளிப்பதுஎல்லோருக்கும் தெரிந்த ரகசியம்
அதேமாதிரி பிரபலங்களிடமிருந்து பணம் கறக்க அவர்களுக்கும்
பட்டம் வாரி வழங்குவர்
இது (டம்பம் அடித்துக்கொள்வது) மேலை நாடுகளில் நடப்பதே இல்லை
ஏன் தமிழ் நாடு தவிர மற்ற இந்திய மாநிலங்களிலும் இம்மாதிரிச் செயல் நடைமுறையில் இல்லை
(லல்லு பிரசாத் கூட தன்னை மாண்புமிகு டாக்டர் லல்லு பிரசாத்ஜீ என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை)
நாம் அடிக்கடி பூங்குண்றனாரின் "யாதும் ஊரே யாரும் கேளீரை" ப் பற்றி
எழுதுகிறோம். அதன் முதல்வரிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்
ஆனால் அதன் கடைசி இரண்டு வரிகள்தான் முக்கியமானவை.
ஆனால் அவைகள், பலருக்குத் தெரியாது.
அவைகளைத் தான் தமிழர்கள் கடைபிடிப்பதில்லை. சிந்திப்பதுமில்லை
தலைவர்கள் அவற்றை மேற்கோள் காட்டி தொண்டர்களுக்கு அறிவுரைப்பதில்லை.
அந்த வரிகளின் சாராம்சம் கீழே.....
பிரபலமானவர்களை (அரசியலாலோ, சினிமாவினாலோ, பதவியாலோ) ஆகோ ஓகோ என்று
தலையில் வைத்து ஆடாதே
அதே சமயம் எளியவர்களை (கிராமத்தினரை, படிக்காதவர்களை, கீழ் ஜாதியினரை (எவ்வளவு வயசானாலும்)
எள்ளி நகையாடாதே (பிரபலங்களெல்லாம் சினிமாவில் கிராமத்தானை
கிண்டல் பண்ணுவார்கள்)
என்று அறவுரைக்கின்றார் பூங்குன்றனார். (கி மு 300)
சிந்திக்கவேண்டிய வரிகள்.
இண்டி ராம்
Monday, June 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தன்னை 'டாக்டர்' கலைஞர் என்று, இனி அழைக்க வேண்டாம் என திரு.மு.கருணாநிதி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டார்கள் என்று படித்ததாய் நியாபகம்.
இருந்தாலும் ஜனாதிபதி அப்துல்கலாமை டாக்டர் கலாம் என்று அழைப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. அது கவுரவ டாக்டர் பட்டமாய் இருந்தபோதிலும்.
Post a Comment