Wednesday, August 16, 2006

வரதட்சணை ஏன் வலுவடைந்துவருகிறது?

"Anti-Dowry Seminar"

Anti-Dowry Association of Jamal Mohamed College, Trichy is conducting
"Anti-Dowry Seminar" during August third week.

People who are really interested to do something to abolish dowry and
bride-burning in India can join as a member and serve for our society and
country.

It is an enormous problem in our country of a huge population.
-----------------------------------------------------------------------
It is a growing problem

Some years ago it was practiced among some caste groups

ண்ow it has spread to all caste groups and non-Hindus as well

It has even spread to the villages!

Why

Greed?

Availability of plenty of consumer goods

Awareness of status symbols

High cost of higher education

Lack of availability of FINANCIALLY ELIGIBLE BRIDEGROOMS is the prime
culprit

Why do I say so?

Young people who are marriage eligible are in the age group of 21-35

The parents of marriageable aged women want their daughters

to be married to financially capable men

Unfortunately even if the bridegroom is employed only about 10% of them

can earn enough to provide a decent living to the bride

All the women want to get married to that 10% men and so the bidding goes on

for the scarecely available goods (like gasoline prices going up and up)

To make matters worse

Higher education has become expensive. May get it from private colleges

Parents who sent their boys for higher education

feel the obligation to pay back the loan they may have incurred to educate
their sons

The potential bride's parents become an easy creditor

We have a funny way for justifying and moralizing every corrupt behavior

in our society.

அமாம் சார் அந்த பியூனுக்கு 500 ரூபாதான் சம்பளம்

இந்த காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் சார் இந்த கிளர்க்குக்கு 4 பொண்ணுங்க

எப்படி அவங்களுக்கு கல்யாணம் பண்ணமுடியும் இந்த சம்பளத்தில்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் இந்த ஆபீசர் இங்கே இருந்து டிரான்Sபராக இருக்கனும்னா

மினிSடருக்கு பணம் கொடுத்தாகவுனும்

அதை கன்சிடர் பண்ணி அவருக்கும் சேர்ந்து பணம் கொடுங்க

பிறகு உங்க பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (nativity certificate)

கெடச்சிடும்

நமது சமுதாயம் விசித்திரமானதுதான்

இம்மாதிரி உணர்தல் மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால்தான்

அப்பட்டமா வருது

இண்டி ராம்

With the availability of so many electronic gadgets

the "kama" (kama doesn't have to be sexual desire alone...any excessive
desire is kama)

level has gone up

The parents themselves teach their marriageable boys

People should learn to slowly accumulate wealth and control their

impulse to enjoy the pleasures

They should discuss these issues in பட்டி மன்றம்

இம்மாதிரி சமூக பிரச்சனைகளையெல்லாம் விவாதிக்காம

மண்ணாங்கட்டி தலைப்புகளான

"ராமனா, ராவணனா எவன் உயர்ந்தவன்"

கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா எது மேலானது"

இட்டிலியா தோசையா எது சுவையானது

மாதவியா கண்ணகியா எவள் உயர்ந்தவள்

இப்படி வெட்டி தலைப்புகளையே வைத்து

தமாஷா நேரத்தை வீணாக்கியே பிரபல்யமான நடுநிலையாளர்களும்

பேச்சாளர்களும் பணம் பண்ணி வருகின்றனர்

அதையும் நம் தற்கால கலாச்சார கூறு என்று ஆதரித்தும் வருகிறோம்

கல்யாணவைதெட்டிய வாலிபர்களின் பொருளாதாரத் தகுதி

வளர்ந்தால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்

மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறைகளை வளர்க்காமல்

சுயமாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை நிகழ்வுகளை ஆதரிக்கவேண்டும்

(லவ் மேரேஜ் என்றால் அதற்கு தவறான உள்ளர்த்தம் மக்கள் மனதில் உள்ளது (connotation)

சுயமாகப் பெண்ணை தேர்ந்தெடுத்தால்

அவளது அப்பன் தலையிலும், பணப்பை கையிலும் கைவைக்கும்

பழக்கம் உருவாகாது என்று நான் நினைக்கிறேன்

இண்டி ராம்

60 ஆம் ஆண்டு விழா ஒரு கேள்வி

ஒரு காலத்தில் (1947ல்) சராசரி இந்திய குடிமகரின் வாழ்வாண்டு 39 ஆகத்தான் இருந்தது.

ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது

அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்

அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்

மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?

மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?

அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.

இண்டி ராம்

ஆசி அளிக்கும் வயது

சிறப்பான காலகட்டங்களில் (பிறந்த நாள், திருமண ஆண்டு நாள் (wedding anniversaries)சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்அதாவது "உங்களை ஆசிர்வதிக்க எனக்கு வயசில்லைஆகவே உங்களை வாழ்த்துகிறேன் அல்லது இறைவனை வேண்டுகிறேன்"அந்த ஆசிர்வதிக்கத் தகுதிபெறும் வயசென்ன?60 ஆஅப்படியானால் அந்த தகுதி பெறுவதற்கு அடிப்படை என்ன?எல்லா 60 ஆண்டுகளையும் வழ்ந்தனுபவித்ததாலா?அல்லது நல்ல உடல்நலத்துடன் 60 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் இறைவனால்வரப்பிரசாதம் அளிக்கப்பட்டவர்கள். அவ்வயசை அடைந்தவர்கள் எல்லோரும்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்ஆகவே அவர்கள் ஆசி பெறுவது இறைவனின் ஆசியைப் பெறுவதற்குஇணையானது என்ற அடிப்படை உணர்வினால்தானா?தங்களது கருத்தென்னவோ?இண்டி ராம்

Saturday, April 22, 2006

பேச்சுத் தமிழ் குறுந்தட்டு

2002ல் ஆங்கிலம் மூலம் பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு குறுந்தட்டு தயாரித்து அதை இலவசமாக பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். இப்போது அதை இணையம் வழியாக அளிப்பதற்கானத் தகவலை எனது புதிய வலை தளத்தில் தந்துள்ளேன்.

