எல்லா இந்திய சினிமாப் படங்களில் (குறிப்பாகத் தமிழ்ப் படங்களில்)
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்
மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்
என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.
நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்
சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்
ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.
அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்
இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.
இந்த நிலமையை மாற்ற முடியாதா?
சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.
ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?
இண்டி ராம்
Sunday, August 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ச்சே ச்சே இதெல்லாம் கட்டுக்கதை என்னை பார் உதவியாளார் கூட உங்களை போல ஒரு கஸ்டமர பார்த்தா போதும் சார் , எந்த வித தொந்தரவும் இல்லாமல் வந்தோமா ,குடிச்சோமானு சத்தமே இல்லாமல் போவிங்கணு நற்சான்றிதழ் எல்லாம் கொடுத்து இருக்காங்க, அப்படி இருக்கும் போது குடித்தால் தகராறு செய்வார்கள் என்பதெல்லாம் சுத்த பேத்தல். நாம் இதனை ஒரு இயக்கமாக அனைவருக்கும் எடுத்து சொல்வோம் ராம்!
Post a Comment