Sunday, December 28, 2008

அமெரிக்காவில் கஷ்ட காலம்

அமெரிக்காவில் கஷ்டகால நிலவரம்


பல வருடங்களுக்கு முன்
அமெரிக்காவில்

ஓர் உயர்நிலைப் பள்ளி
முடிப்பு சான்றிதழ் மட்டும்
இருந்தால் போதும்
ஒரு வேலையில் அமரமுடியும்.
அந்த வேலை செய்து கிடைத்த
வருமானத்தை
வைத்து ஒரு அபார்ட்மெண்ட்
வாடகைக்கு எடுத்து வேறு
தேவையான செலவுகளை
எல்லாம்ஈடு செய்யமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பலவித
மாற்றங்கள்மெரிக்காவிலும் உலகளவிலும் ஏற்பட்டன

1. யாரை எந்த வேலையில்
வைத்தாலும் அவர்களுக்கு
மணிக்கு 300 ரூபாய்
கொடுக்கவேண்டும் (minimum wage)

2. அவர்களுக்கு இலவசமாக
மருத்துவ காப்புறுதி
அளிக்கவேண்டும்

3. அவர்களது வயது கால பணச்
சேமிப்புக்கு
பங்களிக்கவேண்டும்

4. இந்த வரி....... அந்த
வரி....கட்டவேண்டும்
என்றெல்லாம் அமெரிக்காவில்
சட்டமியக்கினார்கள்

இதனால் ஒரு தொழிலாளி எந்த
வேலையை செய்தாலும் மற்ற
நாடுகளில் வசிக்கும்

பணக்காரர்கள் மாதிரி ரொம்ப
சௌகரியமான வாழ்க்கையை நடத்தி
வந்தனர் .

கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில்
பல மாற்றங்கள் ஏற்பட்டன

பலர் ஆங்கிலம் கற்றனர்

ஆங்கிலம் கற்பதால் என்ன
முக்கிய அனுகூலம்
கிடைக்கிறது?

தற்காலத் தேவைக்கு வேண்டிய
எல்லாவிதமான அறிவும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட
புத்தகங்களில் தான் உள்ளன.

கப்பல் மூலம் விரைவில்
சாமான்களை பலநாடுகளுக்கு
அனுப்ப முடிகிறது

ஜெட் விமானங்கள் மூலம் பல
நாடுகளுக்கு சீக்கிரத்தில்
போய் சேரலாம்

மேலும் மிக முக்கியமாக
இண்டர்நெட் வசதி

அமெரிக்காவில் இருப்பது
மாதிரி மற்ற நாடுகளிலும்
அதிகரித்துள்ளது

மேற்கூறிய மாற்றங்களால் மற்ற
நாடுகளில் அமெரிக்க
தொழிலாளர்கள்
செய்யக்கூடியது மாதிரி
அங்குள்ள தொழிலாளிகளும்
வேலைகளை
செய்து பண்டங்களையும்
சேவையைகளையும் அளிக்கமுடிகிறது

அறிவு , மூளையைப் பயன்படுததி
எநத சேவையையும் எந்த
நாட்டிலும் செய்யமுடியும்
என்கிற நிலமை வந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு அரைகுறை
படிக்கத் தெரிந்த
தொழிலாளிக்கு ஒரு மாதத்திற்கு
50 ஆயிரம் ரூபாயாவது (6*8/day) கொடுக்கவேண்டும.

அந்த பணத்தை வைத்து
இந்தியாவில் இரண்டு ஐ ஐ டி
படித்த பொறியியலாளர்களை
வேலைக்கு அமைக்க முடியுமே.

மேலும் இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவ
செலவு கொடுக்கவேண்டாம்

அவர்களுக்கு ஒய்வூதிய பணம்
கொடுக்கவேண்டாம்

அவர்களது ஓய்வுகால மருத்துவ
காப்புறிமைக்கு பணம் கட்டவேண்டாம்

வேலையில்லா இன்ஷுரன்சு வரி
கட்டவேண்டாம்

இதே நிலமைதான் சீனாவிலும்

ஆகவே அமெரிக்காவில் பல
பண்டங்களை தயாரிக்கும்
நிறுவனங்களெல்லாம்
மூடின. அமெரிக்க நிறுவனங்கள்
பல நாடுகளில் பண்டங்களை
தயாரிக்க ஆரம்பித்தனர்

ஆனால் அப்பண்டங்களை
அமெரிக்காவில்தான் விற்றனர்

அமெரிக்க மக்களின் தேவைக்கான
சேவையை மற்றவர்கள் அளிக்க
ஆரம்பித்தனர்

அப்போது அமெரிக்க ஊழியர்கள்
எங்கிருந்து பணம்
பண்ணினார்கள். எவ்வாறு வெளிநாட்டிலிருந்து
வரும் பண்டங்களுக்கும் சேவைக்கும் பணம் கட்டினார்கள்?

கடன் வாங்கிதான்

கடன் அட்டை

வீட்டை அடமானம் வைப்பது

ஃபைணான்ஸ் கம்பெனியிடம் பணம் வாங்குவது

இதற்கெல்லாம் யார் பணம்
கொடுத்தார்கள்

வெளிநாட்டவர்கள். குறிப்பாக பணம் சேமித்த
சீனர்கள், சப்பானியர்கள்

அமெரிக்கவங்கிகள் பலவித கடன்களை பாண்டு
மாதிரியாக்கி எல்லோருக்கும்
விற்றார்கள்

உலகத்தவர் இதையெல்லாம்
புரிந்துகொள்ளாமல்

கடனளித்து திவாலகி
வருகின்றனர்

முன்னேறிவரும் நாடுகள்
முன்னேறிய நாடுகளுக்கு
கடனளித்து திவாலாகி
வருகின்றனர்

இது நிஜமாகவே வினோதமான
நிலமைதான்.

இந்த மாதிரி கடன் வாங்கியே
வாழும் வாழ்க்கையை அமெரிக்க
வங்கிகள்

மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்து பலன் அடைந்தார்கள்

அமெரிக்க வங்கிகள் "தாம் தீம் "
னு கடன் கொடுத்து அரசு, மற்றும்
மக்களின் பணத்தை
விரயப்படுத்தினார்கள்

இம்மாதிரி கட்டுப்பாடு
இல்லாமல் நிறுவனங்கள் செய்து
வந்ததை யாரும்
கண்டுகொள்ளவில்லை

ஆனால் இப்போது என்னவாயிற்று

எல்லோரும் உஷாராகி
வருகின்றனர்

எங்கும் பணமில்லை, எல்லோரும்
பிறருக்கு கடன்கொடுக்க
தயங்குகிறார்கள்.தமது வேலை காணாமல் போய்விடுமோ
என்று பயந்து மக்கள் கடனெடுக்க பயப்படுகிறார்கள்

மத்திய அரசு எக்கச்சக்கமாக
கடன் வாங்கி வங்கிகளை
தாங்கிக் கொண்டு வருகிறது

ஸ்டாக் பாண்ட், ரியல் எஸ்டேட்
மதிப்புகள் மிகக்குறைந்து
வருகின்றன

பலவித சொத்துகளின் மதிப்பு
குறைந்துகொண்டே வருகிறது.

பண்டங்களை வாங்குவார்
குறைந்துள்ளனர்

கடைகள், கம்பெனிகள் பண்டங்களை
விற்கமுடியாமல் தங்களது
நிறுவனங்களை மூடிவிட்டனர்

வேலையில்லாத் திண்டாட்டம்
அதிகரித்து வருகிறது

ஏதாவது கம்பெனி 100 வேலையாட்கள்
வேண்டும் என்று விளம்பரம்
செய்தால்

10000 பேர் குயூவில்
நிற்கின்றனர்

வரிப்பணம்
குறைந்துவிட்டதால் லோக்கல்
அரசுகள் தவிக்கின்றன

10 சதவீத மக்கள் அரசு உணவு
அளிப்பை நம்பியுள்ளனர்

ரோடு வாசிகள் (வீடு இல்லாதோர்) தொகை அதிகரித்து
வருகின்றது.

இந்த நிலமை 2009ல் இன்னும்
மோசமாக இருக்கும்
என்கின்றனர்

ஆகவே இப்போது வேலையில்
உள்ளவர்கள் பணத்தை செலவு
செய்யாமல் சேமித்து
வருகின்றனர்

வேலையினமை கிட்டதட்ட 8%
ஆகிவிட்டது அது 10% ஆகலாம் என்று
யூகிக்கின்றனர்.

ஆகவே இப்போது அமெரிக்காவில்
உயர் படிப்பு உயர் பயிற்சி
பெற்றாலும் வேலை கிடைப்பது
சிரமமாகிவிட்டது. இந்த
நிலமையால் மக்களின் மனோபாவம்,
நடத்தை எல்லாம்
மாறிவருகிறது.

ஒரு காலத்தில் ரோடில் தேனும் பாலும்
ஓடி வந்த அமெரிக்காவில்

வேலையின்மையும் வறுமையும்
அதிகரித்து வருகின்றது

அமெரிக்கர்கள் புதிதாக
தேர்வு செய்யப்பட்ட அதிபர்
ஒபாமா வந்த பிறகு
நிலமை மாறக்கூடும்
என்கிற மிகப் பெரிய
நம்பிக்கையுடன் 2009 ஆண்டு
வருகையை எதிர்நோக்கி
வருகிறார்கள்

இந்தியாவில் அதிக கடன் வாங்கி
அமெரிக்காவில் மேற்படிப்பு
படித்து அமெரிக்கவில்
சம்பாத்தியம் செய்து ஈடு
பண்ணலாம் என்று நினைப்பவர்கள்
உஷாராக இருக்கவேண்டும்

ஏனெனில் வேலை வாய்ப்பு இங்கு
முன்னிருந்தமாதிரி இல்லை

இண்டி ராம்

Thursday, November 20, 2008

யுனித் தமிழில் எழுதுவது பற்றிய பட்டறை அமைப்போம்

கணினியிலும் இணையத்திலும் யூனித்தமிழில் எழுதுவது எளிது.

ஒருவர் என் பக்கம் இருந்தால் பத்து நிமிடங்களில்

அவருக்குத் தேவையான மென்பொருள், எழுத்துருக்களை அவரது கணினியில்

நிறுவி எந்தெந்த கீபோர்ட் பொத்தான்களை அமுக்கினால் எந்தெந்த

தமிழ் எழுத்துக்களை அடிக்கலாம் என்று சொல்லிக்காட்டிவிடிவேன்

தமிழகத்திலுள்ள (தமிழகம் மட்டுமென்ன எல்லா இடங்களிலும்

அதே கதிதான்... தமிழ் மட்டுமென்ன மற்ற இந்திய மொழி பேசுபவர்களின்

நிலமையும் அதே தான்) பெரும்பாலான கல்லூரி படிப்பு படித்தவர்கள்

தமிழில் (தங்களது இந்திய தாய் மொழிகளில்) எழுத விரும்புவதில்லை.

