Sunday, December 30, 2007

புதியன கற்கவேண்டும்

சற்றுமுன்னில் வெளிவந்த செய்தி

துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.

நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது

இண்டி ராம்

No comments: