Tuesday, January 08, 2008

இந்திய பெரிய மனிதர்களில் ஒருவர் காலமானார்

இன்றைய நியூ யார்க் டைம்ஸில் மறைவு அறிக்கை (is there a better translation

for obituary) பகுதியில் மருத்துவர் பி. டி சேதியின் மறைவைப் ( கடந்த ஞாயிறு )

பற்றி தகவல் தந்துள்ளார்கள் . இவர் "ஜெய்பூர் ஷூ" என்கிற செயற்கை காலை

தயாரித்து பல விருதுகளைப் பெற்றவர். உலகத்திலேயே மிகுந்த பயனளிக்கும்

குறைவான விலையில் செயற்கை "கால்" ஐ தயாரித்த பெருமை இவருக்குறித்ததாகும்

நியூ யார்க் டைம்ஸில் சாதாரணமாக மிகப் பிரபலமடைந்த

வெளிநாட்டினரின் மறைவைத் தான் பிரசுரிக்கிறார்கள்

இவரின் செயற்கை கால்கள் ஆசியா ஆபிரிக்கா அஃப்கானிஸ்தான், தென் அமெரிக்கா

ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் பெரிதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது

கிட்டதட்ட 10 மில்லியன் காலிழந்தவர்களால் இந்த செயற்கை கால்

பயனிக்கப் படுகிறதாம்

இவரது சாகசம் இந்தியாவுக்கே நற்பெயர் கொடுத்துள்ளது

இந்த நல்ல மகாத்மாவின் உயிர் இறைவனடைய பிரார்திக்கிறேன்..

இண்டி ராம்

தகவ்லுக்கு இங்கு செல்லவும்

http://seattlepi.nwsource.com/national/1104ap_obit_sethi.html

2 comments:

Radha Sriram said...

ஆழ்ந்த அனுதாபங்கள்......இவரை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன்
பகிர்ந்தமைக்கு நன்றி........

வடுவூர் குமார் said...

வாழ்நாள் சாதனையாளர் இவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.