லட்சம் கோடி போன்ற எண்ணளவுகளை (units of counting)
நாம் கைவிடவேண்டும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
நூறு லட்சம் ஒரு கோடியாகவும்
நூறு கோடி வேறு ஏதாவதாகவும்
நூறு ஏதாவது எண்ணளவு வேறான எண்ணளவாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் கடந்த ஆயிரமாண்டுகளில் எந்த ஒரு அளவையும் கோடிக்குமேல் சொல்லாமல்
இருப்பதால் அந்த கோடிக்கதிகமன எண்ணளவுகளெல்லாம் புழக்கத்திலிருந்து அழிந்துவிட்டன.
தற்சமயத்தில் லட்சம் கோடிக்கப்புறம்
நூறு கோடி ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடி என்றாகி
இப்போது மத்திய அரசின் பட்ஜெட் எல்லாம் யாருக்கும் புரியாத
திரும்பி சொல்ல கஷ்டமான லட்ச கோடி என்ற எண்ணளவுகளை பயன்படுத்துகிறோம்.
உலகத்தில் இரண்டு மூன்று நாடுகளைத்தவிர
மற்றவையெல்லாம்
ஒவ்வொரு மூன்று எண் இடங்களுக்கு ஒரு
எண்ணளவை பயன்படுத்தி எண்ணளவுகளை சொல்வதற்கும்
எழுதுவதற்கும் வசதிப் படுத்தியுள்ளன.
ஆயிரம் 1000
மில்லியன் 1,000,000
பில்லியன் 1,000,000,000
கூவாட்ரில்லியன் 1,000,000,000,000
பென்டில்லியன் 1,000,000,000,000,000
இப்போது
அமெரிக்க பட்ஜெட் 2.3 டிரில்லியன் டாலர்என்று சொல்லுவதற்கு எளிதாக உள்ளது.
அதையே இரண்டு லட்சத்து முப்பதாயிரம் கோடி டாலர் என்று சொன்னால்
சொல்வதற்கும் கேட்பதற்கும் புரிவதற்கும் சிரமமாக இருக்கிறதல்லவா?
அப்புறம் 100 டிரில்லியன் ஆகிவிட்டால்
அது தத்துவாய்காரன் சொல்லுவது மாதிரி கோடிகோடியாகிவிடும்
இந்திய மத்திய அரசு கோடிவைத்து அழுகட்டும், தமிழ் நாடாவது
இந்த லட்சம் கோடி எண்ணளவுகளை கடாசிவிட்டு
மற்ற உலக நாடுகள் செய்வது மாதிரி
மில்லியன் பில்லியன் போன்ற புரிவதற்கும், சொல்லுவதற்கும், எளிதான
எண்ணளவுகளைப் பயன்படுத்தட்டும்.
இன்னொரு குழப்பம் அளிக்கும் விஷயம் என்னவென்றால்
இந்திய அரசு மற்ற இந்திய நிறுவனங்களெல்லாம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
லட்சம் , கோடி மில்லியன் பில்லியன் எல்லாத்தையும்
ஒரே பத்தியில் எழுத்தில் பிரயோகித்து வாசகர்களை குழப்பத்தில்
ஊறவைத்து பிழிந்து எடுக்கிறார்கள்.
உணவு உற்பத்தியெல்லாம் மெட்ரிக் மில்லியன் டன்தான்
மின்சார உற்பத்தி மெகாவாட் (மில்லியன் வாட்)
வீம்புக்காக லட்சம் கோடியவைத்துக்கொண்டு வாசகர்களை
குழப்பத்தில் ஊறவைக்கிறோம்.
இதை ஏன் தலையங்க எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்கிறார்கள்
என்பது எனக்குப் புரியவில்லை.
இந்த கோடிதான் அதிக எண்ணளவு என்பது எனக்குப்புரிவதற்கு கடினமாக
உள்ளது. மேலும் கோடி, மில்லியன் , பில்லியன் எண்ணளவுகளை
கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்துவது இன்னும் குழப்பத்தை
அதிகரிக்கிறது. பல சஞ்சிகைகளில் பாருங்கள் எல்லா எண்ணளவுகளையும்
கண்ட கண்ட இடங்களில் கலந்து எழுதுகிறார்கள்.
ஆகவே அதன் பிரயோகத்தை கூடி சீக்கிரம் நாம் விட்டுவிடவேண்டும்
நமது பலவித பாரம்பரிய அளவு முறைகளை நாம்
உலகத்தோடு சேர்ந்து கடாசிவிட்டோம் அல்லவா?
(அரையனா, காலனா, பவுன், உலக்கை, படி போன்ற அளவுகள் எங்கே போயின?)
அதே மாதிரி லட்சம் கோடியை விட்டுவிட்டால் வரும் தலைமுறையினரின்
வாழ்கையாவது சுலபமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
இண்டி ராம்
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் தொடர்பு மின்னஞ்சல் முகவரியை இந்த மெயிலுக்கு அனுப்ப முடியுமா?
sanuragc@yahoo.com
Post a Comment