Monday, May 30, 2005

தமிழில் எழுத விரும்புகிறீர்களா?

Those who are interested

ஆர்வலர்கள்

your views reflect mine

உங்களது கருத்துக்கள் எமது கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன

I like to see your feedbacks

உங்களது பின்னூட்டலை பார்க்க விரும்புகிறேன்

please let me have your response

உங்களது மறுமொழி அளியுங்கள்

widely Kown

பரவலாக அறியப்பட்டவர்

5 comments:

Vijayakumar said...

வாங்க இண்டிராம். இப்போது தான் தங்கள் ப்ளாக்கை கண்ணுற்றேன். என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் எனக்கு உங்களை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு http://www.halwacity.com வலைத்தளம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது நான் உங்களுடன் தொடர்பில் இருந்தேன். நேரமின்மையால் வலைத்தளத்தை மூடிவிட்டு http://halwacity.blogspot.com பக்கம் ஒதுங்கி விட்டேன். தங்களை கண்டதில் மகிழ்ச்சி.

Alex Pandian said...

வாங்க வாங்க இண்டி ராம்..!

தமிழ்.நெட் டுல சந்திச்சிருக்கோம். ஞாபகம் இருக்கா ? (5 - 6 வருஷம் முன்னால)

வலைப்பதிவு உலகத்திற்கு வருக..!

கொஞ்சம் டெம்ப்ளேட் மாத்திப் பாருங்கள். வரிகள் எல்லாம் ஒரு வரி இடைவெளியுடன் வருகிறது. எடிட்டரில் ஒரு வரி எழுதி/ஒட்டியவுடன் என்டெர் கீ தட்டாமல் எழுதினால் சரியாகும் என நினைக்கிறேன்.

- அலெக்ஸ் பாண்டியன்

Muthu said...

இண்டி ராம்,
வாங்க. உங்க பேரைப் பார்த்தவுடன் நீங்க "தி ஹிண்டு ராம்" அப்படின்னு நினைச்சிட்டேன் :-).

Mahamaya said...

உங்கள் ஆங்கில வலைப்பதிவைக்கண்ட பிறகுதான் நீங்கள், ட்சுனாமிக்குப்பின் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு "chat" வசதி அமைத்துக் கொடுத்த அந்த ஃப்ளாஷ் வல்லுனர் என்பதை அடையாளம் கண்டேன்!

எழில்நிலா.கொம் தளத்தில் ஒருங்குறி பற்றிய உங்கள் கருத்துக்களை வாசித்தேன்.

இதுபோன்ற தமிழ்ச் சொற்களைத் தொகுத்து ஒரு .pdf கோப்பாக அளிக்க இயலுமா? என் போன்றவர்களுக்குப் பயன்படும்!

ஈழநாதன்(Eelanathan) said...

இண்டிராம் அருள்குமரனுடைய வலைப்பதிவின் Template ஐ அப்படியே பிரதிபண்ணிப் போட்டிருக்கிறார்.நீங்கள் கூறும் சுனாமி chat செய்தவர் அருள்குமரன்