பெரும்பாலோர்க்கு

ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் எழுதுவதற்கு அவசியம் தோணுவதில்லை.

இதற்கு தாங்களெல்லாம் ( அடியேனும் உட்பட) விதிவிலக்குதான்.

இருந்தாலும்

"கணினியிலும் இணையத்திலும் தமிழில் எழுதுவோம்" என்கிற தலைப்பில்

ஒரு வொர்க் சாப் (பட்டறை) வருடத்திற்கு இரண்டு முறை ஒவ்வொரு தமிழக

மாவட்டங்களிலும் (இந்த வ்ருடம் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள்

குட்டிபோட்டிருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவிக்கவும்?).

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் உலக நண்பர்கள்

"நான் உள்ளேன்" அய்யா என்று வெளிவந்து இந்த காரியத்தை

செய்வீர்களா?

பக்கத்திலுள்ள லைப்ரரி ( நூலகம்) அல்லது ஸ்கூல்களில்

( பள்ளிகளில்) இவற்றை நடத்திக்காட்டலாம்

ஒரு மனிதரின் (ஆண், பெண்) ஆள் மனதில் உள்ள எண்ணங்கள்,

ஆக்கபூர்வமான கருத்துக்கள்

ஆலோசனைகள், வாழ்க்கை பயணஅனுபவங்கள் ஆகியவைகள் எல்லாம்

எழுத்துருவம் பெறவேண்டும். அவ்வாறு செய்தால் அது மற்றவர்களின்

அறிவை வளர்க்கும்.

அதை ஒருவரின் தாய்மொழியில்தான் நன்றாக வெளிக்கொண்டுவரமுடியும்

என்று பலர் சொல்லுகின்றனர்

ஆனால் தமிழர்களில் அல்லது மற்ற இந்திய மொழிபேசுபவர்களில்

பெரும்பாலோர் இந்த உண்மையை வெளிப்படுத்திக் காட்டாமால் இருப்பது

ஆச்சரியப்படவைக்கிறது, அந்த கூற்றையும் சந்தேகப் படவைக்கிறது.

ஒரு காலத்தில் " என்ன சார் எந்த ஐடியா இருந்து என்ன பிரயோஜனம்

எனது எழுத்தை எங்கும் பிரசுரிக்க முடியாது.. நூலாக அச்சடிக்க பணம்
ஜாஸ்தியாகும்"

ஆகிய சுய அலசல்கள் நம்முள்தோன்றி நம் உந்து சக்தியை வளரவிடாமல்

தடுத்து வந்தன

ஆனால் இக்காலத்தில் இணையம் வழியாக ஒருவருடைய சொந்த எண்ணங்களை

கருத்துக்களை கோடிக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு முன் வைக்க

வாய்ப்புள்ளதே

இருந்தபோதும் தமிழில் எழுதுபவர்கள், எழுதக்கூடியவர்கள்

எழுத விரும்புபவர்கள் தொகை இன்னும் அதீதமாக வளரவில்லையே

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு இரண்டுதடவை

பட்டறை வைத்து 'எனக்கு எப்படி எழுதுவது

என்பது தெரியாது" என்கிற சாக்கை எடுக்க முயற்சிக்கலாமே

நான் வசிக்கும் இடத்தில் ஆண்டுதோறும் தமிழ் பேசுபவர்கள்

மூன்று தடவை கூடுகிறார்கள்

அச்சமயம் யாராவது கணினியில் அல்லது இணையத்தில் தமிழில் எப்படி எழுதுவது

என்று அறிந்துகொள்ள விரும்பினால் எனது தொலைபேசி மூலம்

தொடர்பு கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை அச்சடித்து

வரவேற்பிடத்தில் போட்டுவிடுகிறேன்

இருந்தாலும் ஒன்று இரண்டு "கால்கள்" தான் வருகின்றன

இது தான் உண்மை நிலமை

ஆனால் நாம் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்

தங்களது கருத்து என்ன

இண்டி ராம்

Friday, May 02, 2008

Spelling mistakes in Tamil/English writings

Spelling words correctly in Tamil and in English writings

Most of us don't read Tamil writings (newspapaers, magazines, Web articles,
blogs) on a regular basis.

It is interesting to note that most of the middle class families in TN
subscribe to only English newspapers.

IN TN there is also the feeling that if you read a Tamil daily, you are
considered not college educated.

Most of the college-educated folks can write or speak on many topics in
English than in Tamil.

Other than having written some letters to their parents in Tamil, most of
them

don't have much experience in writing something on their own (their
opinions, thoughts

feelings or arguments) in Tamil.

(This doesn't apply to those who are good writers in Tamil as well as in
English)

IN my opinion those who can write several page articles in Tamil are a
minority among

Tamil speakers. I maybe wrong but I doubt it..

For the occasional writers of Tamil the issue of spelling of the word can be
problematic

For example in Tamil we have the issue with ன், ண்,ர்,ற்,ல்,ள்

We don't have a simple clean cut word for spelling எழுத்துக் கோர்வை,
எழுத்துக்கோவை

எழுத்துக்கூட்டு, சொல்லியெழுதல்

Can we use the word spell as a verb?

no ..

how do you spell the word? (say it in Tamil?)

We say it in a round about manner

இந்த வார்த்தையின் எழுத்துக்கோர்வை எப்படின்னு சொல்லுங்க

ஒரு சின்ன குழந்தையிடம்

it is easy to ask "how do you spell the word lion?"

