சமீபத்தில் சில உறவினர்களின் குடும்பத்தில்
குழந்தைகள் பிறந்ததாகக் கேள்விப்பட்டேன்
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து
பிறகு குழந்தைகளின் பெயர்களைக்கேட்டேன்
புதிய தமிழகக் குழந்தைகளின் பெயர்கள்
ரிஷாவ்
வல்லப்
ராகாவ்
ரோஷினி
மதுமீதா
கீரன்
சுதிர்
சுனில்
இது விதிவிலக்கா
அல்லது பெரும்பாலான தமிழகக் குடும்பங்களில் இந்த (வடக்கத்திய பெயர் சூட்டும்) டிரெண்ட் வளர்ந்துவருகிறதா?
சீனிவாசன்
ராமசாமி
சுப்பரமணியன்
கணபதிபார்வதி
சரஸ்வதி
கணேசன்
ராஜன்
சுசீலா
போன்ற பெயர்கள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன?
இண்டி
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அது சரி, நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்னா பெயர் வைத்துள்ளீர்கள் இண்டி ராம் ?
இப்போ எல்லாம் இந்த மாதிரி பெயர் தான் வைக்கனும் என்கிறார்கள்.. கேட்டால் அப்போ தான் எதிர்காலத்தில் பிள்ளை பெயர் காலத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும் என்கிறார்கள்..
என்னுடைய பையனின் பெயர் : தமிழரசு..
அது சரி, நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்னா பெயர் வைத்துள்ளீர்கள் இண்டி ராம் ?
இப்போ எல்லாம் இந்த மாதிரி பெயர் தான் வைக்கனும் என்கிறார்கள்.. கேட்டால் அப்போ தான் எதிர்காலத்தில் பிள்ளை பெயர் காலத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும் என்கிறார்கள்..
என்னுடைய பையனின் பெயர் : தமிழரசு..
இண்டி:
இதுமாதிரி வடமொழியிலான பெயர்களை தமிழக இந்துக்கள் பெயர் சூட்டுவதில் ஒரு நல்ல காரியமும் உள்ளது.
ஒரு காலத்தில் பெயரை வைத்து குறிப்பிட்ட ஒரு ஆள், குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவன் என அவதானித்து விடலாம்.தற்போது ரொம்ப கடினம். சாதிவெறியர்களுக்கு சங்கடங்களை கொடுக்கும்.
போனவாரம் மயிலாடுதுறையில் பிறந்த எனது மாமா ஒருவரின் பேரன் பெயர் விஷ்யுந் ( என்பதாக ஞாபகம் )
நண்பர் சங்கர்,
எனது பையனின் பெயர்
தமிழக சினிமாநடிகன் பெயர் மாதிரி
விஜய்
பெண்ணின் பெயர்
ஜோதி
நான் கேட்ட கேள்வி
நான் குறிப்பிட்டிருந்த
டிரெண்ட் இப்போது தமிழ் நாட்டில்
உள்ளதா என்பதை
கேட்டறிந்துகொள்ளவே
நண்பர் வாசன் கூறியுள்ள மாதிரி
இந்த டிரெண்ட் இப்போது பரவலாக
உள்ளது போலிருக்கிறது.
இண்டி ராம்
தகவலுக்காக: என்னுடைய பெயர் அருள் குமரன்,என்னுடைய தங்கையின் பெயர் பொன்மலர்,என்னுடைய மகனின் பெய்ர் தமிழ் இனியன் :)
//சீனிவாசன்
ராமசாமி
சுப்பரமணியன்
கணபதிபார்வதி
சரஸ்வதி
கணேசன்
ராஜன்
சுசீலா//
முதலில் இவை எல்லாம் தமிழ்ப் பெயர் இல்லை கிடையா :) தமிழ்நாட்டில் முன்பு அதிகம் புழங்கி வந்த கடவுள்களின் வடமொழி மூலம் உடைய பெயர்கள் அவ்வளவே.
தமிழ்ப் பெயர்கள் என்றால் மாறன், வெற்றி, மலர் என்று எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
உங்கள் பதிவின் தொனியே எரிச்சலூட்டுகிறது. எதை எடுத்தாலும் சாதியைக் கண்டுபிடிக்கிறான் என்றே புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
அரசு, அன்பு, இனியன், கலை - இப்படி எல்லாம் அழகு தமிழில் பெயர் வைத்தால் எப்படி சாதியைக் கண்டுபிடிப்பார்கள்? சாதி அடையாளம் கூடிய சாமிப் பெயரை இட்டுவிட்டுப் பழியைத் தமிழ் போல் போடுவது நியாயம் இல்லை.
Post a Comment