பேங்க் வேலையிலிருந்து ரிடயர்ட் ஆன ஒருவரை சமீபத்தில்
சந்தித்தேன். சும்மா பேசிகிட்டு இருக்கையில் "என்ன பண்றதாக இருக்கிறீங்க"
ன்னு கேட்டேன். ஏதாவது சமூகத் தொண்டு செய்யப்போகிறீங்களான்னு கேட்டேன்
அவர் சொன்னார் "இல்லீங்க திருக்குறளுக்கு ஒரு தெளிவுரை
எழுதலான்னு இருக்கேன்னார்"
மாறிவரும் இந்த காலத்தில் ஒரு தமிழன்னு அல்லது தமிழர் என்று
கூறிக்கொள்வதற்கு என்னென்ன அடையாளங்கள் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா
தமிழ் னு அந்த ழ பிழையில்லாமல் எழுதத் தெரியுனும்
அதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்
இட்லி, தோசை சாம்பாரை விரும்பி சாப்பிடனும்
மேலும் திருக்குறள்னா என்ன என்பதை தெரிஞ்சு வச்சுக்கனும் அவ்வளவுதான்
மத்தபடி தமிழில் சரளமாகப் பேசவேண்டியதில்லை, படிக்கவேண்டியதில்லை
எழுதத் தெரியவேண்டியதில்லை. தற்கால மெட்ரிகுலேஷன் மாணவர்களை
கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆம் தமிழர் என்று சொல்லிக்கொள்வதற்கு திருக்குறள், வள்ளுவன் இதெல்லாம் தெரியணும்
ரிடயர்ட் ஆன பேங்க் ஆபிசர், அரசு அதிகாரிகள், ஜட்ஜ்கள் எல்லோரும்
திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரை, தெளிவுரை அல்லது பதவுரையை
எழுதி அதை ஒரு புத்தகமாகத் தயாரித்து தமது நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் கொடுத்து மகிழவேண்டும் என விழைகிறார்கள்
அது வரவேற்கத் தக்கதுதான்
எனது நண்பருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன்
என்ன அது?
ஆமாம் பலபேர் இந்த காரியத்தை செய்துள்ளார்கள் (பரிமேலழகரிலிருந்து)
நீங்க ஒரு புதுசான காரியத்தை செய்யுங்களேன் என்றேன்
என்னன்னு கேட்டார்
இந்த 1330 குறள்களில் பல வானத்தை பற்றியும், மழையைப் பற்றியும், பூமி
யைப் பற்றியும் இன்னும் பல தற்காலவாழ்க்கைக்கு உதவாதவைதான் உள்ளன
(தயவு செய்து உடனேயே கடுப்படையாதீர்)
இந்த 1330 களை நல்லா வடிகட்டி இந்த காலத்திலும் நம்ம குழந்தைகளுக்கு
சுட்டிகாட்டக்கூடியவைகளை தேர்ந்தெடுத்து (எத்தனை இருக்குமோ எனக்குத் தெரியாது)
(உதாரணமாக
கற்க கசடற கற்ற பின்
நிற்க அதற்குத் தக. (Learn your subjects well and then make use of that knowledge to solve problems)
அவைகளுக்கு மாத்திரம் பதவுரை எழுதுங்களேன்னு சொன்னேன். அதைப் பலர்
விரும்புவர் என்று சொன்னேன்
அவர் சொன்னார் "அதெல்லாம் நல்லா இருக்காதுங்க"
பிறகு நான் சொன்னேன் "நீங்க உங்களுக்கு விருப்பமான விதத்திலேயே செய்யுங்கள்
, உங்கள் முயற்சி நிறைவேற எமது வாழ்த்துக்கள்" னு சொல்லி விடைபெற்றேன்
என் சிற்றறிவுக்கு 1330 ல் பாதிக்கு மேல் இந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு
பிறருக்கு சொல்லி பயன்படுத்த முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.
முக்கியமான சில குறள்களை மனனம் செய்து அன்றாட வாழ்க்கையில்
பயன்படுத்தலாம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க
நல்லா ஆழ்ந்து யோசித்து பதில் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment