Friday, September 07, 2007

ஓய்வு காலத்தை எப்படி எதிர்நோக்குவது?

முதுமைகால வாழ்க்கைத் திட்டம்.

அதைப் பற்றி நான் சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்

சிலருக்கு அவைகள் பிடித்தமாக இருக்காது. ஏனெனில் அவைகள் தமிழக மரபுக்கு

கலாச்சாரத்திற்கு சற்று மாறானவை

எனது அப்பா 60 களில் சொல்லி வந்தார். செய்தும் காட்டினார்.

அதாவது நாம் வயதானவுடன் கல்யாணமான குழந்தைகளின் வீட்டில் 3 நாட்களுக்கு மேல்

இருக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுடைய பிரத்யேக வாழ்க்கையை கெடுத்துவிடும்

நாம் நமது குழதைகளில் வாழ்க்கையில் புகமாட்டோம் என்று எவ்வளவு

தான் கங்கனம் கட்டினாலும்

அவ்வாறு செய்வதை தவிர்க்கமுடியாது (நமது உள்ளுணர்வு தாமரை

மேலுள்ள நீர் மாதிரி இருக்கவுடாது.

திருமணமானவர்கள் எல்லோரும் எப்போவது சண்டை போடுவார்கள் தான். அது சிலசமயம்

காரசாரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்.

ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடைவர். அது இயல்புதான்

ஆனால் ஒருவரது பெற்றோர்கள் இருந்தால் அவர்களை வக்காலத்துக்கு இழுத்துவிடுவார்கள்

பெற்ற உணர்வால் பெற்றோர்களால் ஈடுபடாமால் இருப்பதை தவிர்க்கமுடியாது.

பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் ஈடுபடவிரும்புவார்கள்.


2. தற்காலத்தில் எல்லோரும் 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசிக்கிறார்கள்

ஆகவே பெற்றோர்கள் தங்க வசதி கிடையாது. 3 நாட்களுக்கு எல்லோரும் பொறுமையாக

அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க.

மற்றும் பால், தண்ணீர், பாத்ரூம் பிரச்சனைகள் பெரிதாகிவிடும்

3. கூட்டுக்குடும்பம் தற்கால வாழ்க்கைக்கு உதவாது

அது தனிக்குடித்தனம் நடத்தும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லதும் அல்ல.

4. மேலும் பெற்றோர்கள் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து

சிலர் (கணவனோ , மனைவியோ) தங்களது பொறுப்பை கைவிட சாத்தியம் இருக்கிறது

5. தாம்பத்திய குழந்தைகள் தமக்கு பிடித்தமான செயலை செய்யமுடியாது

பெற்றோர்களையும் சேர்க்கவேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் இருக்கும்

6. தாம்பத்தியர் அசமாத்தாக எங்குவேண்டுமானலும் (வீட்டில்) கட்டிப்பிட்ப்பதையோ,

முத்தமிடுவதையோ, உடலுறவு கொள்வதோ

சங்கடமாகப் போய்விடும். அதாவது அவர்களது பிரைவசி பறந்து போய் விடும்

7. எனது அப்பா 1960 லேயே மூன்று நாட்களுக்கு மேல் தனது

திருமணமான குழந்தைகளுடன் இருந்தது கிடையாது

8. எனது அண்ணன் அக்காக்கள் கூட இப்போது அவர்களது குழந்தைகளுடன் வேண்டுமென்றே

வாழ்வதில்லை.

9. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்

10. மேலை நாடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்ததும்

மேற்படிப்புக்கு அவர்களே கடன் எடுத்து படிக்கச் செய்கிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை

தங்களது ஓய்வுகால வாழ்க்கைக்கு சேமிக்கிறார்கள்

11. தாம் தீம் என்று கல்யாணச் செலவில் தமது சேமிப்பை செலவிடுவதில்லை

12. அதே மாதிரி லட்சக்கணக்காக பணம் செலவிட்டு பிரத்யேக மருத்துவ அல்லது பொறியியல்

கல்லூரிப் படிப்பிறகாகச் செலவிடுவதில்லை

13. ஓய்வடைபவர்கள் பல இண்டரஸ்ட்களில் ஈடுபடவேண்டும்

14 தமது குழந்தைகளில் வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பதை நினைக்கக்கூடாது

15. உடல் நலம் குன்றாமல் இருந்தால் தாமே தனியாக வாழ மனதை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்

16. முதியோர் இல்லம் என்பது வெறுக்கத்தக்க இடம் அல்ல என்ற அபிமானத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

ஆம் கால மாற்றத்திற்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது

வாழ்க்கை விதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

17. சில கணவன்மார்கள் தமது பெற்றோருக்கு மனைவி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டும்

என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதேமாதிரி தமது மனைவியின் பெற்றோர்களுக்கு

தமது அட்ஜஸ்ட்மெண்டை அளிப்பார்களா.

இதையெல்லாம் நாம் சிந்தித்து ஆராயவேண்டும், எழுதவேண்டும், மற்றவர்கள் மனதில்

இடம்பெறவைக்கவேண்டும். இவைகளெல்லாம் தர்மசங்கடமான விஷயங்கள்

பலர் இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நலம் என்று கூட நினைப்பார்கள்.

Change is the only thing that is constant.

இண்டி ராம்