வெளிநாடுகளில் இருக்கையில் மற்றொரு தமிழரோ அல்லது
இந்திய வம்சாவளியினரோ நல்லதை செய்தால்
அந்த நபர் நமக்குத் தெரிந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்
நம் உள்ளத்தில் ஒரு திருப்திகரமான உணர்வு எழும்புகிறது.
ஆனால் அதே நபர் ஒரு சமூகத் துரோகமான செயலையோ
அல்லது அறுவருக்கத்தக்க செயலை செய்தாலோ நமது மனம்
கசப்படைகிறது. அவமானமடைகிறோம்.
போன வாரம் இம்மாதிரி இரண்டு செய்திகள் ஒரே சமயத்தில் வெளிவந்தன
இரண்டும் அமெரிக்காவில் பிரபலமான செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸில்
தான் வெளிவந்தன
நற்செய்தி
ஜப்பானில் இந்தியர்களால் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில்
கல்வி பயிலும் சிறு குழந்தைகள் மிக நன்றாகப் படிக்கிறார்கள்களாம்
அறிவுத்திறமை காட்டுகிறார்களாம்.
அங்கு இந்தியக்குழந்தைகளைவிட ஜப்பானியக் குழந்தைகள்
தான் அதிகமாக சேரவிரும்புகின்றனராம்.
ஜப்பானியர்கள், இந்திய தகவல் தொழிநுட்பத்திறனைக் கண்டு
மலைப்படைகிறார்களாம் . எப்படி இந்தியர்கள் இந்தத் துறையில் முன்னேறிவிட்டார்கள்
என்று புரியாமால் குழப்பமடைகிறார்களாம்.
( எனது புரிதலை எனது முன்பொரு மடலில் தங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்)
இரண்டாவது செய்தி
கொடூரமானதுதான்....
ஒரு 57 வயதான சிக்காகோ வாழ் இந்திய வம்சாவளியினர் தனது
22 வயதான மகள் மேலோ அல்லது அவளது கணவன் மேலோ
ஏதோ காரணத்தால் கோபம் கொண்டு வழக்கம் போல்
(இந்தியாவில் சிலர் செய்வதுபோல்) நடு நிசியில் தன் கர்ப்பமடைந்த
பெண்ணின் அபார்ட்மெண்டுக்குள் பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து
தனது மகளையும் மருமகனையும், 3 வய்து பேரனையும் கொன்று தீர்த்துவிட்டார்
அபார்ட்மெண்ட் எரிந்தபோது அவர் 911 கூப்பிடவில்லை
ஒன்றுமே நடக்காதது போல 500 அடிகள் தாண்டி தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த அபார்ட்மெண்ட் காம்ளக்ஸில் தனது மகளைத் தவிர 70 பேர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் எல்லோரும் எப்படியோ சிறுகாயமடைந்து உயிர் தப்பினார்
36 அபார்ட்மெண்ட்கள் எரிந்து நாசமாகின
அமெரிக்காவில் வன்முறைச் செயலைச் செய்பவர்கள் உள்ளனர்
ஆனால் இது மாதிரி ஒரு வயது முதிர்ந்த ஆள் தானே பெற்ற
"கர்ப்பமடைந்த" மகளையும் "3 வயது பேரனையும்" சுட்டுக்கொல்லும்
கொடூர மனதை கொண்டுள்ளவர்களைப் பார்ப்பது அல்லது கேட்பது
அரிதுதான்.
ஆனால் இம்மாதிரிச் செயல்கள் அவ்வப்போது இந்திய செய்தித் தாள்களில்
இப்போதும் படித்தறியலாம்.
(விவாகரத்து, வரதசட்சணை ஜாதி மதக் கலப்பான திருமணங்கள்
பங்காளிச் சண்டை , மனைவிமேல் சந்தேகம் சம்பந்தமான விஷயங்கள்)
பாவம் , தீவினைப் பலன் ஆகியவற்றில் நம்பிக்கை இழந்துவிட்டோமோ?
இண்டி ராம்
No comments:
Post a Comment