Thursday, January 24, 2008

தற்காலத்திற்குகந்த திருக்குறள் பாடல்களை மட்டும் மனனம் செய்யலாமே

பேங்க் வேலையிலிருந்து ரிடயர்ட் ஆன ஒருவரை சமீபத்தில்
சந்தித்தேன். சும்மா பேசிகிட்டு இருக்கையில் "என்ன பண்றதாக இருக்கிறீங்க"
ன்னு கேட்டேன். ஏதாவது சமூகத் தொண்டு செய்யப்போகிறீங்களான்னு கேட்டேன்
அவர் சொன்னார் "இல்லீங்க திருக்குறளுக்கு ஒரு தெளிவுரை
எழுதலான்னு இருக்கேன்னார்"
மாறிவரும் இந்த காலத்தில் ஒரு தமிழன்னு அல்லது தமிழர் என்று
கூறிக்கொள்வதற்கு என்னென்ன அடையாளங்கள் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா
தமிழ் னு அந்த ழ பிழையில்லாமல் எழுதத் தெரியுனும்
அதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்
இட்லி, தோசை சாம்பாரை விரும்பி சாப்பிடனும்
மேலும் திருக்குறள்னா என்ன என்பதை தெரிஞ்சு வச்சுக்கனும் அவ்வளவுதான்
மத்தபடி தமிழில் சரளமாகப் பேசவேண்டியதில்லை, படிக்கவேண்டியதில்லை
எழுதத் தெரியவேண்டியதில்லை. தற்கால மெட்ரிகுலேஷன் மாணவர்களை
கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆம் தமிழர் என்று சொல்லிக்கொள்வதற்கு திருக்குறள், வள்ளுவன் இதெல்லாம் தெரியணும்
ரிடயர்ட் ஆன பேங்க் ஆபிசர், அரசு அதிகாரிகள், ஜட்ஜ்கள் எல்லோரும்
திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரை, தெளிவுரை அல்லது பதவுரையை
எழுதி அதை ஒரு புத்தகமாகத் தயாரித்து தமது நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் கொடுத்து மகிழவேண்டும் என விழைகிறார்கள்
அது வரவேற்கத் தக்கதுதான்
எனது நண்பருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன்
என்ன அது?
ஆமாம் பலபேர் இந்த காரியத்தை செய்துள்ளார்கள் (பரிமேலழகரிலிருந்து)
நீங்க ஒரு புதுசான காரியத்தை செய்யுங்களேன் என்றேன்
என்னன்னு கேட்டார்
இந்த 1330 குறள்களில் பல வானத்தை பற்றியும், மழையைப் பற்றியும், பூமி
யைப் பற்றியும் இன்னும் பல தற்காலவாழ்க்கைக்கு உதவாதவைதான் உள்ளன
(தயவு செய்து உடனேயே கடுப்படையாதீர்)
இந்த 1330 களை நல்லா வடிகட்டி இந்த காலத்திலும் நம்ம குழந்தைகளுக்கு
சுட்டிகாட்டக்கூடியவைகளை தேர்ந்தெடுத்து (எத்தனை இருக்குமோ எனக்குத் தெரியாது)
(உதாரணமாக
கற்க கசடற கற்ற பின்
நிற்க அதற்குத் தக. (Learn your subjects well and then make use of that knowledge to solve problems)
அவைகளுக்கு மாத்திரம் பதவுரை எழுதுங்களேன்னு சொன்னேன். அதைப் பலர்
விரும்புவர் என்று சொன்னேன்
அவர் சொன்னார் "அதெல்லாம் நல்லா இருக்காதுங்க"
பிறகு நான் சொன்னேன் "நீங்க உங்களுக்கு விருப்பமான விதத்திலேயே செய்யுங்கள்
, உங்கள் முயற்சி நிறைவேற எமது வாழ்த்துக்கள்" னு சொல்லி விடைபெற்றேன்
என் சிற்றறிவுக்கு 1330 ல் பாதிக்கு மேல் இந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு
பிறருக்கு சொல்லி பயன்படுத்த முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.
முக்கியமான சில குறள்களை மனனம் செய்து அன்றாட வாழ்க்கையில்
பயன்படுத்தலாம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க
நல்லா ஆழ்ந்து யோசித்து பதில் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்

Monday, January 14, 2008

தற்காலத் தமிழ்ச் சான்றோர்கள் பட்டியல்

ஒரு காலத்தில் கட்சி சார்பற்ற தமிழ் பேசுபவர்களால் பெரிதும்

மதிக்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்தவர்கள்

1. மறைமலை அடிகள்
2.குன்றக்குடி அடிகளார்
3. கி ஆ பே விஸ்வநாதன்
4. பி டி ராஜன்
5. கல்கி

தற்காலத்தில் தமிழ் பேசுபவர்களால் பெரிதும் மதிக்கப்படும்

கட்சி சார்பற்ற தமிழ்ப் பெரியவர்கள் யார் யார்

என்று தமிழக நண்பர்கள் தெரிவித்தால்


அது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

1. குழந்தைசாமி

2. சுகி செல்வம்

3. சைமன் பாப்பையா

அறிந்தோர் இன்னும் இப் பட்டியலை வளரவைக்கவும்

இண்டி ராம்

Tuesday, January 08, 2008

ரட்டன் டாட்டாவுக்கு எமது வணக்கங்கள்

வரும் வியாழக்கிழமையன்று
டாட்ட நிறுவனத்தார் தமது ஒரு லட்ச ரூபாய் காரை
வெளியிடப்போகிறார்களாம்
இது மகத்தான சாதனைதான்
சமீபகாலங்களில் இந்தியர்கள் தமிழர்கள்
பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், லேரி எல்லிசன்
போன்றோர் மாதிரி பல கோடி மக்களுக்கு பயனளிக்கும்
பிரசித்திமிக்க சாமான்களையோ, மென்பொருளையோ, சேவையையோ வெளிப்படுத்தியுள்ளார்களா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
நாம் பிறர் தயாரித்துகொடுத்த மென்பொருட்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்து
வதில் வல்லவர்கள்தான் (இன்போசிஸ், விப்ரோ, சத்யம்).
டாட்டா நிறுவனத்தின் சாதனை பல கார் தயாரிப்பவர்களின் கவனத்தை
ஈர்த்துள்ளது. இதனால் ஏழைநாடுகளில் உள்ள பலர் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
மேற்கத்திய நாட்டு கார் நிறுவனங்களும் குறைந்த விலையில்
எப்படி கார் தயாரிப்பது என்பதை நினைக்க ஊக்கம் அளித்துள்ளதாம்
ரட்டன் டாட்டா இந்தியாவுக்கு புகழ் சேர்க்கிறார்.
அவருக்கு எமது வணக்கம் தெரிவிக்கிறேன்.
இண்டி ராம்

இந்திய பெரிய மனிதர்களில் ஒருவர் காலமானார்

இன்றைய நியூ யார்க் டைம்ஸில் மறைவு அறிக்கை (is there a better translation

for obituary) பகுதியில் மருத்துவர் பி. டி சேதியின் மறைவைப் ( கடந்த ஞாயிறு )

பற்றி தகவல் தந்துள்ளார்கள் . இவர் "ஜெய்பூர் ஷூ" என்கிற செயற்கை காலை

தயாரித்து பல விருதுகளைப் பெற்றவர். உலகத்திலேயே மிகுந்த பயனளிக்கும்

குறைவான விலையில் செயற்கை "கால்" ஐ தயாரித்த பெருமை இவருக்குறித்ததாகும்

நியூ யார்க் டைம்ஸில் சாதாரணமாக மிகப் பிரபலமடைந்த

வெளிநாட்டினரின் மறைவைத் தான் பிரசுரிக்கிறார்கள்

இவரின் செயற்கை கால்கள் ஆசியா ஆபிரிக்கா அஃப்கானிஸ்தான், தென் அமெரிக்கா

ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் பெரிதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது

கிட்டதட்ட 10 மில்லியன் காலிழந்தவர்களால் இந்த செயற்கை கால்

பயனிக்கப் படுகிறதாம்

இவரது சாகசம் இந்தியாவுக்கே நற்பெயர் கொடுத்துள்ளது

இந்த நல்ல மகாத்மாவின் உயிர் இறைவனடைய பிரார்திக்கிறேன்..

இண்டி ராம்

தகவ்லுக்கு இங்கு செல்லவும்

http://seattlepi.nwsource.com/national/1104ap_obit_sethi.html

Saturday, January 05, 2008

தலையை நிமிர்த்திக்கொள்வதா தாழ்த்திக்கொள்வதா?

வெளிநாடுகளில் இருக்கையில் மற்றொரு தமிழரோ அல்லது
இந்திய வம்சாவளியினரோ நல்லதை செய்தால்
அந்த நபர் நமக்குத் தெரிந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்
நம் உள்ளத்தில் ஒரு திருப்திகரமான உணர்வு எழும்புகிறது.
ஆனால் அதே நபர் ஒரு சமூகத் துரோகமான செயலையோ
அல்லது அறுவருக்கத்தக்க செயலை செய்தாலோ நமது மனம்
கசப்படைகிறது. அவமானமடைகிறோம்.
போன வாரம் இம்மாதிரி இரண்டு செய்திகள் ஒரே சமயத்தில் வெளிவந்தன
இரண்டும் அமெரிக்காவில் பிரபலமான செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸில்
தான் வெளிவந்தன
நற்செய்தி
ஜப்பானில் இந்தியர்களால் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில்
கல்வி பயிலும் சிறு குழந்தைகள் மிக நன்றாகப் படிக்கிறார்கள்களாம்
அறிவுத்திறமை காட்டுகிறார்களாம்.
அங்கு இந்தியக்குழந்தைகளைவிட ஜப்பானியக் குழந்தைகள்
தான் அதிகமாக சேரவிரும்புகின்றனராம்.
ஜப்பானியர்கள், இந்திய தகவல் தொழிநுட்பத்திறனைக் கண்டு
மலைப்படைகிறார்களாம் . எப்படி இந்தியர்கள் இந்தத் துறையில் முன்னேறிவிட்டார்கள்
என்று புரியாமால் குழப்பமடைகிறார்களாம்.
( எனது புரிதலை எனது முன்பொரு மடலில் தங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்)
இரண்டாவது செய்தி
கொடூரமானதுதான்....
ஒரு 57 வயதான சிக்காகோ வாழ் இந்திய வம்சாவளியினர் தனது
22 வயதான மகள் மேலோ அல்லது அவளது கணவன் மேலோ
ஏதோ காரணத்தால் கோபம் கொண்டு வழக்கம் போல்
(இந்தியாவில் சிலர் செய்வதுபோல்) நடு நிசியில் தன் கர்ப்பமடைந்த
பெண்ணின் அபார்ட்மெண்டுக்குள் பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து
தனது மகளையும் மருமகனையும், 3 வய்து பேரனையும் கொன்று தீர்த்துவிட்டார்
அபார்ட்மெண்ட் எரிந்தபோது அவர் 911 கூப்பிடவில்லை
ஒன்றுமே நடக்காதது போல 500 அடிகள் தாண்டி தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த அபார்ட்மெண்ட் காம்ளக்ஸில் தனது மகளைத் தவிர 70 பேர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் எல்லோரும் எப்படியோ சிறுகாயமடைந்து உயிர் தப்பினார்
36 அபார்ட்மெண்ட்கள் எரிந்து நாசமாகின
அமெரிக்காவில் வன்முறைச் செயலைச் செய்பவர்கள் உள்ளனர்
ஆனால் இது மாதிரி ஒரு வயது முதிர்ந்த ஆள் தானே பெற்ற
"கர்ப்பமடைந்த" மகளையும் "3 வயது பேரனையும்" சுட்டுக்கொல்லும்
கொடூர மனதை கொண்டுள்ளவர்களைப் பார்ப்பது அல்லது கேட்பது
அரிதுதான்.
ஆனால் இம்மாதிரிச் செயல்கள் அவ்வப்போது இந்திய செய்தித் தாள்களில்
இப்போதும் படித்தறியலாம்.
(விவாகரத்து, வரதசட்சணை ஜாதி மதக் கலப்பான திருமணங்கள்
பங்காளிச் சண்டை , மனைவிமேல் சந்தேகம் சம்பந்தமான விஷயங்கள்)
பாவம் , தீவினைப் பலன் ஆகியவற்றில் நம்பிக்கை இழந்துவிட்டோமோ?
இண்டி ராம்

Thursday, January 03, 2008

இந்தியர்களின் தகவல் தொழில் நுட்ப சூட்சமத்தின் காரணங்கள் என்னென்ன

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள்

குறிப்பாக தென் இந்தியர்கள்

சப்பானியர்களை விட சாமர்த்தியமாகிவிட்டார்களே

எப்படி?. அது அவர்கள் கல்விகற்கும் விதாமா

என்று சப்பானியரகள் குழம்பி வருகிறார்கள்.

அதைப் பற்றி ஜனவரி 2 ம்தேதி நியூ யார்க டைம்ஸில் ஒரு கட்டுரை

வெளிவந்தது.

அதற்கு காரணம் அவர்களது உயர்தர கல்வி கற்கும் அல்லது

கற்பிக்கும் முறையல்ல கணினியம் தென் இந்திய மனப்போக்குக்கு

மிகுந்த இயல்பான, பொருத்தமான துறை என்பது

பலருக்கு புரியாது

பாம்பின்கால் பாம்புக்குதான் தெரியுமல்லவா

இதோ என் புரிதாலை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

----------------------------------------------------------------------------------------------------------

இது சில வருடங்களுக்கு முன்பு அமீரக தமிழ் இணைய நண்பர்கள்ஆண்டுவிழா ஒட்டிய

சிறப்பு வெளியீட்டில் வெளிவந்தது (2004)

------------------------------------------------------------------------------------------


கணினியமும் தென்னிந்தியர்களும்

(இண்டி ராம்)

கணினியம் என்றால் என்ன என்பதை நான் முதலில் தெளிவுறுத்த விரும்புகிறேன். கணினியத்தை ஆங்கிலத்தில் computing என்று சொல்கிறார்கள். கணினியம் என்றால் கணினி, (computer) இணையம் , (Internet) தகவல் தொழில்நுட்பம்(Information technology) ஆகிய அனைத்து அறிவுகளையும் உட்கொண்டது எனலாம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கணினியத்துக்கும் தென்னிந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) இயல்பாகவே ஓர் இணைப்புள்ளது. மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அதேபோல் தமிழர்களுக்கு கணினியம் பற்றி சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. எந்தத் துறையில் தொழில் புரிந்தாலும் தமிழர்களுக்கு (அடியேன் உட்பட) கணினியத்தின் மேல் ஓர் அலாதிப் பிரியம் உள்ளது என்பது வெளிப்படையான விஷயம். கணினியத்தை அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதைப் பற்றி நான் பல காலமாகச் சிந்தித்து வருகிறேன். சில சமயம் நான் கணினியம் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகக் கூட நினைப்பது உண்டு. கணினியத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஈர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் அலச விரும்புகிறேன்.

கணினியம் மூளை சம்பந்தமான விஷயம்

1. தமிழர்களுக்கு மூளையைப் பயன்படுத்தி செய்கிற காரியங்கள் பிடித்தமானவை. உடம்பை வறுத்தி செய்யும் காரியங்கள் பிடிக்காதவை. இதனால்தனோ என்னவோ பெரும்பாலானத் தமிழர்களுக்கு கைசுத்தமாக வேலை செய்யத்தெரியாது. கணினியம் முளை சம்பந்தமான விஷயமாதலால் அது அவர்களுக்கு அல்வா துண்டுமாதிரி.

தர்க்க உணர்வு

2. தமிழர்களுக்கு தர்க்க உணர்வு (logical sense) இயல்பாகவே உண்டு. a+b=c என்றால் c-b=a என்பது அவர்களுக்கு சொல்லாமலேயே தெரியும். கணினியத்தில் புரண்டு விளையாட உயரிய கணித அறிவு அவ்வளவு தெரிய வேண்டியதில்லை. ஆனால், தர்க்க உணர்வு கட்டாயம் தேவை. அது இருந்தால் தான் தெரிவு தளத்தின் நுட்பத்தை உணர்ந்து செயல்பட முடியும்.

தனிப்பட்ட முறையில் வேலை செய்பவர்கள்

3. தமிழர்களுக்கு ஒன்று சேர்ந்து வேலை செய்து பழக்கமில்லை. இது சாதிக் கேட்டின் விளைவு என்றும் சொல்லலாம். ஒன்றாக இணைந்து சேர்ந்து ஒரு குறிக்கோளை சாதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தானாக செயல்பட் விட்டால் திறமையாகச் செய்து காட்டுவார்கள். கணினிய வேலைகள் ஒவ்வொருவராலும் தானாகச் செயல்படுவதால் அது அவர்களுக்கு பிடித்தமான தொழில்.

செக்கு மாடு மாதிரி உழைக்கத் தயங்குவதில்லை

4. தமிழர்கள் சுவாரசியமில்லாத , நெடுநேரமெடுக்கும் வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. அதனால்தான் வெள்ளைக்காரன்கள் தமிழர்களை அவர்களுக்குத் தேவையான கிளார்க் பட்டாளமாக்கினார்கள். y2k மாதிரி தமிழர்கள் டைப்படிப்பதிலும், ஸ்டெனோ வேலை செய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள். புரோகிராம் எழுதுவது கொஞ்சம் சுவாரசியமில்லாத வேலைதான். ஆனால் சம்பாத்தியம் கிடைக்குதே என்று சமாதானப்படுத்தி வேலை செய்ய தமிழர்கள் தயங்குவதில்லை. மேலைநாட்டவர்களுக்கு எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் y2k மாதிரியான வேலையை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குளுகுளு ஏசி

5. தமிழர்களுக்கு குளுகுளு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அப்பப்ப டீக்குடிச்சு, அல்லது தம்மடிச்சு வேலை செய்வது என்பது பிடித்தமான கனவு வேலை (dream job) விஷயம்.பெரிய கணினிகள் எல்லாம் குளுகுளு ஏசி அறையில் தான் வைக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்தமாதிரி சூழலில் வேலை செய்வது தமிழர்களுக்கு கரும்பு தின்பது மாதிரி தான்.

தன்னறிவு இன்றியமையாது

6. கணினியம் அறிவு ஒரு தொழிற்கூடத்தில் இன்றியமையாது. எனக்கு இது எப்படி பண்றது அது எப்படி பண்றது என்று சிலர் தெரியாமால் கணினியம் தெரிந்தவர்களை நாடிச் செலவார்கள். இது மாதிரி சிலருக்குத் தெரியாத கணினியல் அறிவை தான் பறை சாற்றுவது மனசுக்குள் திருப்தி யளிக்கும் செயல். ஆகவே கணினியம் எக்ஸ்பர்ட் என்பது அவர்களுக்கு பிடித்தமானது.

தானே கற்றறியும் திறமை

7. கணினியத்தில் பெரிய பெரிய செய்முறைப் புத்தகங்களைப் படித்து அதை கிரகித்து அதன் படி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நுணுக்கமாகப் படிக்கும் திறமையும், இமாலயப் பொறுமையும் வேண்டும். அது இயல்பாகவே தமிழர்களுக்கு உண்டு.

தப்பு செய்து அறிவது

8. கணினியத்தில் அடிக்கடி தப்பு செய்து தான் நுணுக்கமாக வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இம்மாதி கற்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும். விடாப்பிடியா உட்கார்ந்து , மணிக்கணக்காக கணினி முன்னால் தவமிருக்கவேண்டும். இதில் தமிழர்கள் மாதிரி யாரும் இருக்கமுடியாது.

நல்லா டிரெஸ் பண்ணவேண்டாம்

9. கணினியத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தோற்றத்தை பற்றி கவலைப்படுவதில்லை. நல்ல தோற்றமுடன் இருக்க பணம் செலவு செய்யவேண்டும். அது தமிழர்களுக்கு வேண்டாத செலவாகத் தோன்றும். ஆகவே, நல்லா டிரெஸ் பண்ணாம போகக் கூடிய வேலையான கணினியம் தொழில் அவர்களுக்கு பிடித்தமான விஷயம்.

நாலு பேரோட பேசிப் பழக வேண்டாம்

10. முன் பின் தெரியாத நாலு பேர்களுடன் பேசிப் பழகி வேலை செய்வது என்பது தமிழர்களுக்கு பாகக்காய் சாப்பிடும் விஷயம். கணினியத் தொழிலில் யார் கூடவும் பேசிப் பழகவேண்டிய அவசியமில்லை. தானுண்டு தன் கணினி உண்டுன்னு தனியாக உழைக்க முடியும்.

ஆகவே, கணினியம் இயல்பாகவே தமிழர்களுக்கு வருகிறது. அது கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதம்தான். ஆண்டவன் ஒவ்வொரு மொழியினர்க்கும் ஒரு இயல்புகளை உள்ளிருத்தி படைக்கிறான். அதுவுமில்லாமல் அவர்கள் தழைக்க அவர்களுக்கேற்ற சில தொழில்களையும் படைத்துள்ளான். கணினியம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில் பிரிவோ?

ஆனால் கணினியம் அறிவு பெற்றிருந்தாலும் அதை வைத்து தானாகவே பணம் பண்ண தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை எப்படி விற்று பணம் பண்ணுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏன்னா எதையும் பணம் பண்ணும் அறிவாக அவர்கள் நினைத்து, செய்து பழக்கமில்லை.சுயமாகத் தொழிலில் முனைப்பு கொள்வது என்ற எண்ணம் மனதில் உதிப்பதே இல்லை.

“பாடி சாப்பிங்க்” னு கேள்வி பட்டிருப்பிங்க. அதாவது கணினியம் தெரிந்த ஆசாமிகளை பண்டப்பொருளாகப் பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் பணப் பலன் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.அதுக்கு மார்க்கெட்டிங்க் தெரியுணும். நாலு பேரிடம் பேசி எதெதுக்கு மார்க்கெட் இருக்கு என்று அலசல் பண்ணும் திறமை இருக்க வேண்டும். அதில் தமிழர்கள் கொஞ்சம் பலகீனமானவர்கள்தான்.

அதே மாதிரி தமிழர்களுக்கு தெரிவு சேகரிக்கும் திறமையில்லை. தெரிவுகளை யாராவது சேகரித்து கொடுத்தால் அவர்களுக்கு அதை விதவிதமாகக் கூறுபோட்டு காண்பிக்கும் திறமையுண்டு. சேகரிக்கும் திறமை இருந்தால் தானே தெரிவை விற்கமுடியும்.

பல புரோகிராமர்களை இணைத்து அவர்களிடமிருந்து வேலை வாங்கி ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும் திறமையும் அவர்களிடமில்லை. ஏன்னா தானாகச் செயல்படத்தான் தெரியும். மற்றவர்களிடம் வேலையை பகிர்ந்துகொள்வதோ, மற்றவர்களி¢டம் வேலையை கொடுத்துவிட்டு அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் திறமையும் இயல்பாகத் தமிழர்களிடம் இல்லை.

புதுப்புது வழிகளில் கணினிய அறிவை பயன்படுத்தி ரிஸ்க் எடுத்து தொழில் துவங்க தமிழர்கள் தைரியத்துடன் செயல் பண்ணவேண்டும். எப்போதுமே ஒரு பாதுகாப்பான வேலையையே தேடித்தேடிப் பழக்கமடைந்துள்ளார்கள்.

கணினியல் அறிவை பெற்று அதை விற்று பணம் பண்ணும் யுக்தியை தமிழர்கள் பெற்றார்களானால் இத்தொழில் மூலம் அவர்கள் முன்னேற பெரும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேண்டும். வருங்காலத் தமிழ் கணினியத் தொழிலாளர்களை அவ்வழியில் செல்ல வழிகாட்ட வேண்டும்.