நினைத்ததைசிந்திக்கத் தெரிந்த எல்லா விஷயங்களைப் பற்றியும்எனது தாய் மொழியில் எழுத இயலாமையை உணர்ந்துவிரக்தியடைகிறேன், கடுப்படைகிறேன்.
பல மேற்படிப்பு படித்த தமிழர்கள் மாதிரிஎன்னால் எந்த தலைப்பிலும் ஆங்கிலத்தில்ஒரே நொடியில் நினைத்தவுடன் கடகடவென்றுஎழுதமுடிகிறது.
ஆனால் அவற்றை தமிழில் எழுத முயற்சிக்கும் போதுஅதுவும் தற்கால விஷயங்களை எழுதும் போதுஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்வார்த்தைகள் எனது மனதின் பிடிப்புக்குஎட்டாமல் இருப்பதை நினைத்து கடுப்படைகிறேன்
உதாரணமாக
டிஏக்கு (TA)ஆர் ஏக்கு (RA)
அதாவது டீச்சிங்க் அசிஸ்டன்ட் உதவி விரிவுரையாளர்உதவி ஆராய்ச்சியாளர்
ஸ்டைபண்ட்
கல்வி உதவித் தொகை
கேரியர் (career) ?வேலைத்துறை? அப்படி என்றுஎழுதினால் தமிழர்களுக்குத் என்ன எழுதவிரும்புகிறேன் என்றுதெரியுமா
இது மாதிரி எனது மனதில்ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பற்றி தமிழில்எழுதவேண்டும் என்ற ஆசையிருக்குஆனால் பல தற்கால விஷயங்களைப் பற்றிஎழுத நினைக்கையில் பல தமிழ் வார்த்தைகளைஎப்படியாவது சமாளிச்சு எழுத வேண்டிய அத்தியாவசியத்தை நினைத்துசும்மா இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இல்லாட்டி ஆகா ஓகோ என்று திருக்குறளைப்பற்றியநவீண கருத்துரை எழுதலாம் என்றே தோன்றுகிறது.
எல்சிடி பிளாஸ்மா ஸ்கிரீன்,யுஎஸ்பி டிரைவ்,ஐபாட்,வைபை, குளோனிங், இன்விட்ரோ கருத்தரிப்பு, எரக்டைல் டிஸ்பங்ஷன்டிஜிட்டல் போட்டோகிராபிவிசி (venture capital), entrepreneurship,enterprise software,video game, wi-fi,just in time purchasing, whistle blower,marketing, market economy,high resolution, pictue in picture,storage technologycourier post,digital projection,barbecuing, archiving, scanningtransparency in work place,adjustable mortgage,desalinization technology,hybrid engine..
போன்ற
பலவித தற்காலத்தேவைக்குதவக்குறிய அறிவைதமிழில் எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில்என்னால் எழுத முடியவில்லையேஎன்பதை உணர்ந்து விரக்தியடைகிறேன்
தமிழில் தற்கால அறிவை பரப்பமுடியுமாபகிர்ந்துகொள்ள முடியுமா?அவ்வாறு செய்தால் பல தமிழர்கள்அதைப் புரிந்து பயன்படுத்துவார்களா?என ஐயப்பாடு என்னுள் எழுகிறது
இண்டி ராம்
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆங்கிலம் தாய்மொழி அல்லாத, மற்ற நாடுகளில் (ஜப்பான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில்) தொழில்நுட்ப அறிவு எவ்வாறு கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் எப்படி கற்றுக்கொண்டு சாதிக்கிறார்கள் என்று கண்டறிந்தால் நமக்கும் ஒரு தீர்வு காண வழிகிடைக்கலாம்.
எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்துவது என்பது சற்று கடினம் என்றும் தோண்றுகிறது.
http://www.domesticatedonion.net/blog/?category=technology
வெங்கட் விஞ்ஞான விதயங்களை எழிய தமிழில் தருவகிறார். அவரை முன்மாதிரியாக கொண்டு முயன்று பாருங்கள்.
Post a Comment