Monday, December 31, 2007

காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கைவிடவேண்டும்

தமிழக பிராமணர்கள் அல்லாத இந்துக்கள்
காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை
கொண்டுள்ளார்கள்

என்ன அவைகள்

(1) பிராமணர்கள் அல்லாத மற்ற இந்துக்கள் அந்த மந்திரத்தை ஜபிக்கக்கூடாது

(2) மனசுக்குள்ளேயெ சொல்லிக் கொள்ளவேன்டும்

(3) காலை நேர்த்தில் தண்ணீர் தேக்கத்திலேயே அல்லது ஆற்றின் கரையிலேயே தான்

ஜபிக்கவேண்டும்

(4) அந்த மந்திரத்தை மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு பலமாக உச்சரித்தால் அதன்

மகிமை போய்விடும்

காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் என்ன

அதற்கு ஒவ்வொரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரகளும், படித்தவரகளும்

ஒவ்வொன்று கூறுகின்றனார்

ஆகவே எது தான் சரியானது என்பது சர்ச்சைக்குரியதே

இருந்தாலும் எல்லா வியாக்கியானங்களிலும் பொதுவாக ஒரே கருத்துள்ளதே

சமஸ்கிருத மூலம்

ஓம் பூர் புவா ஸ்வா
தத் சவித்தூர் வேரேன்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி
தியோய ன பிரசோயதாத் ஓம்

ஒரு தமிழாக்கம்

இம்மூவுலுகங்களை (பூமி, ஆகாயம், கீழ் (மேல்) உலகம்)
காப்பவனே (ளே) எல்லோராலும் போற்றப்படுபவேன (ளே)
சூரியனாகக் காட்சியளித்து உனது வெளிச்சம் என்னுள் புகுந்து
என் மனதையும் என்னுள் உள்ள உயிரையும் உன்னைப்பற்றி தியானிக்க
அருள்புரிவாயாக

இதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்துக்கள் அல்லாதோர்

கூட தினந்தோறும் சொல்லலாம்

(like the Christian's Lord's Prayer)

வடக்கத்திய எல்லா இந்துக் குழந்தைகளும் இந்த மந்திரத்தை சொல்லுகின்றனர்

அவர்கள் பஜணை செய்யும் "தூன்" களில் இந்த மந்திரம் முக்கியமானது

அவர்களது கல்யாணச் சடங்குகளில் இந்த மந்திரத்தை மூன்று தடவையாவது
சொல்கிறார்கள்

கீதா மண்டலில் பயிலும் எல்லா குழந்தைகளும்

( பிராமணர் பிராமணர் அல்லாதோர்) இந்த மந்திரத்தை

முதல் மந்திரமாக ஜபிக்கிறார்கள்

ஆகவே தமிழக எல்லா இந்துக்களும் இதை ஜபிப்பதைப் பற்றிய தவாறான எண்ணங்கள்

கொண்டுள்ளதை கைவிடவேண்டும்

இண்டி ராம்

Sunday, December 30, 2007

புதியன கற்கவேண்டும்

சற்றுமுன்னில் வெளிவந்த செய்தி

துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.

நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது

இண்டி ராம்

கோலாகல உணர்வை எப்போது ஏன் இழந்தோம்?

கோலாகல உணர்வான கொண்டாட்டம் ஏன், எப்போது, வழக்கொழிந்தது?

இது எனக்கு புரியாத புதிர்

தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

ஆகிய இருநாட்களிலும் மக்களின்

நடத்தையை அவதானியுங்கள்

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை

காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு

போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்

பார்ப்பதும் தான் நடக்கிறது

ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது

அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்

காதலர் தினமாக இருந்தது

ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்

கொண்டாடப்படுகிறது

இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்

இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)

வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்

ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை

வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்

அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்

எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்

ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்

அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ

கிடையாது

நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து

வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு

புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது

இண்டி ராம்

Monday, December 24, 2007

யூனிகோட் தமிழுக்கு தாவினால் என்ன பயன்?

ஆம் உறுப்பினர்கள் பங்கேற்பு பொங்க, மடலாடல் குழுக்களில் கடிதப்பரிமாற்றம் அதிகரிக்கவாய்ப்புள்ளது

எப்படின்னு கேட்கிறீங்களா

(1) தமிழ் மண வலைப்பூக்கள் திரட்டியில் ஆயிரக்கணக்கான விஷயங்கள்எழுதப்படுகின்றன (வலைபூக்கள் மூலம்)

அவைகளை வெட்டி ஒட்டி சிரமமில்லாமல் அனுப்பலாம்

அவைகளை அலசல் செய்யலாம்.

(2) சிலர் வலைப்பூவில் எழுதும் விஷயங்களை கொசுறுக்காக இங்கேயும் ஒட்டி அனுப்பலாம்

(வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம்யூனிகோட் தமிழ் தான் பயன்படுத்துகின்றனர்)

(3) சில சிரமங்கள் இருந்தாலும் யூனிகோட் தமிழில் எழுதுவதுசுலபம்.

ஏனெனில் லதா தமிழ் எழுத்துரு நிறுவவேண்டிய அவசியமில்லைஅது எக்ஸ்பி ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் உள்ளது.ஆகவே ஆபீஸ் கணினியில் கூட யூனிகோட் தமிழில் எழுதமுடியும்

எனக்கு நம்பிக்கையுள்ளது

இண்டி ராம்