Try that in Tamil

ஏன் பையா சிங்கம் என்கிற வார்த்தையின் எழுத்துக்கோர்வையை சொல்லு பார்ப்போம்?

I don't recall I ever having had oral discussion of Tamil spelling in a
class

it was always கோடிட்ட இடத்தை நிரப்பு

However most of us are comfortable with our spellings in English

Yes English spelling is tough similar to that of Tamil

Take for example

budget...budjet
education---educashion, ejucation
College...collage ( yes there is another word)
recently...resently
congratulation..congradualtion, congrajulation
buttock..buttux, buttack

It too can drive us crazy

but for the most part we overcome it by practice

How?

Our eyes get used to seeing the correct spelling while we read English
writings.

So we make it a point to spell it correctly

It is also considered a mark of poor education if you make mistakes in your

spelling in English

More importantly

We have nice spellcheckers in English

These checkers are well integrated with MS Word and MS outlook or outlook
express emails

and I believe some of the Web email clients also offer the spellchecking

TN is supposed to have super duper programmers

Unfortunately I have not seen any spellcheckers that integrate nicely with
MS Word, Outlook or Outlook express

Kural has a spellchecker but you have to do cut and paste and back again

It is not easy to input all the Tamil words

We have the issue of சந்தி

Every word has to have different சந்தி permutations

for example

we have தமிழ்(க்) காப்பாளன், தமிழ்ப் பிரியன் தமிழ்ச் செல்வன்

In addition to the word Tamil we have to have all the சந்திசேர்த்த தமிழ் as
a word

That will certainly make the dictionary file bloated. We can even claim to
have more words

in our dictionary file than any other language in the world!

Most of the standard Tamil- English dictionaries have only about 30,000
unique Tamil words

In the case of English-Tamil dictionaries they may have as many words as
English words

They will just define or cook up multiword equivalents for any English word
and call it an equivalent Tamil expression

On top of all this we have the problem created by the usage of phonetic
Tamil keyboard usage like ( Murasu Anjal)

Here you use the same letter n or shifted n or l or shifted l or r or
shifted r

to produce the letters ன்,ண்,ல்,ள்,ர்,ற்

typos are easily created by pressing the wrong letters in the wrong places

Most of us don't want to invest money to buy a current Tamil-English
dictionary ( like Kiriya's)

We feel that it is our mother tongue and so we should not have to use it

Also, strangely we don't feel so bad when we make spelling mistake in Tamil

as we do when we do so when we write in English ( I wonder why it is so)

Perhaps we may have the feeling

See here I have bothered to write more than 3 lines in Tamil

That itself is an accomplishment. So the readers need to excuse or overlook
my spelling mistakes...

So many dilemmas and thoughts when we think

about spelling mistakes in our Tamil /English writing and our attitude
toward it

( I am going to run my spellchecker before I send this out)

I hope I haven't offended anyone's sentiments by having expressed my
dilemmas about this topic

Indy Ram

Thursday, January 24, 2008

தற்காலத்திற்குகந்த திருக்குறள் பாடல்களை மட்டும் மனனம் செய்யலாமே

பேங்க் வேலையிலிருந்து ரிடயர்ட் ஆன ஒருவரை சமீபத்தில்
சந்தித்தேன். சும்மா பேசிகிட்டு இருக்கையில் "என்ன பண்றதாக இருக்கிறீங்க"
ன்னு கேட்டேன். ஏதாவது சமூகத் தொண்டு செய்யப்போகிறீங்களான்னு கேட்டேன்
அவர் சொன்னார் "இல்லீங்க திருக்குறளுக்கு ஒரு தெளிவுரை
எழுதலான்னு இருக்கேன்னார்"
மாறிவரும் இந்த காலத்தில் ஒரு தமிழன்னு அல்லது தமிழர் என்று
கூறிக்கொள்வதற்கு என்னென்ன அடையாளங்கள் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா
தமிழ் னு அந்த ழ பிழையில்லாமல் எழுதத் தெரியுனும்
அதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்
இட்லி, தோசை சாம்பாரை விரும்பி சாப்பிடனும்
மேலும் திருக்குறள்னா என்ன என்பதை தெரிஞ்சு வச்சுக்கனும் அவ்வளவுதான்
மத்தபடி தமிழில் சரளமாகப் பேசவேண்டியதில்லை, படிக்கவேண்டியதில்லை
எழுதத் தெரியவேண்டியதில்லை. தற்கால மெட்ரிகுலேஷன் மாணவர்களை
கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆம் தமிழர் என்று சொல்லிக்கொள்வதற்கு திருக்குறள், வள்ளுவன் இதெல்லாம் தெரியணும்
ரிடயர்ட் ஆன பேங்க் ஆபிசர், அரசு அதிகாரிகள், ஜட்ஜ்கள் எல்லோரும்
திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரை, தெளிவுரை அல்லது பதவுரையை
எழுதி அதை ஒரு புத்தகமாகத் தயாரித்து தமது நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் கொடுத்து மகிழவேண்டும் என விழைகிறார்கள்
அது வரவேற்கத் தக்கதுதான்
எனது நண்பருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன்
என்ன அது?
ஆமாம் பலபேர் இந்த காரியத்தை செய்துள்ளார்கள் (பரிமேலழகரிலிருந்து)
நீங்க ஒரு புதுசான காரியத்தை செய்யுங்களேன் என்றேன்
என்னன்னு கேட்டார்
இந்த 1330 குறள்களில் பல வானத்தை பற்றியும், மழையைப் பற்றியும், பூமி
யைப் பற்றியும் இன்னும் பல தற்காலவாழ்க்கைக்கு உதவாதவைதான் உள்ளன
(தயவு செய்து உடனேயே கடுப்படையாதீர்)
இந்த 1330 களை நல்லா வடிகட்டி இந்த காலத்திலும் நம்ம குழந்தைகளுக்கு
சுட்டிகாட்டக்கூடியவைகளை தேர்ந்தெடுத்து (எத்தனை இருக்குமோ எனக்குத் தெரியாது)
(உதாரணமாக
கற்க கசடற கற்ற பின்
நிற்க அதற்குத் தக. (Learn your subjects well and then make use of that knowledge to solve problems)
அவைகளுக்கு மாத்திரம் பதவுரை எழுதுங்களேன்னு சொன்னேன். அதைப் பலர்
விரும்புவர் என்று சொன்னேன்
அவர் சொன்னார் "அதெல்லாம் நல்லா இருக்காதுங்க"
பிறகு நான் சொன்னேன் "நீங்க உங்களுக்கு விருப்பமான விதத்திலேயே செய்யுங்கள்
, உங்கள் முயற்சி நிறைவேற எமது வாழ்த்துக்கள்" னு சொல்லி விடைபெற்றேன்
என் சிற்றறிவுக்கு 1330 ல் பாதிக்கு மேல் இந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு
பிறருக்கு சொல்லி பயன்படுத்த முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.
முக்கியமான சில குறள்களை மனனம் செய்து அன்றாட வாழ்க்கையில்
பயன்படுத்தலாம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க
நல்லா ஆழ்ந்து யோசித்து பதில் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்

Monday, January 14, 2008

தற்காலத் தமிழ்ச் சான்றோர்கள் பட்டியல்

ஒரு காலத்தில் கட்சி சார்பற்ற தமிழ் பேசுபவர்களால் பெரிதும்

மதிக்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்தவர்கள்

1. மறைமலை அடிகள்
2.குன்றக்குடி அடிகளார்
3. கி ஆ பே விஸ்வநாதன்
4. பி டி ராஜன்
5. கல்கி

தற்காலத்தில் தமிழ் பேசுபவர்களால் பெரிதும் மதிக்கப்படும்

கட்சி சார்பற்ற தமிழ்ப் பெரியவர்கள் யார் யார்

என்று தமிழக நண்பர்கள் தெரிவித்தால்


அது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

1. குழந்தைசாமி

2. சுகி செல்வம்

3. சைமன் பாப்பையா

அறிந்தோர் இன்னும் இப் பட்டியலை வளரவைக்கவும்

இண்டி ராம்

Tuesday, January 08, 2008

ரட்டன் டாட்டாவுக்கு எமது வணக்கங்கள்

வரும் வியாழக்கிழமையன்று
டாட்ட நிறுவனத்தார் தமது ஒரு லட்ச ரூபாய் காரை
வெளியிடப்போகிறார்களாம்
இது மகத்தான சாதனைதான்
சமீபகாலங்களில் இந்தியர்கள் தமிழர்கள்
பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், லேரி எல்லிசன்
போன்றோர் மாதிரி பல கோடி மக்களுக்கு பயனளிக்கும்
பிரசித்திமிக்க சாமான்களையோ, மென்பொருளையோ, சேவையையோ வெளிப்படுத்தியுள்ளார்களா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
நாம் பிறர் தயாரித்துகொடுத்த மென்பொருட்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்து
வதில் வல்லவர்கள்தான் (இன்போசிஸ், விப்ரோ, சத்யம்).
டாட்டா நிறுவனத்தின் சாதனை பல கார் தயாரிப்பவர்களின் கவனத்தை
ஈர்த்துள்ளது. இதனால் ஏழைநாடுகளில் உள்ள பலர் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
மேற்கத்திய நாட்டு கார் நிறுவனங்களும் குறைந்த விலையில்
எப்படி கார் தயாரிப்பது என்பதை நினைக்க ஊக்கம் அளித்துள்ளதாம்
ரட்டன் டாட்டா இந்தியாவுக்கு புகழ் சேர்க்கிறார்.
அவருக்கு எமது வணக்கம் தெரிவிக்கிறேன்.
இண்டி ராம்

இந்திய பெரிய மனிதர்களில் ஒருவர் காலமானார்

இன்றைய நியூ யார்க் டைம்ஸில் மறைவு அறிக்கை (is there a better translation

for obituary) பகுதியில் மருத்துவர் பி. டி சேதியின் மறைவைப் ( கடந்த ஞாயிறு )

பற்றி தகவல் தந்துள்ளார்கள் . இவர் "ஜெய்பூர் ஷூ" என்கிற செயற்கை காலை

தயாரித்து பல விருதுகளைப் பெற்றவர். உலகத்திலேயே மிகுந்த பயனளிக்கும்

குறைவான விலையில் செயற்கை "கால்" ஐ தயாரித்த பெருமை இவருக்குறித்ததாகும்

நியூ யார்க் டைம்ஸில் சாதாரணமாக மிகப் பிரபலமடைந்த

வெளிநாட்டினரின் மறைவைத் தான் பிரசுரிக்கிறார்கள்

இவரின் செயற்கை கால்கள் ஆசியா ஆபிரிக்கா அஃப்கானிஸ்தான், தென் அமெரிக்கா

ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் பெரிதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது

கிட்டதட்ட 10 மில்லியன் காலிழந்தவர்களால் இந்த செயற்கை கால்

பயனிக்கப் படுகிறதாம்

இவரது சாகசம் இந்தியாவுக்கே நற்பெயர் கொடுத்துள்ளது

இந்த நல்ல மகாத்மாவின் உயிர் இறைவனடைய பிரார்திக்கிறேன்..

இண்டி ராம்

தகவ்லுக்கு இங்கு செல்லவும்

http://seattlepi.nwsource.com/national/1104ap_obit_sethi.html

Saturday, January 05, 2008

தலையை நிமிர்த்திக்கொள்வதா தாழ்த்திக்கொள்வதா?

வெளிநாடுகளில் இருக்கையில் மற்றொரு தமிழரோ அல்லது
இந்திய வம்சாவளியினரோ நல்லதை செய்தால்
அந்த நபர் நமக்குத் தெரிந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்
நம் உள்ளத்தில் ஒரு திருப்திகரமான உணர்வு எழும்புகிறது.
ஆனால் அதே நபர் ஒரு சமூகத் துரோகமான செயலையோ
அல்லது அறுவருக்கத்தக்க செயலை செய்தாலோ நமது மனம்
கசப்படைகிறது. அவமானமடைகிறோம்.
போன வாரம் இம்மாதிரி இரண்டு செய்திகள் ஒரே சமயத்தில் வெளிவந்தன
இரண்டும் அமெரிக்காவில் பிரபலமான செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸில்
தான் வெளிவந்தன
நற்செய்தி
ஜப்பானில் இந்தியர்களால் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில்
கல்வி பயிலும் சிறு குழந்தைகள் மிக நன்றாகப் படிக்கிறார்கள்களாம்
அறிவுத்திறமை காட்டுகிறார்களாம்.
அங்கு இந்தியக்குழந்தைகளைவிட ஜப்பானியக் குழந்தைகள்
தான் அதிகமாக சேரவிரும்புகின்றனராம்.
ஜப்பானியர்கள், இந்திய தகவல் தொழிநுட்பத்திறனைக் கண்டு
மலைப்படைகிறார்களாம் . எப்படி இந்தியர்கள் இந்தத் துறையில் முன்னேறிவிட்டார்கள்
என்று புரியாமால் குழப்பமடைகிறார்களாம்.
( எனது புரிதலை எனது முன்பொரு மடலில் தங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்)
இரண்டாவது செய்தி
கொடூரமானதுதான்....
ஒரு 57 வயதான சிக்காகோ வாழ் இந்திய வம்சாவளியினர் தனது
22 வயதான மகள் மேலோ அல்லது அவளது கணவன் மேலோ
ஏதோ காரணத்தால் கோபம் கொண்டு வழக்கம் போல்
(இந்தியாவில் சிலர் செய்வதுபோல்) நடு நிசியில் தன் கர்ப்பமடைந்த
பெண்ணின் அபார்ட்மெண்டுக்குள் பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து
தனது மகளையும் மருமகனையும், 3 வய்து பேரனையும் கொன்று தீர்த்துவிட்டார்
அபார்ட்மெண்ட் எரிந்தபோது அவர் 911 கூப்பிடவில்லை
ஒன்றுமே நடக்காதது போல 500 அடிகள் தாண்டி தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த அபார்ட்மெண்ட் காம்ளக்ஸில் தனது மகளைத் தவிர 70 பேர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் எல்லோரும் எப்படியோ சிறுகாயமடைந்து உயிர் தப்பினார்
36 அபார்ட்மெண்ட்கள் எரிந்து நாசமாகின
அமெரிக்காவில் வன்முறைச் செயலைச் செய்பவர்கள் உள்ளனர்
ஆனால் இது மாதிரி ஒரு வயது முதிர்ந்த ஆள் தானே பெற்ற
"கர்ப்பமடைந்த" மகளையும் "3 வயது பேரனையும்" சுட்டுக்கொல்லும்
கொடூர மனதை கொண்டுள்ளவர்களைப் பார்ப்பது அல்லது கேட்பது
அரிதுதான்.
ஆனால் இம்மாதிரிச் செயல்கள் அவ்வப்போது இந்திய செய்தித் தாள்களில்
இப்போதும் படித்தறியலாம்.
(விவாகரத்து, வரதசட்சணை ஜாதி மதக் கலப்பான திருமணங்கள்
பங்காளிச் சண்டை , மனைவிமேல் சந்தேகம் சம்பந்தமான விஷயங்கள்)
பாவம் , தீவினைப் பலன் ஆகியவற்றில் நம்பிக்கை இழந்துவிட்டோமோ?
இண்டி ராம்

Thursday, January 03, 2008

இந்தியர்களின் தகவல் தொழில் நுட்ப சூட்சமத்தின் காரணங்கள் என்னென்ன

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள்

குறிப்பாக தென் இந்தியர்கள்

சப்பானியர்களை விட சாமர்த்தியமாகிவிட்டார்களே

எப்படி?. அது அவர்கள் கல்விகற்கும் விதாமா

என்று சப்பானியரகள் குழம்பி வருகிறார்கள்.

அதைப் பற்றி ஜனவரி 2 ம்தேதி நியூ யார்க டைம்ஸில் ஒரு கட்டுரை

வெளிவந்தது.

அதற்கு காரணம் அவர்களது உயர்தர கல்வி கற்கும் அல்லது

கற்பிக்கும் முறையல்ல கணினியம் தென் இந்திய மனப்போக்குக்கு

மிகுந்த இயல்பான, பொருத்தமான துறை என்பது

பலருக்கு புரியாது

பாம்பின்கால் பாம்புக்குதான் தெரியுமல்லவா

இதோ என் புரிதாலை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

----------------------------------------------------------------------------------------------------------

இது சில வருடங்களுக்கு முன்பு அமீரக தமிழ் இணைய நண்பர்கள்ஆண்டுவிழா ஒட்டிய

சிறப்பு வெளியீட்டில் வெளிவந்தது (2004)

------------------------------------------------------------------------------------------


கணினியமும் தென்னிந்தியர்களும்

(இண்டி ராம்)

கணினியம் என்றால் என்ன என்பதை நான் முதலில் தெளிவுறுத்த விரும்புகிறேன். கணினியத்தை ஆங்கிலத்தில் computing என்று சொல்கிறார்கள். கணினியம் என்றால் கணினி, (computer) இணையம் , (Internet) தகவல் தொழில்நுட்பம்(Information technology) ஆகிய அனைத்து அறிவுகளையும் உட்கொண்டது எனலாம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கணினியத்துக்கும் தென்னிந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) இயல்பாகவே ஓர் இணைப்புள்ளது. மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அதேபோல் தமிழர்களுக்கு கணினியம் பற்றி சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. எந்தத் துறையில் தொழில் புரிந்தாலும் தமிழர்களுக்கு (அடியேன் உட்பட) கணினியத்தின் மேல் ஓர் அலாதிப் பிரியம் உள்ளது என்பது வெளிப்படையான விஷயம். கணினியத்தை அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதைப் பற்றி நான் பல காலமாகச் சிந்தித்து வருகிறேன். சில சமயம் நான் கணினியம் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகக் கூட நினைப்பது உண்டு. கணினியத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஈர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் அலச விரும்புகிறேன்.

கணினியம் மூளை சம்பந்தமான விஷயம்

1. தமிழர்களுக்கு மூளையைப் பயன்படுத்தி செய்கிற காரியங்கள் பிடித்தமானவை. உடம்பை வறுத்தி செய்யும் காரியங்கள் பிடிக்காதவை. இதனால்தனோ என்னவோ பெரும்பாலானத் தமிழர்களுக்கு கைசுத்தமாக வேலை செய்யத்தெரியாது. கணினியம் முளை சம்பந்தமான விஷயமாதலால் அது அவர்களுக்கு அல்வா துண்டுமாதிரி.

தர்க்க உணர்வு

2. தமிழர்களுக்கு தர்க்க உணர்வு (logical sense) இயல்பாகவே உண்டு. a+b=c என்றால் c-b=a என்பது அவர்களுக்கு சொல்லாமலேயே தெரியும். கணினியத்தில் புரண்டு விளையாட உயரிய கணித அறிவு அவ்வளவு தெரிய வேண்டியதில்லை. ஆனால், தர்க்க உணர்வு கட்டாயம் தேவை. அது இருந்தால் தான் தெரிவு தளத்தின் நுட்பத்தை உணர்ந்து செயல்பட முடியும்.

தனிப்பட்ட முறையில் வேலை செய்பவர்கள்

3. தமிழர்களுக்கு ஒன்று சேர்ந்து வேலை செய்து பழக்கமில்லை. இது சாதிக் கேட்டின் விளைவு என்றும் சொல்லலாம். ஒன்றாக இணைந்து சேர்ந்து ஒரு குறிக்கோளை சாதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தானாக செயல்பட் விட்டால் திறமையாகச் செய்து காட்டுவார்கள். கணினிய வேலைகள் ஒவ்வொருவராலும் தானாகச் செயல்படுவதால் அது அவர்களுக்கு பிடித்தமான தொழில்.

செக்கு மாடு மாதிரி உழைக்கத் தயங்குவதில்லை

4. தமிழர்கள் சுவாரசியமில்லாத , நெடுநேரமெடுக்கும் வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. அதனால்தான் வெள்ளைக்காரன்கள் தமிழர்களை அவர்களுக்குத் தேவையான கிளார்க் பட்டாளமாக்கினார்கள். y2k மாதிரி தமிழர்கள் டைப்படிப்பதிலும், ஸ்டெனோ வேலை செய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள். புரோகிராம் எழுதுவது கொஞ்சம் சுவாரசியமில்லாத வேலைதான். ஆனால் சம்பாத்தியம் கிடைக்குதே என்று சமாதானப்படுத்தி வேலை செய்ய தமிழர்கள் தயங்குவதில்லை. மேலைநாட்டவர்களுக்கு எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் y2k மாதிரியான வேலையை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குளுகுளு ஏசி

5. தமிழர்களுக்கு குளுகுளு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அப்பப்ப டீக்குடிச்சு, அல்லது தம்மடிச்சு வேலை செய்வது என்பது பிடித்தமான கனவு வேலை (dream job) விஷயம்.பெரிய கணினிகள் எல்லாம் குளுகுளு ஏசி அறையில் தான் வைக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்தமாதிரி சூழலில் வேலை செய்வது தமிழர்களுக்கு கரும்பு தின்பது மாதிரி தான்.

தன்னறிவு இன்றியமையாது

6. கணினியம் அறிவு ஒரு தொழிற்கூடத்தில் இன்றியமையாது. எனக்கு இது எப்படி பண்றது அது எப்படி பண்றது என்று சிலர் தெரியாமால் கணினியம் தெரிந்தவர்களை நாடிச் செலவார்கள். இது மாதிரி சிலருக்குத் தெரியாத கணினியல் அறிவை தான் பறை சாற்றுவது மனசுக்குள் திருப்தி யளிக்கும் செயல். ஆகவே கணினியம் எக்ஸ்பர்ட் என்பது அவர்களுக்கு பிடித்தமானது.

தானே கற்றறியும் திறமை

7. கணினியத்தில் பெரிய பெரிய செய்முறைப் புத்தகங்களைப் படித்து அதை கிரகித்து அதன் படி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நுணுக்கமாகப் படிக்கும் திறமையும், இமாலயப் பொறுமையும் வேண்டும். அது இயல்பாகவே தமிழர்களுக்கு உண்டு.

தப்பு செய்து அறிவது

8. கணினியத்தில் அடிக்கடி தப்பு செய்து தான் நுணுக்கமாக வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இம்மாதி கற்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும். விடாப்பிடியா உட்கார்ந்து , மணிக்கணக்காக கணினி முன்னால் தவமிருக்கவேண்டும். இதில் தமிழர்கள் மாதிரி யாரும் இருக்கமுடியாது.

நல்லா டிரெஸ் பண்ணவேண்டாம்

9. கணினியத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தோற்றத்தை பற்றி கவலைப்படுவதில்லை. நல்ல தோற்றமுடன் இருக்க பணம் செலவு செய்யவேண்டும். அது தமிழர்களுக்கு வேண்டாத செலவாகத் தோன்றும். ஆகவே, நல்லா டிரெஸ் பண்ணாம போகக் கூடிய வேலையான கணினியம் தொழில் அவர்களுக்கு பிடித்தமான விஷயம்.

நாலு பேரோட பேசிப் பழக வேண்டாம்

10. முன் பின் தெரியாத நாலு பேர்களுடன் பேசிப் பழகி வேலை செய்வது என்பது தமிழர்களுக்கு பாகக்காய் சாப்பிடும் விஷயம். கணினியத் தொழிலில் யார் கூடவும் பேசிப் பழகவேண்டிய அவசியமில்லை. தானுண்டு தன் கணினி உண்டுன்னு தனியாக உழைக்க முடியும்.

ஆகவே, கணினியம் இயல்பாகவே தமிழர்களுக்கு வருகிறது. அது கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதம்தான். ஆண்டவன் ஒவ்வொரு மொழியினர்க்கும் ஒரு இயல்புகளை உள்ளிருத்தி படைக்கிறான். அதுவுமில்லாமல் அவர்கள் தழைக்க அவர்களுக்கேற்ற சில தொழில்களையும் படைத்துள்ளான். கணினியம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில் பிரிவோ?

ஆனால் கணினியம் அறிவு பெற்றிருந்தாலும் அதை வைத்து தானாகவே பணம் பண்ண தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை எப்படி விற்று பணம் பண்ணுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏன்னா எதையும் பணம் பண்ணும் அறிவாக அவர்கள் நினைத்து, செய்து பழக்கமில்லை.சுயமாகத் தொழிலில் முனைப்பு கொள்வது என்ற எண்ணம் மனதில் உதிப்பதே இல்லை.

“பாடி சாப்பிங்க்” னு கேள்வி பட்டிருப்பிங்க. அதாவது கணினியம் தெரிந்த ஆசாமிகளை பண்டப்பொருளாகப் பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் பணப் பலன் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.அதுக்கு மார்க்கெட்டிங்க் தெரியுணும். நாலு பேரிடம் பேசி எதெதுக்கு மார்க்கெட் இருக்கு என்று அலசல் பண்ணும் திறமை இருக்க வேண்டும். அதில் தமிழர்கள் கொஞ்சம் பலகீனமானவர்கள்தான்.

அதே மாதிரி தமிழர்களுக்கு தெரிவு சேகரிக்கும் திறமையில்லை. தெரிவுகளை யாராவது சேகரித்து கொடுத்தால் அவர்களுக்கு அதை விதவிதமாகக் கூறுபோட்டு காண்பிக்கும் திறமையுண்டு. சேகரிக்கும் திறமை இருந்தால் தானே தெரிவை விற்கமுடியும்.

பல புரோகிராமர்களை இணைத்து அவர்களிடமிருந்து வேலை வாங்கி ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும் திறமையும் அவர்களிடமில்லை. ஏன்னா தானாகச் செயல்படத்தான் தெரியும். மற்றவர்களிடம் வேலையை பகிர்ந்துகொள்வதோ, மற்றவர்களி¢டம் வேலையை கொடுத்துவிட்டு அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் திறமையும் இயல்பாகத் தமிழர்களிடம் இல்லை.

புதுப்புது வழிகளில் கணினிய அறிவை பயன்படுத்தி ரிஸ்க் எடுத்து தொழில் துவங்க தமிழர்கள் தைரியத்துடன் செயல் பண்ணவேண்டும். எப்போதுமே ஒரு பாதுகாப்பான வேலையையே தேடித்தேடிப் பழக்கமடைந்துள்ளார்கள்.

கணினியல் அறிவை பெற்று அதை விற்று பணம் பண்ணும் யுக்தியை தமிழர்கள் பெற்றார்களானால் இத்தொழில் மூலம் அவர்கள் முன்னேற பெரும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேண்டும். வருங்காலத் தமிழ் கணினியத் தொழிலாளர்களை அவ்வழியில் செல்ல வழிகாட்ட வேண்டும்.