வலைப்பூக்கள் மலர்வதன்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய
என் எண்ணங்கள்.
தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.
வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.
பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்
ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது
(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)
(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)
(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)
வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.
வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்
(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)
வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்
வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்
(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)
வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை
பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.
இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்
நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து
எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்
மன நிறைவுபெறுகிறார்கள்.
இண்டி ராம்
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment