விய அல்லது வியா ஆண்டு வாழ்த்துக்கள்
தான் ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்வதர்க்கு
சில அடையாள சின்னங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது "தமிழ்" ஆண்டு, மாத, நாள் கால அளவுகளைக் கடைபிடிப்பது.
இவற்றில் நாட்கள் மாத்திரம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது.
மற்றபடி மாதங்களை அன்றாட வாழ்க்கையில் பல சராசரித்தமிழர்கள்
பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் ஆண்டுப்பெயர்களை நாள்காட்டியைப் பார்த்துதான் அறிந்துகொள்கிறார்கள். கிரிகோரியன் மாதங்கள்தான் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்துகிறார்கள்.
இந்த வாய்க்கு வராத 60 ஆண்டுகளை எந்த "தமிழன்"
பெயரிட்டான் என்று எனககு் யாராவது தெரிவித்தால் அது எனக்கு பயனளிக்கும்.
இந்த 60 ஆண்டுகள் "தமிழன்" நாரதருடைய குழந்தைகளின் பெயர்களையொட்டி பெயரிடப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். இந்த 60 ஆண்டுகள் பெயர் சுழற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளைப்பற்றி எந்த பழங்காலத் தமிழ் நூலில்
குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டின் பெயர்களை வைத்து 60 வயதுக்கு மேலானவரின் வயதை கணக்கிடமுடியுமா? அல்லது தாத்தா கொள்ளுதாத்தா வயதை நிர்ணயிக்கமுடியுமா?
கிரிகோரியன் காலவரிசைப்படுத்திய நாள்காட்டியை
வைத்துதானே கணக்கிடமுடிகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது
மாட்டுப் பொங்கல் நாளை (ஜனவரி 16ம் தேதியை) திருவள்ளுவர் ஆண்டு புத்தாண்டு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் (கிரிகேரியன்+31=திருவள்ளுவர் ஆண்டு)
ஆனால் திமுக ஆட்சியில் இல்லாததால் மற்றகட்சியினர் அதை சட்டை பண்ணுவதில்லை.
திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் தங்களது திருமண அழைப்பிதளில்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு தைமாதத் திருமணம் என்று குறிப்பிடுவதில்லை.
எந்த திமுக பிரமுகரும் திருவள்ளுவர் ஆண்டு 2031 ல்
"இந்தியாவிலேயே ஒரே ஒரு நபர் தான் பொடா சட்டத்தினை" மீறியதால்
சிறையில் இடப்பட்டார். என்று சொல்லுவதில்லை.
தமிழ் நாட்டில் தெருவில் நட்ந்துபோகும் ஒருவரிடம் இந்த ஆண்டு பெயர் என்ன
என்று கேட்டால் அவருக்கு தெரியுமா?
இதைப் பற்றி தமிழர்கள் ஏன் சிந்திப்பதில்லை?
அதே மாதிரி நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கும், துக்க நாளை அனுசரிப்பதற்கும்
யாராவது ஒரு கணிப்பாளரை கேட்கவேண்டிய நிலையில் ஏன் தங்களை வைத்துள்ளார்கள்?
இம்மாதிரி இக்காலத்திற்கு உதவாத நாள் அளவுகளையும் மற்றவனை நாடும் புத்தியையும் தமிழர்கள் தங்களுக்கு அடையாளமாக எவ்வளவு சகாப்தங்களுக் அட்டையாக விடாப் பிடியாக பிடித்து வைத்துக்கொள்வார்களோ. அது ஆண்டவுனுக்குதான் புரியும்.
காலத்திற்கேற்ப தமிழர்கள் மாறவேண்டும் என்று விரும்பும் தமிழன்
இண்டி ராம்
Thursday, April 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment