Friday, June 10, 2005

படித்த தமிழர்களின் கையில் ஆங்கிலமும் தமிழும்

பார்த்திருக்கீங்களா

பல கல்லூரி படித்த தமிழர்களால் ஆங்கிலத்தில் சரளமாகஎழுத முடிகிறது.
ஆனால் அவர்களால் அவ்வளவு கடகட வென்று தமிழில்எழுத முடியவில்லை. அதுஏன்?

ஆங்கில மொழியில் பலவித நுணுக்க, துல்லிய விஷய்ங்களை வெளிப்படுத்த
பலவித வார்த்தைகள் உள்ளன.

ஒரு காலத்தில் தமிழில் ஒரே பொருளை குறிப்பதற்கு
பலவித வார்த்தைகள் இருந்தன உதாரணம் மலைஎன்பதற்கு
40 வார்த்தைகள் இருந்தன. ஆனால் பெரும்பாலான வார்த்தைகள்
வழக்கொழிந்துவிட்டன.

தற்சமயத்தில் (50 களிலிருந்து) நமது வாழ்க்கை முறை
மேலை நாட்டினர்களின் வாழ்க்கையப் போல் மாறிவிட்டது.இண்டர்நெட்,
கேபிள் டிவீ, மேலை நாட்டுப் பயனம் வந்த பிறகு நமது
சிந்தனைகளும் மேலைநாட்டினரது மாதிரி ஆகிவிட்டது
இதைஎல்லாம் வெளிப்படுத்த தமிழ் மொழியில் வார்த்தைகள்
இன்னும் உருவாக்கப்படவில்லை. உருவாக்க முயற்சித்தாலும்
அது சாத்தியமில்லை. மக்களும் புதிதாக இயக்கப்பட்ட தமிழ்
வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார்கள்.

மேலும் பெரும்பாலான மத்திய தர, மேல்தர, அரசியல்வாதிகளின்
குழந்தைகள்எல்லாம் ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே
படிக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் இருந்தகாலத்தில் ஆங்கிலம் இவ்வளவு
முக்கியமாகத் தென்படவில்லை. திருச்சி மாவட்டத்தில்
50 60 களில் இரண்டே இரண்டு கான்வெண்ட் ஸ்கூல்கள் தான்
இப்போது எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் முளைத்துவிட்டன.

பலருக்கு ஆங்கிலத்தில் தங்களது கருத்துக்களை சொந்தமாகஎழுதப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழில் அவ்வாறுஎழுதப் பயிற்சி அளிப்பது இல்லை.

கொஞ்சம் தமிழ்எழுதத் தெரிந்தவர்கள் ஹாய்யா கவிதை, சிறுகதைஎழுதி
தமது தமிழ்எழுத்துத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்ஓருவரும்
தேவையான அறிவை தமிழில் படைப்பதில்லை

ஆகவே தமிழ் வெறும் அன்றாட கீழ்மட்ட பேச்சுக்காகவும் அரசியல் மாயாஜாலத்திற்குமே பயன்படுத்தப்படுகிறது.. ஆம் பொழுதுபோக்கு
பட்டிமன்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கில வார்த்தைகள்எல்லாம் வேர் அடிப்படையில் உருவாக்கப்படுவதால்
பலவித வார்த்தை இலக்கணக் கூறுகள்எல்லாம்எல்லோருக்கும் எளிதாகப் புரிகிறது பயன்படுத்த முடிகிறது. பல இந்தியர்களால் ஆங்கிலத்தை லகுவாகக் கையாள முடிகிறது.

ஆங்கிலத்தில்எதிர்மறை வார்த்தைகளைஎளிதில் உருவாக்கலாம்.
அக்ரோநிம்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகிறது
ஏன், தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் எல்லா அக்ரோநிம்களெல்லாம்
ஆங்கில வார்த்தைகளே. தமிழே கிடையாது. உதாரணமாக
சீஎம்,எம்பி,எம்எல்ஏ, டி ஐ ஜி, டிவி, போன்ற, ஆயிரக்கணக்கானவை.
பின் குறிப்பு (பிகு) அதைத் தவிர ஒரு அக்ரோநிம்கூட கிடையாது

ஒரு படித்த தமிழரால்எந்த தலைப்பிலும் ஒரு கட்டுரையை
ஆங்கிலத்தில் உடனேயேஎழுத முடிகிறது ஆனால் தமிழில்எழுத சிரமப்படுகிறார்கள். அதே மாதிரி பேசுவதிலும் ஆங்கிலம் தான்
சரளமாக வருகிறது. இந்த போக்கு தமிழை மட்டுமல்ல மற்ற எல்லா இந்திய மொழிகளையும் வெகுவாகப் பாதிக்கிறது (ஆம் இந்திக்காரர்கள் கூட தம் குழந்தைகள் ஹிங்கிலீஷ் பேசுவதைக் கேட்டு வருத்தப்படுகிறார்கள்)

ஏழை மக்கள், கிராமத்தினரைத் தவிர மற்ற எல்லோரும் ஆங்கிலத்திற்கு
தாவி விட்டார்கள்.

இது அநியாயம், சுய நலமான செயல். இதைஎல்லாம் உணர்ந்து
அரசு தனது பள்ளியில்ஏழை மாணாக்கர்களுக்கும் ஆங்கிலவழி
கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். சீனாவில் அப்படித்தான் இப்போது
செய்கிறார்கள். ஆங்கில மொழிஎல்லோருக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது சீனாவில்.

தற்காலத்தில் மொழிகள் சோர்வடைந்து அழிவதன் காரணம் அம்மொழி பேசுபவர்கள் உள்ளத்தில், மற்றொரு மொழி (ஆங்கிலம்) தன் மொழியை விட வளமானது, வேலை செய்யப் பயன்படும், பலவித அறிவை கொண்டுள்ளதுஎன்ற நம்பிக்கை மேலோங்கிவிடுவதால். யாரும் வற்புறுத்தாமல் அவர்களே
தாங்களும் தங்கள் குழந்த்தைகளும் அம்மொழியை கற்காமலும் பேசாமலும் பயன்படுத்தாமலும் விட்டுவிடுவதால். இந்திய மொழிகள் அந்த வழியிலேயே செல்லுகின்றன .

இதற்கு காரணங்கள்

மெட்ரிகுலேஷன் பள்ளி இண்டர்நெட், கேபிள் டிவி, தக்வல் தொழில் நுட்ப வளர்ச்சி, மேலை நாட்டு பயணம், மேலை நாடு சார்ந்த வேலை வாய்ப்பு, ஆங்கில அறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள். வலிமை வாய்ந்த ஆங்கிலம்.
சுதேசி மொழி வளர்ச்சி அடையாமை (வெறும் பத்திரிகைகள், வலைப்பதிவு, வலை இதழ்கள், சஞ்சிகைகள் வளர்ச்சி மட்டும் மொழியை வளப்படுத்திவிடாது).


இண்டி ராம்

2 comments:

நற்கீரன் said...

http://ta.wikipedia.org/wiki

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இது அநியாயம், சுய நலமான செயல். இதைஎல்லாம் உணர்ந்து
அரசு தனது பள்ளியில்ஏழை மாணாக்கர்களுக்கும் ஆங்கிலவழி
கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். சீனாவில் அப்படித்தான் இப்போது
செய்கிறார்கள். ஆங்கில மொழிஎல்லோருக்கும் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது சீனாவில்.//

super. தமிழைக் குழி தோண்டிப் புதைக்க அருமையான ஆலோசனை. இதையே மாற்றி, நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தமிழை நன்றாகக் கற்பிக்க வேண்டும், அவர்கள் கற்றுக் கொள்ள முன்வரும் வகையில் தமிழை பொருளாதார முக்கியத்துவம் உள்ள மொழியாக மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லையா?