செல்லவேண்டிய முகவரி

http://indyram.googlepages.com/home

இண்டி ராம்

Wednesday, April 19, 2006

தமிழ் மொழி வளர என்னென்ன செய்யக்கூடாது

> தமிழ்வாழ உழைப்போர்க்குத்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்


எப்படி தமிழை வாழவைப்பது?


தற்கால வாழ்க்கைக்கு தேவையான

பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்

தமிழ் வளரும.

வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.

தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்

வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.

ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.

மத்திய அரசை குறைகூறுவதாலும்

ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்

உண்ணாவிரதம் இருப்பதாலும்

தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்

வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்

தமிழ் மொழி வளராது

மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது

மக்களின் அடிப்படை தேவை

வாழ்க்கை நடத்த பணம்

அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்

தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற

படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்

இண்டி ராம்

Monday, April 17, 2006

வட்டார, ஜாதி, மதத் தமிழில் பேசுவதை தவிர்க்கவேண்டும்

தமிழ் மொழியானது பல வட்டார வழக்குகளின்படி பல ஊர்நகரம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.

தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்

அதில் இதுவும் ஒன்று

அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது

வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்

ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)

ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.

வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.

இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது

ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்

இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்

ஒரு காலத்தில் நான் சொல்வேன்

நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்

1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.

ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.

2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது

வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.

(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)

அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?

இண்டி ராம்

Thursday, April 13, 2006

தமிழ்ப் புத்தாண்டு எண்ணங்கள்

விய அல்லது வியா ஆண்டு வாழ்த்துக்கள்

தான் ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்வதர்க்கு

சில அடையாள சின்னங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமானது "தமிழ்" ஆண்டு, மாத, நாள் கால அளவுகளைக் கடைபிடிப்பது.

இவற்றில் நாட்கள் மாத்திரம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது.

மற்றபடி மாதங்களை அன்றாட வாழ்க்கையில் பல சராசரித்தமிழர்கள்

பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் ஆண்டுப்பெயர்களை நாள்காட்டியைப் பார்த்துதான் அறிந்துகொள்கிறார்கள். கிரிகோரியன் மாதங்கள்தான் அன்றாட வாழ்க்கையில பயன்படுத்துகிறார்கள்.

இந்த வாய்க்கு வராத 60 ஆண்டுகளை எந்த "தமிழன்"

பெயரிட்டான் என்று எனககு் யாராவது தெரிவித்தால் அது எனக்கு பயனளிக்கும்.

இந்த 60 ஆண்டுகள் "தமிழன்" நாரதருடைய குழந்தைகளின் பெயர்களையொட்டி பெயரிடப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். இந்த 60 ஆண்டுகள் பெயர் சுழற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளைப்பற்றி எந்த பழங்காலத் தமிழ் நூலில்

குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டின் பெயர்களை வைத்து 60 வயதுக்கு மேலானவரின் வயதை கணக்கிடமுடியுமா? அல்லது தாத்தா கொள்ளுதாத்தா வயதை நிர்ணயிக்கமுடியுமா?

கிரிகோரியன் காலவரிசைப்படுத்திய நாள்காட்டியை
வைத்துதானே கணக்கிடமுடிகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது
மாட்டுப் பொங்கல் நாளை (ஜனவரி 16ம் தேதியை) திருவள்ளுவர் ஆண்டு புத்தாண்டு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் (கிரிகேரியன்+31=திருவள்ளுவர் ஆண்டு)

ஆனால் திமுக ஆட்சியில் இல்லாததால் மற்றகட்சியினர் அதை சட்டை பண்ணுவதில்லை.

திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் தங்களது திருமண அழைப்பிதளில்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு தைமாதத் திருமணம் என்று குறிப்பிடுவதில்லை.
எந்த திமுக பிரமுகரும் திருவள்ளுவர் ஆண்டு 2031 ல்
"இந்தியாவிலேயே ஒரே ஒரு நபர் தான் பொடா சட்டத்தினை" மீறியதால்
சிறையில் இடப்பட்டார். என்று சொல்லுவதில்லை.

தமிழ் நாட்டில் தெருவில் நட்ந்துபோகும் ஒருவரிடம் இந்த ஆண்டு பெயர் என்ன
என்று கேட்டால் அவருக்கு தெரியுமா?

இதைப் பற்றி தமிழர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

அதே மாதிரி நல்ல நாளை தேர்ந்தெடுப்பதற்கும், துக்க நாளை அனுசரிப்பதற்கும்
யாராவது ஒரு கணிப்பாளரை கேட்கவேண்டிய நிலையில் ஏன் தங்களை வைத்துள்ளார்கள்?

இம்மாதிரி இக்காலத்திற்கு உதவாத நாள் அளவுகளையும் மற்றவனை நாடும் புத்தியையும் தமிழர்கள் தங்களுக்கு அடையாளமாக எவ்வளவு சகாப்தங்களுக் அட்டையாக விடாப் பிடியாக பிடித்து வைத்துக்கொள்வார்களோ. அது ஆண்டவுனுக்குதான் புரியும்.

காலத்திற்கேற்ப தமிழர்கள் மாறவேண்டும் என்று விரும்பும் தமிழன்

இண்டி ராம்