Saturday, April 22, 2006

பேச்சுத் தமிழ் குறுந்தட்டு

2002ல் ஆங்கிலம் மூலம் பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு குறுந்தட்டு தயாரித்து அதை இலவசமாக பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். இப்போது அதை இணையம் வழியாக அளிப்பதற்கானத் தகவலை எனது புதிய வலை தளத்தில் தந்துள்ளேன்.

செல்லவேண்டிய முகவரி

http://indyram.googlepages.com/home

இண்டி ராம்

Wednesday, April 19, 2006

தமிழ் மொழி வளர என்னென்ன செய்யக்கூடாது

> தமிழ்வாழ உழைப்போர்க்குத்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்


எப்படி தமிழை வாழவைப்பது?


தற்கால வாழ்க்கைக்கு தேவையான

பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்

தமிழ் வளரும.

வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.

தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்

வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.

ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.

மத்திய அரசை குறைகூறுவதாலும்

ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்

உண்ணாவிரதம் இருப்பதாலும்

தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்

வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்

தமிழ் மொழி வளராது

மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது

மக்களின் அடிப்படை தேவை

வாழ்க்கை நடத்த பணம்

அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்

தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற

படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்

இண்டி ராம்

Monday, April 17, 2006

வட்டார, ஜாதி, மதத் தமிழில் பேசுவதை தவிர்க்கவேண்டும்

தமிழ் மொழியானது பல வட்டார வழக்குகளின்படி பல ஊர்நகரம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.

தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்

அதில் இதுவும் ஒன்று

அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது

வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்

ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)

ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.

வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.

இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது

ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்

இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்

ஒரு காலத்தில் நான் சொல்வேன்

நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்

1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.

ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.

2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது

வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.

(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)

அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?

இண்டி ராம்

Thursday, April 13, 2006

தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்

விய அல்லது வியா ஆண்டு வாழ்த்துக்கள்

தான் ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்வதர்க்கு

சில அடையாள சின்னங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமானது "தமிழ்" ஆண்டு, மாத, நாள் கால அளவுகளைக் கடைபிடிப்பது.

இவற்றில் நாட்கள் மாத்திரம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது.

மற்றபடி மாதங்களை அன்றாட வாழ்க்கையில் பல சராசரித்தமிழர்கள்

பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் ஆண்டுப்பெயர்களை நாள்காட்டியைப் பார்த்துதான் அறிந்துகொள்கிறார்கள். கிரிகோரியன் மாதங்கள்தான் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்துகிறார்கள்.

இந்த வாய்க்கு வராத 60 ஆண்டுகளை எந்த "தமிழன்"

பெயரிட்டான் என்று எனககு் யாராவது தெரிவித்தால் அது எனக்கு பயனளிக்கும்.

இந்த 60 ஆண்டுகள் "தமிழன்" நாரதருடைய குழந்தைகளின் பெயர்களையொட்டி பெயரிடப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். இந்த 60 ஆண்டுகள் பெயர் சுழற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளைப்பற்றி எந்த பழங்காலத் தமிழ் நூலில்

குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டின் பெயர்களை வைத்து 60 வயதுக்கு மேலானவரின் வயதை கணக்கிடமுடியுமா? அல்லது தாத்தா கொள்ளுதாத்தா வயதை நிர்ணயிக்கமுடியுமா?

கிரிகோரியன் காலவரிசைப்படுத்திய நாள்காட்டியை
வைத்துதானே கணக்கிடமுடிகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது
மாட்டுப் பொங்கல் நாளை (ஜனவரி 16ம் தேதியை) திருவள்ளுவர் ஆண்டு புத்தாண்டு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் (கிரிகேரியன்+31=திருவள்ளுவர் ஆண்டு)

ஆனால் திமுக ஆட்சியில் இல்லாததால் மற்றகட்சியினர் அதை சட்டை பண்ணுவதில்லை.

திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் தங்களது திருமண அழைப்பிதளில்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு தைமாதத் திருமணம் என்று குறிப்பிடுவதில்லை.
எந்த திமுக பிரமுகரும் திருவள்ளுவர் ஆண்டு 2031 ல்
"இந்தியாவிலேயே ஒரே ஒரு நபர் தான் பொடா சட்டத்தினை" மீறியதால்
சிறையில் இடப்பட்டார். என்று சொல்லுவதில்லை.

தமிழ் நாட்டில் தெருவில் நட்ந்துபோகும் ஒருவரிடம் இந்த ஆண்டு பெயர் என்ன
என்று கேட்டால் அவருக்கு தெரியுமா?

இதைப் பற்றி தமிழர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

அதே மாதிரி நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கும், துக்க நாளை அனுசரிப்பதற்கும்
யாராவது ஒரு கணிப்பாளரை கேட்கவேண்டிய நிலையில் ஏன் தங்களை வைத்துள்ளார்கள்?

இம்மாதிரி இக்காலத்திற்கு உதவாத நாள் அளவுகளையும் மற்றவனை நாடும் புத்தியையும் தமிழர்கள் தங்களுக்கு அடையாளமாக எவ்வளவு சகாப்தங்களுக் அட்டையாக விடாப் பிடியாக பிடித்து வைத்துக்கொள்வார்களோ. அது ஆண்டவுனுக்குதான் புரியும்.

காலத்திற்கேற்ப தமிழர்கள் மாறவேண்டும் என்று விரும்பும் தமிழன்

இண்டி ராம்