Sunday, December 30, 2007

கோலாகல உணர்வை எப்போது ஏன் இழந்தோம்?

கோலாகல உணர்வான கொண்டாட்டம் ஏன், எப்போது, வழக்கொழிந்தது?

இது எனக்கு புரியாத புதிர்

தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

ஆகிய இருநாட்களிலும் மக்களின்

நடத்தையை அவதானியுங்கள்

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை

காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு

போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்

பார்ப்பதும் தான் நடக்கிறது

ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது

அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்

காதலர் தினமாக இருந்தது

ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்

கொண்டாடப்படுகிறது

இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்

இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)

வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்

ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை

வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்

அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்

எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்

ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்

அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ

கிடையாது

நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து

வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு

புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது

இண்டி ராம்

No comments: