Monday, June 06, 2005

தகவல் சேகரிக்கும் உத்திகள் வளரவேண்டும்

தென் இந்திய புரோகிராமர்கள், கணினியியல் வல்லுனர்கள் இல்லாமல்
சர்வதேச தகவல் தொழில் நுட்பத்துறை ஓடாது என்று நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.
ஆமாம் யாராவது நமக்குத் தகவலை சேகரித்துக் கொடுத்தால்
நம்மால் அதை இப்படி அப்படி என்று புரட்டி அடித்து ஒழுங்கு பண்ணி கொடுக்க சரக்கு உள்ளது.
ஆனால் நம்மிடம் தகவல்களை சேகரிக்கும் உத்திதான் இல்லை என்பது கண்கூடு
எந்த விஷயத்தை எடுத்தாலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நுண்ணிய தகவல் பெறுவது கடினம்
உதாரணமாக
தமிழகத்தில் எத்தனை டாக்டர்கள் உள்ளனர்?
எத்தனை நர்சிம் ஹோம்கள் உள்ளன
அவைகளில் எவ்வளவு படுக்கைகள் உள்ளன?
எத்தனை ஆரம்ப, நடுநிலை, உய்ரநிலை, மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன?
அவைகளில் எத்தனை தமிழ் வழிக் கல்விநிலையங்கள், எத்தனை மெட்ரிக் பள்ளிகள்.
கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன?
எத்தனை தமிழ் வழிக் கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன
அரசியல் வாதிகளின் குழந்தைகள், பேரன்கள் எந்த பள்ளிகளுக்கு போகின்றனர்?
நடுத்தர மக்களில் , முதல் கிளாஸ் ஆபீசர்களில் எவ்வளவு விகிதாச்சாரத்தினர்
தம் குழந்தைகளை தமிழ் வழிக் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்/
தற்காலத் தமிழகத்தில் நடுத்தர வசதிகளுடன் வாழவேண்டுமானால் மாதத்திற்கு எவ்வளவு
சம்பளம் பெறவேண்டும்?
எவ்வளவு விகிதாச்சாரத்தினர் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர்?
இது மாதிரி ஆயிரக்கணக்கான தகவல்களை (சரியான தகவலை) எங்கிருந்தும்
பெறமுடியாது
காரணம்
தகவல் சேகரிக்கும் உத்தி வளரவில்லை.

மேலும் மக்களின் அன்றாடப் பேச்சில் எண்களும் விகிதாச்சாரமும் வாயில் வருவதில்லை
இப்போதுதான் கல்லூரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல் சேகரிப்பதில்
அக்கறை காட்டுகின்றனர். இது புது முயற்சியாதலால் இதில் குறைபாடுகள் இருக்கலாம்
மேலை நாடுகளில் மார்க்கெடிங்க் கம்பெனிகளும் அரசு துரைகளும் இதில் கண்ணாக உள்ளனர்
இந்தியாவில் கடந்த 20 வருடங்கள் வரை எல்லா பண்டங்களும் ஏகோதிபத்தியாமாக இருந்ததால்
மார்கெடிங்க் பண்ண வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது
இப்போகூட பாருங்கள் இந்தியாவைப் பற்றிய தகவலைப் பெற நாம் யு என் ஏஜன்சிகளையும்
சி ஐ ஏயும், சி என் என் ஐயும் நாடவேண்டியிருக்கிறது. இந்திய வரலாற்றுத் தகவல்களை
வெள்ளைக்காரர்கள் தயாரித்துக் கொடுத்தனர்.
பழங்காலத் தகவல்களுக்கு நாம் சீன, கிரீக் வழிப்போக்கர்களின் குறிப்புகளை
வைத்து தானே ஊகீக்க முடிந்தது?
சென்னையில் வரும் 5 நாட்கள் தட்பவெட்பநிலை அறியவேண்டுமானால்
சி என் என் வெப் சைடில்தான் பார்க்கமுடிகிறது
இந்தியாவில் உள்ள ஊரிகளின் தெரு மேப் பார்க்கவேணுமானால்
கூகிள் அல்லது மேப் குவெஸ்ட் தான் போகவேண்டியிருக்கும்
தமிழ் நாட்டில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் எவ்வாறு டிவோர்ஸ் நடக்கிறது
கிராமத்தினர் டிவோர்ஸ் பண்ணுவதே யில்லையா?
ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் ஹெச் ஐ வி, எய்ட்ஸ் வியாதி மெற்றுள்ளனர்?
அதை எப்படி நுணுக்கமாக கண்டறிவது
அரசியல்வாதிகள் வெளிநாட்டினர், அந்த எண்ணிக்கையை மிகைப்படுத்துகின்றனர்
என்கிறார்கள். ஆனால் அரசு அந்த தொகையை நிர்ணயிக்க எவ்வாறு முயற்சிக்கிறது?
நாம் யாராவது தகவல் தந்தால் அதை ஒழுக்குபடுத்துகிறோம்
அதை அலசல் செய்கிறோம் (பல ஸ்டாடிஸ்டிசியன்கள் இந்தியர்கள்)
ஆனால் நம்பகரமான தகவலை சேகரிப்பதில் தான் கவணம் செலுத்துவதில்லை
இண்டி ராம்

No comments: